NEW
Font size
Worksheetsநான்காம் வகுப்பு-A தமிழ் முதல் பருவத்தேர்வு - 2021-2022
Total questions: 40
Worksheet time: 1hrs 26mins
பின்வரும் பத்தியைப் படித்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி. மன்னவனூர் ஓர் அழகிய மலைக்கிராமம். இனிய காலை வேளை. மழைபெய்து ஓய்ந்திருந்தது. சாலையில் அங்கும் இங்குமாகத் தண்ணீர் நின்றிருந்தது. பஞ்சுப்பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள் வளைந்து நெளிந்து செல்லும் பாதையை மறைத்து மிதந்தபடிச் சென்றன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளில், சிலுசிலுப்பான காற்று கூடவே எழுந்தது. பனைஓலை வேய்ந்த குடிசையில், வட்டநிலா போலச் சிவப்பாக குங்குமப் போட்டு வைத்த அம்மா அறிவுமதி விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தாள். 1. அழகிய மலைக்கிராமத்தின் பெயர் என்ன?
தென்னவனூர்
மன்னவனூர்
தின்னவனூர்
வன்னவனூர்
2. கீழே கொடுக்கப் பட்டுள்ளவற்றுள் எது
வருணனைச் சொல் இல்லை ?
பஞ்சுப்பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள்
பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள்.
சிலுசிலுப்பான காற்று.
குழந்தைகள் சாப்பிட்டனர்.
3. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளில் ____________காற்று கூடவே எழுந்தது .
சலசலப்பான
கலகலப்பான
சிலுசிலுப்பான
படபடப்பான
4. குடிசைவீடு எதனால் வேயப்பட்டிருந்தது?
தென்னங்கீற்று
பனைஓலை
வைக்கோல்
கோரைப்புல்
5. அம்மா அறிவுமதி வைத்திருந்த பொட்டு எதைப்போன்று இருந்தது?
வெண்ணிலா
வட்டநிலா
பிறைநிலா
சிறுநிலா
6.'என்னில் ' என்ற சொல்லின் பொருள் என்ன ?
உனக்குள்
நமக்குள்
எனக்குள்
உலகுக்குள்
7 .' சூழ்ச்சி ' என்பதன் பொருள் என்ன ?
மந்திரம்
தந்திரம்
இகழ்ச்சி
மகிழ்ச்சி
8. ' துளிர் ' என்பதன் பொருள் என்ன ?
பக்க இலை
அடி இலை
இளம் இலை
முதிர் இலை
9 . 'ஓலைக்கொட்டான் ' இச்சொல்லின் பொருள்
ஓலைச்சுவடி
ஓலைக் காற்றாடி
ஓலையில் முடையப்பட்ட சிறு கூடை
மூங்கில் கூடை
10. "குருத்தோலை " இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
குரு + தோலை
குருத் + தோலை
குருத்து + ஓலை
குருத்து + ஆலை
11. சிவப்பிரகாச சுவாமிகள் அவர்கள் எழுதிய நீதிநூலின் பெயர் என்ன?
நீதிநெறி
நன்னெறி
அறநெறி
ஆத்திசூடி
12. நமது தேசிய மரம் எது ?
வாழைமரம்
பனைமரம்
ஆலமரம்
அரசமரம்
13. ' தந்தை சொல் மிக்க ____________' இப் பழமொழியினை நிறைவு செய்க .
விந்தையும் இல்லை
எந்திரம் இல்லை
மந்திரம் இல்லை
தந்திரம் இல்லை
14.. 'ஆலும் வேலும் ___________' இப்பழமொழியினை
நிறைவு செய்க .
காலுக்கு உறுதி
கைக்கு உறுதி
சொல்லுக்கு உறுதி
பல்லுக்கு உறுதி
15. வெள்ளைக் கடலில் கருப்பு முத்து . அது என்ன ?
உளுந்து
கண்
சப்போட்டா
திராட்சை
16. .மண்ணுக்குள்ளே கிடப்பான் , மங்களகரமானவன் . அவன் யார் ?
இஞ்சி
உருளை
கருணை
மஞ்சள்
தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆள்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழலாகும்மே.
17. இந்த செய்யுள் இடம்பெற்றுள்ள நூல் எது?
