Worksheetsபழமொழி ஆண்டு 3
Total questions: 11
Worksheet time: 6mins
உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்
அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?
தனிமரம் தோப்பாகாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒற்றுமையே பலம
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
உப்புக் கொடுத்தவரை
உப்பு வாங்கியவரை
உணவு கொடுத்தவரை
உணவு வாங்கியவரை
குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?
தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.
சுத்தம் சுகம் தரும்
தனிமரம் தோப்பாகாது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
டைகர் வூட் ஒரு சிறந்த கோல்ப் விளையாட்டாளராகத் திகழ்கிறார்.அவர் சிறுவயது முதலே கோல்ப் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.பல போட்டிகளில் கலந்து தம் திறமையை வளர்த்துக் கொண்டார்.
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறுகக் கட்டி பெருக வாழ்.
ஒற்றுமையே பலம்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பழமொழிக்குப் பொருத்தமான விளக்கம் எது?
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.
எப்போதும் அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் இருக்க வேண்டும்.
உணவளித்தவரை என்றும் மறக்கலாகாது
நம்முடன் அன்பாகப் பழகுபவரை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
"அழுத பிள்ளை பால் குடிக்கும்"
இப்பழமொழியை ஏற்கும் சூழல் யாது?
கண்ணன் சிறந்த மருத்துவர் என்பதால் அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர்.
ரகு தனது 30 வயதுக்குள் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால்; வருமானத்திற்காக இரு வேலை செய்ய தொடங்கினார்.
கோமதி பல கலைகளில் சிறந்து விளங்குவதால் பேரும் புகழுடன் வாழ்கின்றாள்.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"
இந்த பழமொழியின் பொருள் என்ன?
எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில் அவ்வாறு செய்ய இயலாது.
பொருளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.
*சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
