wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் படிவம் 2 - இரட்டைக்கிளவி

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தேன்மொழி மழை பெய்யத் தொடங்கியதால் ______________ என வீட்டை நோக்கி நடந்தாள்.

a)

திமுதிமு

b)

சடசட

c)

விறுவிறு

d)

தொணதொண

2.

கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருந்தாத இரட்டைக்கிளவியைக் கொண்டுள்ள வாக்கியத்தினைத் தெரிவு செய்க.

a)

நேற்றுப் பெய்த கடும் மழையினால் சாலையோரத்தில் வளர்ந்திருந்த மரத்தின் கிளைகள் சடசட என முறிந்து விழுந்தன.

b)

இந்திரன் வகுப்பில் தொணதொண எனப் பேசியதால், ஆசிரியரிடம் பாட்டு வாங்கினான்.

c)

மழைக்குப் பயந்த சங்கரி வீட்டிற்குள் விறுவிறு என ஓடினாள்.

d)

இவ்வாண்டு நல்ல மழை பெய்ததால் பயிர்கள் பச்சைப்பசேல் என்று திமுதிமு என வளர்ந்திருந்தன.

3.

தன்முனைப்பு கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்கள் கருத்துகளை நேரடியாகக் கூறாமல் ___________ எனப் பேசிக் கொண்டிருந்தனர்.

a)

சடசட

b)

திமுதிமு

c)

தொணதொண

d)

விறுவிறு

4.

வேட்டுச் சத்தத்தைக் கேட்ட விலங்கு கூட்டங்கள் _________வென பாதுகாப்பான இடம் தேடி ஓடின.

a)

சடசட

b)

திமுதிமு

c)

தொணதொண

d)

விறுவிறு

5.

" ______________ என்று பேசாமல் இரு. தொலைக்காட்சியில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்க முடியவில்லை", எனத் தாத்தா கடிந்தார்.

a)

விறுவிறு

b)

தொணதொண

c)

திமுதிமு

d)

சடசட

6.

பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பாமல் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்க தம்பி, அப்பா போட்ட சத்தத்தில் ___________ வென படிகளில் இறங்கிச் சாலையில் நடக்க ஆரம்பித்தான்.

a)

தொணதொண

b)

சடசட

c)

விறுவிறு

d)

திமுதிமு

7.

கால்பந்து விளையாட்டின்போது மயங்கி விழுந்த பாரிவேந்தனை முதலுதவி மாணவர்கள் _____________வென மருத்துவர் கூடாரத்திற்குத் தூக்கிச் சென்றனர்.

a)

விறுவிறு

b)

திமுதிமு

c)

சடசட

d)

தொணதொண

8.

அதிகாலையில் வீசிய புயல்காற்றினால் வீட்டின் முன்னிருந்த மரக்கிளைகள் ___________வென முறிந்து கூரையின் மீது விழுந்தன.

a)

கடகட

b)

விறுவிறு

c)

சடசட

d)

வெடவெட

9.

இருள் சூழத் தொடங்கியதால் _____________வென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

a)

திமுதிமு

b)

சடசட

c)

கடகட

d)

விறுவிறு

10.

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

A

b)

B

c)

C

d)

D

11.

கீழ்க்காணும் இரட்டைக்கிளவியின் சரியான பொருளைத் தெரிவு செய்க.


விறுவிறு

a)

அதிர்வு

b)

கடுமையான ஓசை

c)

ஓயாமல் பேசுதல்

d)

விரைந்து செல்லுதல்

12.

பொதுமுடக்கத் தளர்வுகளினால் கடைகளும் பேரங்காடிகளும் திறக்கப்பட்ட பின் அத்தியாவசிய பொருளை வாங்க மக்கள் அங்கு _______________ என கூடினர்.

a)

விறுவிறு

b)

சடசட

c)

தொணதொண

d)

திமுதிமு

13.

___________ என பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து வந்த வேள்பாரியின் உடல் முழுதும் வியர்வையால் நனைந்து _____________ என இருந்தது.

a)

சடசட - விறுவிறு

b)

விறுவிறு - நசநச

c)

வெடவெட - நசநச

d)

கடகட - வெடவெட

14.

