NEW
Font size
Worksheetsஇலக்கியம் படிவம் 3 - இணைமொழி
Total questions: 25
Worksheet time: 13mins
கீழ்க்காணும் சூழலில் கருமையாக்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு மிகப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
செல்வச் செழிப்போடு வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல் வறுமை வந்து துயருற்ற காலத்திலும் கண்ணகி கோவலனுக்கு உறுதுணையாக இருந்தாள்.
உயர்வு தாழ்வு
ஏழை எளியவர்
சீரும் சிறப்பும்
ஈடு இணை
கீழ்க்காணும் வாக்கியத்தில் விடுபட்ட இடத்திற்கு மிகப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
தமயந்தி _________________ மிக்க குடும்பத்தில் பிறந்தாள். அவள் நிடத நாட்டு மன்னனான நளனை மணந்தாள்.
ஏழை எளியவர்
ஊண் உறக்கம்
சீரும் சிறப்பும்
அடக்க ஒடுக்கம்
விடுபட்ட இடத்தில் ஏற்புடைய இணைமொழியைத் தெரிவு செய்க.
முற்றிய கதிர் தரையை நோக்கி வளரும். அது போல முதிர்ச்சியடைந்த அறிவாற்றல் உள்ளவர்கள் _________________ நிறைந்தவர்களாக இருப்பர்.
ஏழை எளியவர்
ஊண் உறக்கம்
சீரும் சிறப்பும்
அடக்க ஒடுக்கம்
கொடுக்கப்பட்ட உரையாடலில் காலி இடத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
ஈடு இணை
ஏழை எளியவர்
அடக்க ஒடுக்கம்
சீரும் சிறப்பும்
கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
ஊண் உறக்கம்
நாணிக் கோணி
ஏழை எளியவர்
வாடி வதங்கி
கடையேழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் கொடைக் குணத்திற்கு _____________ இன்றுவரை யாரும் இலர்.
ஈடு இணை
உயர்வு தாழ்வு
கள்ளங் கபடு
ஏழை எளியவர்
கயல்விழி தன் தந்தையின் தியாகத்திற்கு ______________ இல்லை என்று உணர்ந்து, அவரை என்றும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உறுதி பூண்டாள்.
ஊண் உறக்கம்
உள்ளும் புறமும்
ஈடு இணை
சீரும் சிறப்பும்
இன்றைய இக்கட்டான நிலையில் ___________ பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி விடக் கூடாது என்பதற்காகப் பிரதமர் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
சீரும் சிறப்பும்
உயர்வு தாழ்வு
நோய் நொடி
ஏழை எளியவர்
'கோவிட் 19' தொற்றுக் கண்டவர்களுக்குத் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது சிகிச்சையளித்துவரும் மருத்துவப் பணியாளர்களின் சேவைக்கு ______________ இல்லை.
உயர்வு தாழ்வு
ஈடு இணை
ஊன் உறக்கம்
கள்ளங் கபடு
வேலையிழந்து தவிக்கும் ___________________ மக்களுக்கு அரசாங்கம் பல வழிகளில் நிதியுதவிகளையும் பொருளுதவிகளையும் வழங்கி வருகிறது.
கள்ளங் கபடு
உயர்வு தாழ்வு
அடக்க ஒடுக்கம்
ஏழை எளியவர்
இன்றைய இக்கட்டான நிலையில் அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் சட்ட திட்டங்களைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய காவல் துறையினர் __________ இல்லாமல் இரவு பகலாகப் பணியாற்றுகின்றனர்.
ஊண் உறக்கம்
சட்ட திட்டம்
கள்ளங் கபடு
அடக்க ஒடுக்கம்
தாயின் அன்பிற்கு _________________ இவ்வுலகில் வேறு எதையும் ஒப்பிட்டுக் காட்ட முடியாது எனக் கூறித் தன் உரையை முடித்தார் தாயரம்மா.
அடக்க ஒடுக்கமாக
ஈடு இணையாக
ஊண் உறக்கமாக
சீரும் சிறப்புமாக
இந்நாட்டில் வறுமையை ஒழித்து, பொருளாதாரத்தில் நலிவுற்றிருக்கும் மக்கள் நல்வாழ்வு பெற பாடுபடுவதே, தம் அரசாங்கத்தின் தலையாய நோக்கம் எனப் பிரதமர் சூளுரைத்தார்.
