Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி பழமொழி படிவம் 4/5 /அஞ்சலை

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

திரை கடல் ஓடியும் ........................ தேடு

a)

திறவியம்

b)

திரவியம்

c)

தீறவியம்

d)

தீரவியம்

2.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு எனும் பழமொழியில் பொருள் யாது?

a)

காடு கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.

b)

நாடு கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.

c)

கடல் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.

d)

மனிதனைக் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.

3.

கடுகு சிறுத்தாலும் ............................ போகாது

a)

காறம்

b)

காரம்

c)

கரம்

d)

கறம்

4.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதன் பொருள் யாது?

a)

uகடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காராம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

b)

கடுகு அளவில் பெரியதாகிலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காராம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

c)

uகடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காராம் போகும். அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

d)

uகடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காராம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் பெரிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

5.

ஒற்றுமையில்லாக் குடும்பம் ....................... கெடும்

a)

ஓர்மிக்கக்

b)

ஒருமிக்கக்

c)

ஒருமீக்கக்

d)

ஒருமிக்காக்

6.

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும் என்பதன் பொருள் யாது?

a)

uகுடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடாது.

b)

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்.

c)

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அன்புக்கு வழிவகுத்து விடும்.

d)

மற்ற உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்.

7.

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்பதன் பொருள் யாது?

a)

நாம் கற்றறிந்தது பெரியதே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன

b)

நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன

c)

நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்காதது வேண்டியவை நிறைய இல்லை.

d)

மற்றவர்கள் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன

8.

அகல உழுவதினும் ஆழ உழுவது மேல் என்பதன் பொருள் யாது?

a)

மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்ளாததைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு

b)

மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு

c)

மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே தவறு

d)

ஒன்றைப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு

9.

குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பதன் பொருள் யாது ?

a)

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்.

b)

சம்பாதித்ததை மேலும் விருத்தி செய்து சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்.

c)

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் மேலும் வளரும்

d)

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்யாமல் இருந்தால் குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்.

10.

ஆடிக்கறப்பதை ஆடிக்கற பாடிக்கறப்பதைப் பாடிக்கற என்பதன் பொருள் யாது ?

a)

ஒருவரிடமிருந்து நாம் ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகி அல்லது செயல்பட்டு அதைப் பெறக் கூடாது.

b)

ஒருவரிடமிருந்து நாம் ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகாமல் அதைப் பெற வேண்டும்.

c)

அவரிடம் சென்று கேட்பது அவசியம்

d)

ஒருவரிடமிருந்து நாம் ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகி அல்லது செயல்பட்டு அதைப் பெற வேண்டும்.

11.

பழமொழியில் விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


முற்பகல் செய்யின் ____________________ விளையும்

a)

நற்பகல்

b)

பிற்பகல்

c)

நண்பகல்

12.

பழமொழியில் விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


தன் ________________________ மண்ணுயிரையும் நினை

a)

உயிரைப்போல்

b)

உடலைப்போல்

c)

உறவைப்போல்

13.

பழமொழியை விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


துணை போனாலும் ______ போகாதே

a)

மணை

b)

விணை

c)

பிணை

14.

பழமொழியை விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


சைகை அறியாதவன் _________ அறியாதவன்

a)

சற்றும்

b)

பற்றும்

c)

கைபை

15.

பழமொழியை விடுபட்டச் சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


------------------- கேடு நினைப்பான்

a)

கொடுவான்

b)

கொண்டான்

c)

கெடுவான்

16.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு


குமரன் தான் சாலையில் கண்டெடுத்த நாய்க்குட்டியை அன்போடு வளர்த்தான்

a)

கெடுவான் கேடு நினைப்பான்

b)

சைகை அறியாதவன் சற்றும் அறியாதவன்

c)

தன் உயிரைப்போல் மண்ணுயிரையும் நினை

17.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு


ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்ற குமரனின் மேல் பொறாமை கொண்டு அவனைத் தள்ளிவிட நினைத்த கபிலன் தற்செயலாக கால்வாயில் விழுந்தான்.

a)

கெடுவான் கேடு நினைப்பான்

b)

சைகை அறியாதவன் சற்றும் அறியாதவன்

c)

தன் உயிரைப்போல் மண்ணுயிரையும் நினை

18.

வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.


தன் நண்பன் வங்கியில் கடனுதவி பெறுவதற்குக் குமணன் உதவியதால், பின்னாளில் அவன் நண்பன் கடனைச் செலுத்தாதபோது குமணனுக்குத் துன்பம் ஏற்பட்டது.

a)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

b)

துணை போனாலும் பிணை போகாதே

c)

தன் உயிரைப்போல் மண்ணுயிரையும் நினை

19.

சூழலுக்கு ஏற்ற பழமொழியினைக் கண்டறி?

' ஆடாத ஆட்டம் ஆடினான் இன்று அனுபவிக்கிறான்"

a)

தர்மம் தலை காக்கும்

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

கெடுவான் கேடு நினைப்பான்

d)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

20.

இடைநிலைப்பள்ளிக்குச் சென்றதும் சுமதி முதல் வகுப்பு மாணவ தோழிகளிடம் மட்டும் பேசி பழகி வருகிறாள். அதனால் தான் பரீட்ச்சையில் நல்ல புள்ளிகளை எடுக்கிறாள்

a)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

b)

சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும்.

c)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

d)

துணை போனாலும் பிணை போகாதே

21.

நோய்வாய்ப்பட்டிருந்த கோகிலனுக்கு தாமான் தெராத்தாய் மக்கள் ஒன்றுகூடி பணந்திரட்டி உதவினர். கோகிலனின் தாத்தா அக்காலத்தில் பலருக்கு உதவியதை யாரும் மறக்கவில்லை.

a)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

தர்மம் தலை காக்கும்

d)

கெடுவான் கேடு நினைப்பான்

22.

சிறுவயது முதல் அவன் சேமித்தப் பணம் தான் அவன் அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு உதவியது.

a)

தர்மம் தலை காக்கும்

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

மனக் கவலை பலக் குறைவு

d)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

23.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

--------------------------------------------------------

a)

அவ்வ துறைவது அறிவு

b)

பண்புடை யாளர் தொடர்பு

c)

ஊக்க முடையா னுழை

d)

மேற்சென்று இடித்தற் பொருட்டு

24.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான். பழமொழி?

a)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

b)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

கெடுவான் கேடு நினைப்பான்

25.

நமக்குத் தேவையான செல்வம் ,அறிவு ,அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால் தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

இதனைக் குறிக்கும் பழமொழி எது?

a)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

b)

தர்மம் தலை காக்கும்

c)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

d)

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்

26.

சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப்பெற்று விளங்குவர்.

பழமொழி என்ன?

a)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

b)

தர்மம் தலை காக்கும்

c)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

d)

தன் உயிரைப் போல் மன்னுயிரையும் நினை

27.

உதவுவதில் தவறில்லை ஆனால் உத்திரவாதியாக இருக்கக் கூடாது.

பழமொழி என்ன?

a)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

b)

மனக்கவலை பலக்குறைவு

c)

துணை போனாலும் பிணை போகாதே

d)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

28.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

பழமொழி என்ன?

a)

தர்மம் தலை காக்கும்

b)

தன் உயிரைப் போல் மன்னுயிரையும் நினை

c)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

d)

கெடுவான் கேடு நினைப்பான்

29.

நாம் செய்யும் நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் அடந்தே தீருவோம்

பழமொழி என்ன?

a)

தர்மம் தலை காக்கும்

b)

துணை போனாலும் பிணை போகாதே

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

கெடுவான் கேடு நினைப்பான்

30.

நம் உயிரைப் போற்றுவது போல் பிறரின் உயிரையும் போற்ற வேண்டும்.

பழமொழி என்ன?

a)

துணை போனாலும் பிணை போகாதே

b)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

c)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

d)

தர்மம் தலை காக்கும்