Worksheetsவலிமிகுதல் படிவம் 2
Total questions: 8
Worksheet time: 4mins
தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ____________________ பின் வலிமிகும்.
அ. ஈகாரம்
ஆ. ஆகாரம்
இ. இகரம்
கனா + கண்டான் =
சேர்த்தெழுதுக
அ. கனாக் கண்டான்
ஆ. கனா கண்டான்
இ. கனாகண்டான்
விழா + கொண்டாட்டம் =
சேர்த்தெழுதுக
அ. விழாக் கொண்டாட்டம்
ஆ. விழா கொண்டாட்டம்
இ. விழாகொண்டாட்டம்
புறா + கூட்டம் =
சேர்த்தெழுதுக
அ. புறா கூட்டம்
ஆ. புறாக் கூட்டம்
இ. புறாக்கூட்டம்
நாதனும் கண்ணனும் பலா தோட்டத்திற்குச் சென்றனர்.
மேற்காணும் வாக்கியம் சரியா தவறா?
அ. சரி
ஆ. தவறு
நேற்று இரவு கண்மணி பயங்கரமான கனாக் கண்டாள்.
மேற்காணும் வாக்கியம் சரியா தவறா?
அ. சரி
ஆ. தவறு
பாட வேளையில் சதாப் பேசிக் கொண்டிருந்த மாணவர்களை ஆசிரியர் கண்டித்தார்.
மேற்காணும் வாக்கியத்தில் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகாரச் சொற்களை அடையாளம் கண்டு கூறுக.
அ. பாட வேளை
ஆ. சதாப் பேசி
இ. பேசிக் கொண்டிருந்த
திருமதி வைதேகி மன அழுத்தத்தைப் போக்க பூங்கவில் உலாச் செல்வார்.
மேற்காணும் வாக்கியத்தில் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகாரச் சொற்களை அடையாளம் கண்டு கூறுக.
அ. அழுத்தத்தைப் போக்க
ஆ. உலாச் செல்வார்
இ. திருமதி வைதேகி
