wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கிய, இலக்கணப் புதிர்

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

147

b)

216

c)

130

d)

247

2.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

20

b)

47

c)

18

d)

15

3.

கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் உயிர்மெய் குறில் சொற்களைத் தேர்ந்தெக்கவும்.

a)

தென்றல்

b)

புல்

c)

கூட்டு

d)

தோணி

4.

சரியான இனவெழுத்து இணைகளைத் தேர்வு செய்க.

a)

ங்க

b)

ண்ட

c)

ன்த

d)

ஞ்ச

5.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வலிமிகும் விதிகளில் பிழையானதைத் தெரிவு செய்க.

a)

அந்த, இந்த, எந்த என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

b)

இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)க்குப் பின் வலிமிகும்.

c)

அது, இது, இவை என்னும் சுட்டுப்பெயர்களின் பின் வலிமிகும்.

d)

அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற சரியான விதியைத் தெரிவு செய்க.

கொண்டு சென்றான்

a)

வன்தொடர்க் குற்றியலுகரத்திற்குப் பின் வலிமிகும்.

b)

ந்து, ண்டு, ய்து, என்று முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகாது.

c)

அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகாது.

d)

வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகாது.

7.

கீழ்க்காணும் கூற்றில் கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற இடம் எது?

"நம் எல்லோரையும் முத்து திடலுக்கு வரச்சொன்னான்", என்றான் செல்வம்.

a)

தன்மை , முன்னிலை

b)

படர்க்கை, முன்னிலை

c)

தன்மை, படர்க்கை

d)

முன்னிலை, படர்க்கை

8.

நெடில் உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல் வரிசையைத் தெரிவு செய்க.

a)

ஆவாரம், ஐவர், ஏலக்காய்

b)

மஞ்சள், மல்லிகை, பப்பாளி

c)

ஆரஞ்சு, ஆப்பிள், துளசி

d)

குமுட்டி, தேன், அல்லி

9.

பெயரடை ஏற்று வந்துள்ள வாக்கியத்தை தெரிவு செய்க

a)

அமுதா கட்டியிருந்த அழகான புடவை அனைவரையும் கவர்ந்தது .

b)

செல்வன் உதைத்த பந்து உயரமாகச் சென்றது .

c)

திரு.குமார் வரைந்த ஓவியம் சிற்றப்பாக இருந்தது .

d)

ஆசிரியர் மாணவர்களுக்குக் கூறிய கதை ஈர்ப்புடன் இருந்தது.

10.

கீழ்க்காணும் வாக்கியத்தில் அடிக்கோடிட்ட சொல் குறிக்கும் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க


பாரதியார் தமிழின்பால் கொண்ட பற்றால் ஞானம் பெற்ற கவிஞனாகத் தம்மை உலகிற்கு வெளிக்காட்டினார் .

a)

இரண்டாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

11.

உயிர்மெய் எழுத்துகளில் நெடில் எத்தனை?

a)

125

b)

126

c)

127

d)

128

12.

பின்வரும் சொற்களில் எது வினையடை?

a)

உயரமான

b)

கனிவான

c)

மெதுவாக

d)

குறைவான

13.

"தண்ணீர்" என்ற சொல்லை பிரித்து எழுதுக.

a)

தண்+ணீர்

b)

தண்+நீர்

c)

தண்மை+ நீர்

d)

த+நீர்

14.

உயிர்மெய் எழுத்துகளில் நெடில் எத்தனை?

a)

125

b)

126

c)

127

d)

128

15.

படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.

தம்பி !நீ அந்த போக்கிரிப் பையனோடு ஊர் சுற்றுவதாகக் கேள்விப்பட்டேன். அது நல்லதல்ல ; விட்டுவிடு.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.

b)

வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்.

c)

போகாத விடத்தனிலே போகவேண்டாம்.

d)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம்.

16.

சரியான பொருள் கொண்ட

இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

தாயும் சேயும் - தாயும் மகளும்

b)

எலும்பும் தோலும் -எலும்பு தெரியும்படியாக

c)

ஆடை அணிகலன் - உடையும் நகையும்

d)

நன்மை தீமை - நல்லதும் தீங்கும்

17.

சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியம் எது?

a)

கோபு அந்த கடையில் பழங்கள் வாங்கினான்

b)

கண்ணன் இந்த பாதை வழியாக சென்று கோவிலை அடைந்தான்.

c)

மாலதி தனது வீட்டுப்பாடத்தைச் செய்து காட்டினாள்.

d)

முரளி எந்த பள்ளியில் பயில்கிறான்?

18.

