NEW
Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 20
Worksheet time: 10mins
குவாந்தான் வட்டாரத்தின் 'செந்தமிழ் விழா' ............................... இன்றிச் சிறப்பாக நடந்து முடிந்தது.
சீரும் சிறப்பும்
உயர்வு தாழ்வு
கள்ளங்கபடு
தங்கு தடை
கடுமையான வெயிலின் காரணத்தால் வளவனின் தோட்டத்தில் இருந்த மிளகாய்ச் செடிகள்.............................. காணப்பட்டன.
அடுக்க ஒடுக்கமாகக்
வாடி வதக்குக்
நாணிக்கோணிக்
வாடி வதங்கிக்
கணவனை இழந்த முகிலரசி பல இன்னல்களுக்கிடையே .............................. இன்றி உழைத்துத் தம் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கிறார்.
ஊண் உறக்கம்
உணவு தூக்கம்
தங்கு தடை
ஈடு இணை
மணிமேகலை தன் அண்ணனின் திருமணத்தை முன்னிட்டு வீட்டின் ..................... சேர்த்துச் சுத்தம் செய்து அழகுப்படுத்தினாள்.
அகமும் புறமும்
உள்ளே வேளியே
உள்ளும் புறமும்
கள்ளங் கபடு
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
வாகனமோட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாகனங்களைச் செலுத்துவதனால் அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன.
சட்டமும் திட்டமும்
அடக்க ஒடுக்கம்
சட்ட திட்டம்
உள்ளும் புறமும்
திருமணத்தன்று அம்மணப்பெண் ........................ மேடையில் நின்றாள்.
நாணிக் கோணியவாறு
சீரும் சிறப்புமாக
அடக்க ஒடுக்கமாக
பணிவுடன்
மங்கையின் சிறந்த தேர்ச்சியைக் கண்ட அவளின் நண்பர்கள் .......................... அவ்வெற்றியைக் கொண்டாடினர்.
தங்கு தடையின்றி
ஈடு இணையற்ற
ஆடிப்பாடியவாறு
சீரும் சிறப்புமாக
கொடுக்கப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும் இணைமொழி யாது ?
வஞ்ச எண்ணம்
ஈடு இணையற்ற
அகமும் புறமும்
தங்கு தடை
கள்ளங்கபடு
சூழலுக்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
பெரும் பணக்காரரான திரு.தமிழ்க்கனல் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் அனைவரும் உதவி வந்தார்.
ஊண் உறக்கம்
ஈடு இணை
உயர்வு தாழ்வு
ஏழை எளியவர்
சிறந்த மல்யுத்த ஜெஃப்ரே நெரோ ஹார்டி பல போட்டிகளில் வென்றிருக்கிறார். இன்றுவரை அவருக்குப் போட்டியாக வேறு யாரும் இல்லை.
சீரும் சிறப்பும்
ஈடு இணை
எடக்கு மடக்கு
ஏட்டிக்குப் போட்டி
கொடுக்கப்பட்ட இணைமொழிக்குப் பொருத்தமான விளக்கம் யாது ?
அடக்க ஒடுக்கம்
வெட்கம்
பிணி
பணிவு
பணிவம்
சரியான விடையைத் தெரிவு செய்க
கள்ளங்கபடு - வஞ்சகத் திட்டம்
உயர்வு தாழ்வு - உயரமும் தாழ்வும்
நோய்நொடி - பிணி
அகமும் புறமும் - மன உணர்வு
நீண்ட நாள்களாகப் பல்வேறு ஏற்பாடுகளை நன்கு திட்டமிட்டுச் செவ்வனே செய்து வந்ததால் இளவரசியின் திருமணம் ................... இல்லாமல் நடந்தேறியது.
சீரும் சிறப்புடன்
தங்கு தடை
ஊண் உறக்கம்
ஈடு இணை
சூழலுக்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
அன்னை மங்களம் தமது கருணை இல்லத்தில் புகலிடம் பெற்றிருந்த அனைவரிடமும் எந்தப் பாகுபாடும் காட்டாமல் அவர்களை அன்பால் அரவணைத்துப் பேணிக் காட்து வந்தார்.
உயர்வு தாழ்வு
கள்ளங்கப்டு
ஈடு இணை
ஏழை எளியவர்
ஆண்டு நிறைவு விழாவில் பள்ளி மாணவர்கள் மேடையில் ....................... கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.
பாராட்டு புகழ்
ஆடிப்பாடிக்
சீரும் சிறப்பும்
நாணிக் கோணிக்
இறைவனை வணங்கும்போது குழந்தைகளைப் போல ........................ இல்லாமல் இருக்க வேண்டும் எனப் பெரியவர் அறிவுரைக் கூறினார்.
நோய் நொடி
கள்ளங் கபடு
உயர்வு தாழ்வு
ஊண் உறக்கம்
அந்தச் சிறந்த நகைச்சுவை நடிகரைக் காண அரங்கின் ...................... இரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருத்தனர்.
வெளியவும் உள்ளேயும்
உள்ளும் புறமும்
அகமும் புறமும்
ஊண் உறக்கமின்றி
சூழலுக்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
இளவரசன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். அவனுக்கு எதிர்காலத்தில் ஒரு தொழிலதிபராக வேண்டுமென்ற அவா. அதனால், நன்கு கல்வி கற்றுத் தன்னுடைய இலட்சியத்தை அடைகிறான். இன்று அனைவரும் போற்றும் அளவுக்கு மேன்மையாக வாழ்கிறான்
சீரும் சிறப்பும்
உயர்வு தாழ்வு
ஈடு இணை
ஆடிப்பாடி
இணைமொழிக்குப் பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஊண் உறக்கம் - வீட்டிற்கு வந்த உறவினர்களை அம்மா மனம் நோகாமல் உபசரித்தார்.
உயர்வு தாழ்வு - மலேசியாவில் மூவின மக்களும் ஒருவருக்கொருவர் மரியாதையோடு பழகுவர்.
நாணிக் கோணி - திருமணத்தில் மணப்பெண் மிகவும் வெட்கப்பட்டு மணவாளன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்
ஆடிப்பாடி - தரன் தன் நண்பர்களுடன் வனவிலங்குக் காப்பகத்திற்குச் சென்று பல விலங்குகளைக் கண்டு மகிழ்ந்தான்.
உலகம் முன்னேறிச் சென்றாலும் இந்தியர்கள் இன்னும் பொருளாதாரத்தில் .......................... உள்ளனர்.
வாடி வதங்கியவர்களாக
ஏழை எளியவர்களாக
காடுக்க ஒடுக்கமானவர்களாக
சீரும் சிறப்புமாக