கொடுக்கப்பட்ட படத்திற்கேற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

கிடுகிடு

b)

சடசட

c)

விறுவிறு

d)

திமுதிமு

15.

'கோவிட் 19' பெருந்தொற்று மிக விரைவாக பரவி வருவதால் பீதியடைந்த மக்கள் பரிசோதனை மையங்களில் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் _____________ எனக் கூடியதால் போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டனர்.

a)

கிடுகிடு

b)

சடசட

c)

தொணதொண

d)

திமுதிமு

16.

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

A

b)

B

c)

C

d)

D

17.

இரட்டைக்கிளவியின் சரியான பயன்பாட்டைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இவ்வாண்டு நல்ல மழை பெய்ததால் பயிர்கள் திமுதிமு என வளர்ந்திருந்தன.

b)

திருக்குறள் மனனப் போட்டியில் திருக்குமரன் தான் மனனம் செய்த திருக்குறளைத் தொணதொண என ஒப்புவித்து முதல் பரிசை வென்றான்.

c)

குரங்குகள் மரத்திற்கு மரம் தாவி விலையாடிக் கொண்டிருக்கையில் சில கிளைகள் சடசட என பெருஞ்சத்தத்துடன் முறிந்து விழுந்தன.

d)

அமுதா வகுப்பில் நண்பர்களுடன் விறுவிறு என ஓயாமல் பேசியதால் ஆசிரியரிடம் பாட்டு வாங்கினாள்.

18.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

விறுவிறு

b)

சடசட

c)

தொணதொண

d)

திமுதிமு

19.

இந்த விடுமுறை நாள்களில் வீட்டில் அமைதியான சூழலில் படித்துக் கொண்டிருந்த கார்மேகன், தம்பியின் ______________ என்ற பேச்சால் சினமடைந்தான்.

a)

விறுவிறு

b)

சடசட

c)

தொணதொண

d)

திமுதிமு

20.

வீட்டுப் பாடங்களைச் செய்யாமல் திடலில் விலையாடிக் கொண்டிருந்த நிலாமலர் தந்தையைக் கண்டதும் ______________ என நடந்து வீட்டினுள் சென்றாள்.

a)

சடசட

b)

விறுவிறு

c)

திமுதிமு

d)

தொனதொண

21.

இரட்டைக்கிளவிகள் பொருத்தமாக அமைந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

புயல் காற்றினால் மரக்கிளைகள் சடசடவென முறிந்து விழுந்தன.

b)

பைரவன் விழுந்த மரக்கிளைகளைத் திமுதிமுவென இழுத்து வந்தான்.

c)

கிளைகள் விழுந்த சத்தத்தைக் கேட்டுப் பயத்தால் விறுவிறு எனக் குழந்தை ஒன்று நடுங்கியது.

d)

பைரவன் முறிந்த கிளைகளை ரம்பத்தால் தொணதொணவென அறுத்தான்.

22.

கலைநிகழ்ச்சி முடிவுற்றதும் ரசிகர்கள் கூட்டம் அரங்கை விட்டுத் ___________ வென முட்டிமோதி வெளியேறின.

a)

சடசட

b)

விறுவிறு

c)

திமுதிமு

d)

தொணதொண

23.

உரையாடலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


அக்காள் : மழைத் துளிகள் விழும் சத்தம் கேட்கிறது. _____________ எனச் சென்று வெளியில் காயும் துணிகளை எடுத்து வா!


தங்கை : சரி அக்கா!

a)

சடசட

b)

விறுவிறு

c)

திமுதிமு

d)

தொணதொண

24.

நில நடுக்கத்தால் ஆட்டங்கண்ட கட்டடத்திலிருந்து அதில் பணிபுரிவோர் __________ என்று வெளியேறினர்.

a)

சடசட

b)

கடகட

c)

திமுதிமு

d)

தொணதொண

25.

பாட நேரத்தில் _______________ எனப் பேசிக்கொண்டிருந்த மாணவர்களை வகுப்பிலிருந்து வெளியே போகும்படி ஆசிரியர் கட்டளையிட்டார்.

a)

விறுவிறு

b)

சடசட

c)

தொணதொண

d)

திமுதிமு