Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +1 பாடம் 3

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

a)

உழைப்பு மற்றும் தொழிலமைப்பு

b)

உழைப்பு மற்றும் மூலதனம்

c)

நிலம் மற்றும் மூலதனம்

d)

நிலம் மற்றும் உழைப்பு

2.

மற்ற பண்டங்களையும், பணிகளையும் உற்பத்தி

செய்யப் பயன்படுத்தப்படும், மனித முயற்சியால்

உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள்

a)

நிலம்

b)

உழைப்பு

c)

மூலதனம்

d)

தொழிலமைப்பு

3.

சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும்

விகிதம்

a)

∆TP/N

b)

∆TP/∆N

c)

TP/MP

d)

TP/N

4.

எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும்

முகவர் என்று அழைக்கப்படுகிறது?

a)

உழைப்பாளர்

b)

நிலம்

c)

தொழிலமைப்போர்

d)

மூலதனம்

5.

தொழில் முனைவோரின் முக்கிய குணம்

உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல்

என்ற கூற்றை கூறியவர் யார்?

a)

ஜே.பி கிளார்க்

b)

சும்பீட்டர்

c)

நைட்

d)

ஆடம் ஸ்மித்

6.

ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு

இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

a)

நுகர்வு சார்பு

b)

உற்பத்தி சார்பு

c)

சேமிப்பு சார்பு

d)

முதலீட்டு சார்பு

7.

ஒரு நிறுவனம் 5 அலகுகள் உற்பத்திக்

காரணிகளை பயன்படுத்தி 24 அலகுகளை

உற்பத்தி செய்கிறது. ஓர் அலகு உற்பத்திக்

காரணியை அதிகரிக்கும்போது உற்பத்தி 30

அலகுகளாக உயர்கிறது எனில் சராசரி

உற்பத்தியை (AP) கணக்கிடு.

a)

30

b)

6

c)

5

d)

24

8.

குறுகிய கால உற்பத்திச் சார்பு எதன் மூலம்

அறியப்படுகிறது?

a)

விகித அளவு விளைவு விதி

b)

மாறும் விகித அளவு விளைவு விதி

c)

சம அளவு உற்பத்திக் கோடு

d)

தேவை விதி

9.

நீண்ட கால உற்பத்தி சார்பு எதன் மூலம்

அறியப்படுகிறது?

a)

தேவை விதி

b)

அளிப்பு விதி

c)

விகித அளவு விளைவு விதி

d)

மாறா விகித அளவு விளைவு விதி

10.

சம உற்பத்திக் கோட்டின் வேறு பெயர்

a)

நெகிழ்ச்சியற்ற அளிப்பு கோடு

b)

நெகிழ்ச்சியற்ற தேவைக் கோடு

c)

சம – இறுநிலை பயன்பாடு

d)

சம உற்பத்தி வளைகோடு

11.

நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும்

சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?

a)

நிதி

b)

தொழில் நுட்பம்

c)

மேலாண்மை

d)

மேற்காணும் அனைத்தும்

12.

காப் - டக்ளஸ் உற்பத்தி சார்பு எதனை

அடிப்படையாக கொண்டது?

a)

வளர்ந்து செல் விகித விளைவு விதி

b)

குறைந்து செல் விகித விளைவு விதி

c)

மாறா விகித விளைவு விதி

d)

மேற்காணும் அனைத்தும்.

13.

உற்பத்திக்காரணிகளை 5 சதவீதம் அதிகரித்தால்,

வெளியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பது

எந்த விகித விளைவு விதியை சார்ந்தது

a)

வளர்ந்து செல் விளைவு விகித விதி

b)

குறைந்து செல் விளைவு விகித விதி

c)

மாறா விகித அளவு விளைவு விதி

d)

மேற்காணும் அனைத்தும்

14.

கீழ்கண்டவற்றுள் எது நிலத்தின் சிறப்பியல்பு

அல்ல?

a)

குறை அளிப்பு

b)

இயங்கும் தன்மையுடையது

c)

பலவகைப்படும்

d)

இயற்கையின் கொடை

15.

ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும்

போது கிடைக்கும் உற்பத்தி

a)

இறுதிநிலை உற்பத்தி

b)

மொத்த உற்பத்தி

c)

சராசரி உற்பத்தி

d)

ஆண்டு உற்பத்தி

16.

நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி

a)

வளர்ந்து செல் விகித அளவு

b)

குறைந்து செல் விகித அளவு

c)

மாறா விகித அளவு

d)

மாறும் விகித அளவு

17.

உற்பத்தியாளர் சமநிலையை அடையும் புள்ளி

எது

a)

இறுதிநிலை தொழில் நுட்ப பதிலீட்டு

வீதம் (MRTS) விலை வீதத்தை விட

அதிகமாக இருந்தால்

b)

(MRTS) விலை வீதத்தை விட

குறைவானால்

c)

(MRTS) ம் விலை வீதமும் சமமாக

இருந்தால்

d)

சம உற்பத்திக் கோடும் சம உற்பத்தி

செலவு கோடும் வேறுபட்டிருந்தால்.

18.

பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே

உள்ள தொடர்பு

a)

எதிர்மறை

b)

நேர்மறை

c)

பூஜ்யம்

d)

அதிகரிக்கும்

19.

சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை

உற்பத்தி

a)

சராசரி உற்பத்தியை விட அதிகமாக

இருக்கும்

b)

சராசரி உற்பத்தியை விட குறைவாக

இருக்கும்

c)

அதிகரிக்கும்

d)

சராசரி உற்பத்தியை விட அதிகமாக

இருக்கும் மற்றும் அதிகரிக்கும்

20.

உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள

தொடர்பை விளக்குகிறது.

a)

உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின்

விலைக்கும் இடையே உள்ள தொடர்பு

b)

உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின்

அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

c)

உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு

அளவிற்கும் இடையே உள்ள தொர்பு

d)

உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டு

அளவிற்கும் இடையே உள்ள தொர்பு