Worksheetstamil mozhi padivam 4
Total questions: 3
Worksheet time: 2mins
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது
இலக்கியம்'' என்றால் என்ன ?
“இலக்கியம்” என்றால் என்ன என்பது பற்றி அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு அறிஞரும் தம் அறிவுக்குட்பட்ட வகையில் பல்வேறு விதமான கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். “இலக்கியம்” பற்றிய இவ்வறிஞர்களது கருத்துக்கள்
‘இலக்கியம்’ என்ற பொருள் நிலையை எந்தளவுக்கு பூரணமாய் புலப்படுத்துகின்றன என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. பொதுவாக நோக்குமிடத்து. யாரிடமாவது இலக்கியம் என்றால் என்ன என்று கேட்கும்போது அவர்கள் தமக்குத் தெரிந்த இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நளவெண்பா போன்றவற்றையுமே இலக்கியம் எனக் கூறுவர். ஆனால், இவை யாவும் இலக்கிய நூல்களுள் சிலவே என்பது அவர்களுக்குத் தெரியாது.
நிலைக்கண்ணாடியில் முன் நிற்கின்றபோது எமது அங்க அசைவுகளையெல்லாம் அக்கண்ணாடி அப்படியே காட்டுகின்றதைப்போல ஒரு சமுதாய மக்களின் வாழ்க்கை முறைகளை அவர்களின் போக்கை, இலக்கை, இலட்சியங்களை அபப்டிப்படியே இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அக்காலம் முதல் (சங்ககாலம் முதல்) இக்காலம் வரை இலக்கியமானது மக்களின் வாழ்க்கை முறைகளையும் அதன் வளர்ச்சிக் கட்டங்களையும் பிரதிபலிப்பனவாகவே இருந்து வந்துள்ளதை நாம் நன்கு அவதானிக்க முடிகிறது.
