Worksheetsமுதன்மை வாக்கியம்
Total questions: 2
Worksheet time: 2mins
வாசிப்பு என்பது மொழித்திறன்களில் மூன்றாம் இடத்திலுள்ள முக்கிய திறனாகும். வாசித்தல் என்பது மொழி ரீதியாக படித்தல், மனத்தல் என்ற நேரடி கருத்துக்களை கொண்டுள்ளது. எம்மில் பெரும்பான்மையானோர் வாசி> படி> ஓது என்ற சொற்கள் அனைத்தையும் ஒரே அர்த்தத்துடன் நோக்குவதுண்டு. முதலில் இம் மூன்று சொற்களும் வெவ்வேறு பொருளுடையவை என்பதனை வாசிப்பு என்றால் என்ன என்பதனை வரைவிலக்கணப் படுத்த முன் விளங்க வேண்டும்.
(a)
நமக்குத் தேவையான செய்திகளைப் பனுவல், படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள் போன்ற பல்வேறு வடிவங்களில் பெறுகின்றோம். மின்னஞ்சல் அனுப்புதல், கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி, திரைப்படம் என எல்லாவற்றிற்கும் முன்பதிவு செய்தல், தேர்வு, தேர்தல் போற்றவற்றின் முடிவுகளைப் பெறுதல், நேரில் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதுபோல் இணையவழிக் கலந்துரையாடல் செய்தல், இணைய வகுப்பறைகளில் கற்றுக்கொள்ளுதல், இதழ்களைப் படித்தல், இணையவழி தொலைக்காட்சி பார்த்தல், வணிகம் செய்தல் என இணையத்தின் பயன்பாடு இவ்வளவுதான் என்று வரையறை செய்ய முடியாத அளவுக்கு அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இணையம் என்பது ஆகிவிட்டது.
(a)
