wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விட்டுக் கொடுத்தல்

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நீ தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது உன் தம்பி வேறு ஒளி அலையைப் பார்க்க உன்னிடம் கேட்கிறான். நீ என்ன செய்வாய் ?

a)

நான் எனக்குப் பிடித்த ஒளி அலையைப் பார்ப்பேன்.

b)

தம்பிக்கு வேறு ஒளி அலையைப் பார்க்க அனுமதிப்பேன்.

2.

அப்பா உனக்கு ஒரு கதைப்புத்தகம் வாங்கிக் கொடுக்கிறார். உன் தங்கையும் அப்புத்தகத்தைப் படிக்க விரும்புகிறாள். நீ என்ன செய்வாய் ?

a)

தங்கை படித்து முடித்த பிறகு நான் படிப்பேன்.

b)

தங்கையை நான் படித்து முடிக்கும் வரை காத்திருக்கச் சொல்வேன்.

3.

நீ பள்ளிப் பாடத்தை கணினியில் செய்து கொண்டிருக்கிறாய். உன் அண்ணனும் வேலை விசயமாகக் கணினியைப் பயன்படுத்த விரும்புகிறார். நீ என்ன செய்வாய் ?

a)

நான் கணினியைப் பயன்படுத்தி முடிக்கும் வரை அண்ணனைக் காத்திருக்கச் சொல்வேன்.

b)

அண்ணனின் அலுவல் வேலையை முடிக்க கணினியை விட்டுக் கொடுப்பேன்.

4.

நீ கடைக்குச் சென்று பனிக்கூழ் வாங்கிக் கொண்டிருக்கும் போது உன் தம்பி அங்கு வருகிறான். அவனுக்கும் பனிக்கூழ் வேண்டும் என்று கேட்கிறான். உன்னிடம் வேறு பணம் இல்லை. நீ என்ன செய்வாய் ?

a)

என் பனிக்கூழைத் தம்பிக்குக் கொடுப்பேன்.

b)

அங்கிருந்து ஓடி விடுவேன்.

5.

அப்பாவின் மகிழுந்தில் உன் தம்பி முன் இருக்கையில் அமர விரும்புகிறான். நீ முன் இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். நீ என்ன செய்வாய் ?

a)

நான் மூத்தவன் என்பதால் நான் தான் முன் இருக்கையில் அமர வேண்டும் என்பேன்.

b)

தம்பி அமர முன் இருக்கையை விட்டுக் கொடுப்பேன்.

6.

உன் அப்பா கடையிலிருந்து விளையாட்டு மகிழுந்து வாங்கி வந்துள்ளார். கடையில் ஒரு விளையாட்டு மகிழுந்து மட்டுமே இருந்தது. நீ என்ன செய்வாய்?

a)

சூழலைப் புரிந்து கொண்டு தம்பிக்கு விளையாட்டு மகிழுந்தை விட்டுக் கொடுப்பேன்.

b)

எனக்கு அந்த விளையாட்டு மகிழுந்து வேண்டும் என்று அடம் பிடிப்பேன்.

7.

உன் அம்மா செய்த பலகாரத்தில் ஒன்று மட்டும் மீதம் உள்ளது. உன் தங்கை அதை உண்ண விரும்புகிறாள். நீ என்ன செய்வாய்?

a)

பாதியைப் பிட்டு தங்கைக்குக் கொடுப்பேன்.

b)

தங்கை முழுமையாகப் பலகாரத்தை உண்டு மகிழ விட்டுக் கொடுப்பேன்.

8.

நீ பந்து விளையாடிக் கொண்டிருக்கின்றாய். உன் அக்காவும் பந்து விளையாட விரும்புகிறார். நீ என்ன செய்வாய்?

a)

பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவேன்.

b)

அக்காவிடம் விளையாட பந்தைக் கொடுப்பேன்.