ஈடு இணை
ஊண் உறக்கம்
அடக்க ஒடுக்கம்
ஏழை எளியவர்
காட்டில் இலக்குவன் ________________ இன்றி தன் அண்ணனான இராமனையும் அண்ணி சீதையையும் இரவு பகலாகப் பாதுகாத்து வந்தான்.
ஈடு இணை
ஊண் உறக்கம்
அடக்க ஒடுக்கம்
ஏழை எளியவர்
கீழ்க்காணும் வாக்கியத்தில் இணைமொழி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நம் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற அளவிலான ஊண் உறக்கம் அவசியம்.
தானப்பன் தம் குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்காக ஊண் உறக்கம் இன்றி உழைக்கிறார்.
தெய்வத்திற்கு ஈடான ஊண் உறக்கம் அற்ற பிள்ளைகள் தீய வழிகளில் செல்லாதிருக்க அவர்களிடம் பெற்றோர் அன்பு செலுத்த வேண்டும்.
ஊண் உறக்கம் இன்றி உடலை வருத்தி வேலை செய்வது பல நோய்கள் வர காரணமாக இருக்கின்றது.
வாழ்க்கையில் எல்லா நலன்களையும் கொண்டு _______________ வாழ வேண்டும் என்று அப்பெரியவர் என்னை வாழ்த்தினார்.
அடக்க ஒடுக்கமாக
ஈடு இணையாக
ஊண் உறக்கமாக
சீரும் சிறப்புமாக
கீழ்க்காணும் வாக்கியங்களில் மிகப் பொருத்தமான இணைமொழியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மேற்கல்வி கற்பதற்குப் பணம் அடக்க ஒடுக்கமாக இல்லாமல் முகுந்தன் பொருளகத்தில் கடன் பெறத் தீர்மானித்தான்.
அடக்க ஒடுக்கமாக உழைத்த நகுலன் வாழ்க்கையில் சிரந்து விளங்கினான்.
பள்ளியில் பரிசளிப்பு விழா அடக்க ஒடுக்கமாகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
அப்பெரியவர் முன் அனைவரும் அடக்க ஒடுக்கமாக நின்று அவரின் ஆசியைப் பெற்றனர்.
கீழ்க்காணும் இணைமொழிக்கான ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
ஏழை எளியவர்
மேன்மை
வறியவர்
ஒப்பு
பணிவு
நாம் உடல்நலத்துடனும் மனநலத்துடனும் வாழ ______________ அளவோடு இருக்க வேண்டியது மிக அவசியம்.
ஈடு இணை
ஊண் உறக்கம்
அடக்க ஒடுக்கம்
ஏழை எளியவர்
காந்தியடிகள் ___________ இல்லா சேவைகள் செய்து மகாத்மாவாகத் திகழ்கிறார்.
ஈடு இணை
ஊண் உறக்கம்
அடக்க ஒடுக்கம்
ஏழை எளியவர்
ஒருவர் _____________ ஆக இருக்கிறார் என்பதற்காக அவர் துணிவில்லாதவர் என்று நாம் எண்ணிவிடக் கூடாது.
உயர்வு தாழ்வு
ஈடு இணை
ஊண் உறக்கம்
அடக்க ஒடுக்கம்
'கோவிட் 19' பெருந்தொற்றுக் காரணமாகப் பலரின் பொருளாதார நிலை நலிவுற்றிருப்பதால் நாட்டின் ____________ எண்ணிக்கை பல மடங்காக உயர வாய்ப்புள்ளது எனப் பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஈடு இணை
ஏழை எளியவர்
அடக்க ஒடுக்கம்
சீரும் சிறப்பும்
இணைமொழியும் அதன் பொருளும் தவறாக இருக்கும் இணையைத் தெரிவு செய்க.
ஈடு இணை - ஒப்பு
ஊண் உறக்கம் - வறியவர்
அடக்க ஒடுக்கம் - பணிவு
சீரும் சிறப்பும் - மேன்மை
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
ஹானுமான் இராமபிரானின் முன் பணிவுடன் நின்று அவரின் கட்டளைகளைக் கவனமாகக் கேட்டு இலங்கைக்குப் பறந்து சென்றார்.
ஈடு இணை
ஊண் உறக்கம்
அடக்கம் ஒடுக்கம்
சீரும் சிறப்பும்
கீழ்க்காணும் இணைமொழிக்கான ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
சீரும் சிறப்பும்
மேன்மை
வறியவர்
ஒப்பு
பணிவு