வெற்றி வேற்கை
நன்னெறி
நீதிநெறி
மூதுரை
18. இப்பாடலின் ஆசிரியர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
அதிவீரராமபாண்டியன்.
ஒளவையார்
திருவள்ளுவர்
19. ஆலமர நிழலில் தங்காதப் படை எது?
யானைப்படை
குதிரைப்படை
தேர்ப்படை
புலிப்படை
20. "ஆல் "இச்சொல்லின் பொருள் என்ன?
ஆலமரம்
அரசமரம்
வேப்பமரம்
புளியமரம்
21. "புரவி" இச்சொல் குறிப்பது எதை?
யானை
சிங்கம்
புலி
குதிரை
22. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணை ஆறு எது ?
வெண்ணாறு
புது ஆறு
கொள்ளிடம்
வைகை
23.. கல்லணையின் நீளம் எத்தனை அடி ?
1080
66
1900
18
24. கல்லணையின் சிறப்புப் பெயர் என்ன ?
சுத்தமான அணை
மகத்தான அணை
தரமான அணை
சிறப்பான அணை
25. தமிழ் அன்னை எந்த நூலை சிலம்பாகத் தன் காலில் அணிந்துள்ளார்.
மணிமேகலை
குண்டலகேசி
வளையாபதி
சிலப்பதிகாரம்
26. கீழ்க் கண்டவற்றுள் எது பனைமரத்தின் உறுப்பு இல்லை .
சில்லாட்டை
சாரை ஓலை
பாளைப்பீலி
விழுது
27.சொல் ஒன்று , பொருள் இரண்டு . கண்டுபிடி .
1. ஆடை நெய்ய உதவுவது ------- 2. திருக்குறள் உலகம் போற்றும் ------------
தறி
நூல்
வண்ணம்
எண்ணம்
28. கிழமைகளில் ஒன்று . உலோகமும் கூட . அது எது ?
பித்தளை
தங்கம்
வெள்ளி
இரும்பு
29. ' அவை ' இச்சொல்லின் இடையில் ஓர்
எழுத்து சேர்த்து பொருள் தரும் புதிய சொல்
உருவாக்குக
அகிவை
அகாவை
அகவை
ஆவை
30 . ' ஓடினர் ' இச்சொல் குறிக்கும் பால் எது ?
பலர்பால்
ஆண்பால்
பெண்பால்
ஒன்றன் பால்
31 . ' மரங்கள் ' இச்சொல் குறிக்கும் பால் எது ?
பலர்பால்
பலவின்பால்
ஆண்பால்
பெண்பால்
32 . ஓர் எழுத்தில் விடையளி:
கண்ணிற்கு இடும் எழுத்து எது ?
கை
மை
பை
தை
33 ."கற்பகத்தரு' என்பது எந்த மரத்திற்கான சிறப்புப் பெயர் ?
ஆலமரம்
அரசமரம்
பனைமரம்
வேப்பமரம்
34 .விஜயநகரத்திற்கு வருகை புரிந்திருந்த அண்டை நாட்டு மன்னர் யார் ?
கிருஷ்ணவர்த்தனர்
விஜயவர்த்தனர்
ஜெயவர்த்தனர்
கவிவர்த்தனர்
35."கணுக்கணுவா' இச்சொல் எவ்வகையைச் சார்ந்தது ?
நேரிணை
எதிரிணை
செரியிணை
அடுக்குத்தொடர்
36. "அல்லும் பகலும்" என்பது எவ்வகைச் சொற்கள்?
நேரிணைச்சொற்கள்
எதிரிணைச் சொற்கள்
செறியிணைச் சொற்கள்
37. முயலின் கவலைக்குக் காரணம் யார்?
புலி
மற்ற விலங்குகள்
ஒட்டகச்சிவிங்கி
சிங்கம்
38." யானைக்கும் பானைக்கும் சரி " கதை உணர்த்தும் நீதி என்ன?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
யானைக்கும் அடி சறுக்கும்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
39 . "பூ + நெய் " என்ற சொல் எதைக் குறிக்கிறது?
நெய்
தேன்
வெண்ணெய்
தயிர்
40. இந்த சிறுதானியத்தின் பெயர் என்ன?
சோளம்
அரிசி
கேழ்வரகு
சாமை
