NEW
Font size
Worksheets+2 CHEMISTRY UNIT-2
Total questions: 17
Worksheet time: 9mins
1. போராக்ஸின் நீர்க் கரைசலானது
அ) நடுநிலைத் தன்மை உடையது
ஆ) அமிலத் தன்மை உடையது
இ) காரத் தன்மை உடையது
ஈ) ஈரியல்புத் தன்மை கொண்டது
2. போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு (NEET)
அ) இடப்பெயர்ச்சி அடையும் தன்மையுடைய H + அயனியைக் கொண்டுள்ளது
ஆ) புரோட்டானைத் தரவல்லது
இ) புரோட்டானுடன் இணைந்து நீர்மூலக்கூறினைத் தருகிறது
ஈ) நீர்மூலக்கூறிலிருந்து OH - அயனியை ஏற்றுக் கொண்டு, புரோட்டானைத் தருகிறது.
3. பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல?
அ) B 2 H 6
ஆ) B 3 H 6
இ) B 4 H 10
ஈ) இவை எதுவுமல்ல
பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது?
அ) அலுமினியம்
ஆ) கால்சியம்
இ) மெக்னீசியம்
ஈ) சோடியம்
டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
அ) ஆறு
ஆ) இரண்டு
இ) நான்கு
ஈ) மூன்று
பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத
தனிமம் எது?
அ) கார்பன்
ஆ) சிலிக்கன்
இ) காரீயம்(lead)
ஈ) ஜெர்மானியம்
C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்
அ) sp3 இனக்கலப்புடையது
ஆ) sp இனக்கலப்புடையது
இ) sp 2 இனக்கலப்புடையது
ஈ) பகுதியளவு sp 2 மற்றும் பகுதியளவு sp 3
இனக்கலப்புடையது
கார்பனின் ஹைட்ரைடுகளில், கார்பனின் ஆக்சிஜனேற்ற நிலை
அ) +4
ஆ) -4
இ) +3
ஈ) +2
சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு (NEET)
அ) ( SiO3 )2−
ஆ) ( SiO4)2-
இ) ( SiO )-
ஈ) ( SiO4)4-
சிலிக்கோன்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் அலகு
அ) SiO 2
ஆ) R2 Si O
இ) R2 O Si O
ஈ) R2 O Si O
பின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறையுடைய சிலிக்கோன் பலபடியினுடைய
ஒருபடியாக(monomer) இல்லாதது எது?
அ) Me3 SiCl
ஆ) PhSiCl3
இ) MeSiCl3
ஈ) Me2 SiCl2
பின்வருவனவற்றுள் sp 2 இனக்கலப்பு இல்லாதது எது?
அ) கிராபைட்
ஆ) கிராஃபீன்
இ) ஃபுல்லரீன்
ஈ) உலர்பனிக்கட்டி(dry ice)
வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்
அ) நான்முகி
ஆ) அறுங்கோணம்
இ) எண்முகி
ஈ) இவை எதுவுமல்ல
பின்வருவனவற்றுள் சரியில்லாத கூற்று எது?
அ) பெரைல் ஒரு வளைய சிலிக்கேட்டாகும்.
ஆ) MgSiO4 ஒரு ஆர்த்தோ சிலிக்கேட்டாகும்.
இ) [SiO4] 4- ஆனது சிலிக்கேட்டுகளில் அடிப்படை வடிவமைப்பு அலகாகும்.
ஈ) ஃ பெல்ஸ்பர் ஆனது அலுமினோ சிலிக்கேட் அல்ல.
டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை
அ) Cu,Mn
இ) Al,Mn
ஆ) Cu,Al,Mg
ஈ) Al,Cu,Mn,Mg
அணுக்கரு உலைகளில் பாதுகாப்புக் கவசம் மற்றும் கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படும் சேர்மம் எது?
அ) உலோக போரைடுகள்
ஆ) உலோக ஆக்சைடுகள்
இ) உலோக கார்பனேட்கள்
ஈ) உலோக கார்பைடுகள்
பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை
அதிகரிக்கின்றது.
`
அ) Al < Ga < In < Tl
ஆ) Tl < In < Ga < Al
இ) In < Tl < Ga < Al
ஈ) Ga< In < Al < Tl