சாரணர் முகாமில் அமைதியாகக் காணப்பட்ட திவேந்திரன் திறமையாக ஒவ்வொரு பயிற்சியையும் செய்த போது _____ அவனது ஆற்றல் வெளிப்பட்டது.

a)

காட்டுத் தீ போல

b)

இலைமறை காய் போல

c)

சூரியனைக் கண்ட பணி போல

d)

குறின் மேலிட்ட விளக்கு போல

19.

சாரணர் முகாமில் அமைதியாகக் காணப்பட்ட திவேந்திரன் திறமையாக ஒவ்வொரு பயிற்சியையும் செய்த போது _____ அவனது ஆற்றல் வெளிப்பட்டது.

a)

காட்டுத் தீ போல

b)

இலைமறை காய் போல

c)

சூரியனைக் கண்ட பணி போல

d)

குறின் மேலிட்ட விளக்கு போல

20.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க

a)

கல்வியறிவு - கல்வி கேள்வி

b)

உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்

c)

தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்

d)

சீரும் சிறப்பும் - அருமை பெருமை

21.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது

b)

B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்

c)

C. கரடு முரடு - தாயும் குழந்தையும்

d)

D. குறை நிறை - எந்தக் காலத்திலும்

22.

______________ சிறந்து விளங்கிய யூ.பி.எஸ். ஆர் மற்றும் பி.எம்.ஆர் மாணவர்களைக் கல்வியமைச்சுப் பாராட்டி விருதுகள் வழங்கியது.

a)

A. ஆடல் பாடல்களில்

b)

B. நன்மை தீமைகளில்

c)

C. கல்வி கேள்விகளில்

d)

D. ஆடை அணிகலன்களில்

23.

கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?


நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

ஒற்றுமையே பலம்

c)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

d)

தனிமரம் தோப்பாகாது

24.

சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

A.அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

b)

B.அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்

c)

C.வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.

d)

D.அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்

25.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :


மண்ணாகி

a)

பூமியாகி

b)

மணலாகி

26.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :


ஒளியாகி

a)

சத்தமாகி

b)

வெளிச்சமாகி

27.

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை எனும் நாலடியர் உணர்த்தும் பொருள் யாது?

a)

நாம் நல்லவர் என ஒருவரை நம்பி அன்பு காட்ட கூடாது

b)

நாம் நல்லவர் என அன்பு காட்டியவர் நல்லவராக இல்லாவிடினும் பிறரிடம் குறைக்கூறக் கூடாது

c)

நாம் யாரையும் நல்லவர் என உடனே நம்பி அன்பு காட்ட கூடாது

d)

நாம் நல்லவர் என அன்பு காட்டியவர் நல்லவராக இல்லாவிடில் அவரைப் பற்றிய குறைகளை பிறரிடம் கூற வேண்டும்

28.

நல்லார் எனத்தாம் எனும் நாலடியாரில் வரும் புல்லிதழ் எனும் சொல்லின் பொருள் யாது

a)

இதழ்

b)

புல்

c)

காய்ந்த இதழ்

d)

புல்லின் இதழ்

29.

நாலடியாரைப் பூர்த்தி செய்க

நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு,

........................................................................

a)

புல்லிதழ் பூவிற்கும் உண்டு

b)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

c)

அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

30.

நாலடியாருக்கு பொருந்திய சூழலைத் தெரிவு செய்க

a)

மாலா தன் நண்பன் நல்லவன் அல்ல எனத் தெரிந்ததும் அவனோடு பழகுவதைத் தவிர்துக் கொண்டாள்.

b)

விஷ்னூ, நல்லவன் என எண்ணி அன்பு காட்டிய அவனுடைய நண்பன் அவனுக்குக் குற்றம் இலைத்தப்போதும் அவனைப் பற்றி பிறரிடம் குறை கூறவில்லை

c)

பவின் குற்றவாளி என அறிந்தும் குமரன் அவனோடு நெருங்கிய நட்பில் இருக்கின்றான்

31.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா- என்பதன் பொருள் என்ன ?

a)

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி

b)

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை

c)

தொன்மையான உலகில் ஒருவர் உளருகிறார்

d)

இவ்வுலகில் நல்லவர் ஒருவர் உளர்ந்து இருந்தால் அவருக்கு

32.

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை என்பதற்குப் பொருந்தும் அடி எது ?

a)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

b)

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

c)

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

d)

தலையாலே தான்தருத லால்.

33.

நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தாந்தருத லால் - என்ற அடி விளக்கும் பொருள் என்ன?

a)

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி

b)

மழை அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கின்றது.

c)

ஒரு நல்லவரால் அனைவரும் தீமை அடைகின்றனர்.

d)

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரைத் தன் தலையில் இளநீராகத் தருவதைப் போல நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.

34.

மூதுரையை நிறைவு செய்க.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

_________________________________________

_________________________________________

a)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்கும் பெய்யும் மழை

b)

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

c)

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்

d)

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாங் கொக்கு

35.

கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற மூதுரையின் முதல் அடியைத் தெரிவு செய்க.


முனியன் சிரமப்பட்டிருக்கும் வேளையில் தேவன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனுக்குப் பணம் கொடுத்து உதவினான். ஆண்டுகள் பல கடந்த பிறகு, தேவனுக்குத் தன் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டு நொடித்துப் போய் வீட்டு மூலையில் உட்கார்ந்திருந்தான். அப்போது சற்றும் எதிர்பாராமல் வந்த முனியன் அவனுக்குப் பணம் தந்து வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்த உதவினான்.

a)

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

b)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

c)

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

d)

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

36.

கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.

a)

ஆறுவது சினம்

b)

இயல்வது கரவேல்

c)

அறம் செய விரும்பு

d)

ஈவது விலக்கேல்

37.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?


சர்வினி : கார்த்திகா நீ ஏன் எப்பொழுதும் உன் அண்டை வீட்டாருக்கு உணவு, துணிமணி போன்றவற்றைக் கொடுத்து உதவுகிறாய்? உனக்கென்று வைத்துக் கொள்ளமாட்டாயா?


கார்த்திகா : அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் அதனால்தான் என்னால் இயன்றதைக் கொடுத்து உதவுகிறேன்.


பூவரசன் : சர்வினி பிறர் கொடுப்பதைத் தடுக்க நினைப்பது தவறு.

a)

ஈவது விலக்கேல்

b)

உடையது விளம்பேல்

c)

அறம் செய விரும்பு

d)

ஊக்கமது கைவிடேல்

38.

பசியென்று வருவோர்க்குப்

புசியென்று தந்தவனைப்

பரமனும் பணிவானடா - அவன்

பக்கத்தில் வருவானடா


மேற்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

ஐயமிட்டு உண்

b)

அறம் செய விரும்பு

c)

ஒப்புர ஒழுகு

d)

ஏற்பது இகழ்ச்சி

39.

"எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?

a)

அச்சம் தவிர்

b)

அறம் செய்ய விரும்பு

c)

ஆண்மை தவறேல்

d)

ஒப்புர வொழுகு

40.

"துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்" சரியான புதிய ஆத்திசூடி?

a)

உடலினை உறுதி செய்

b)

ஓய்தல் ஒழி

c)

உடலினை உறுதி செய்

d)

இளைத்தல் இகழ்ச்சி

41.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்க.

"நான் தவற்றை உணர்ந்து விட்டேன். முன்பே _________ என அறிந்து புலன்கள் ஐந்தையும் அடக்கி நல்ல நெறியில் வாழ்ந்திருந்தால் இப்பொழுது சிறையில் இருக்க தேவையில்லை".

a)

ஐம்பொறி ஆட்சிகொள்

b)

அச்சம் தவிர்

c)

ஓய்தல் ஒழி

d)

உடலினை உறுதி செய்

42.

படங்களுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஈகை திறன்

43.
மாறன் தம்பியின் மேலிருந்த கோபத்தினால் பற்களை ______________ வென கடித்தான்.
a)
பள பள
b)
நற நற
c)
மள மள
d)
தக தக
44.
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
நற நற
b)
தக தக
c)
மள மள
d)
சல சல
45.
வீட்டு வேளைகளை _____________ வென முடித்த மாலதி தாயாரிடன் பாராட்டு பெற்றாள்.
a)
மள மள
b)
தக தக
c)
மட மட
d)
நற நற
46.

சூழலுக்கேற்ப இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.


சூழல்: முகிலனும் வேலனும் மழையில் விளையாடியதால் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகினர்.

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

47.

நாட்டில் பொருளாதர மந்தநிலையால் சந்தையில் பொருள்களின் விலைகள் ___________ வென உயர்வு கண்டன.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

நசநச

d)

வெடவெட

48.

பயங்கரமான பேய்ப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வாணி, எங்கோ ஒரு மூலையில் நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டவுடன் பயத்தால் அவள் உடல் ___________ வென ஆடத் தொடங்கியது.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

நசநச

d)

வெடவெட

49.

உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? (How many Uyir mei letters are there)

a)

216

b)

12

c)

18

d)

247

50.

அப்பா தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வாங்கினார்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு