wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பாமல் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்த தம்பி, அப்பா போட்ட சத்தத்தில் ____________ வென அடித்துப்பிடித்து கிளம்பினான்.

a)

பரபர

b)

துருதுரு

c)

தளதள

d)

திமுதிமு

2.

பின்வரும் வாக்கியங்களில் இரட்டைக்கிளவியின் சரியான பயன்பாட்டைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஈழவேந்தன் ஐந்தாண்டுகளில் துருதுருவென வளர்ந்து தன் தந்தையைவிட உயரமாக நின்றான்.

b)

தேர்வின்போது தன் தோழியைப் பார்த்து விடை எழுதிய வேல்விழியாள், ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டதும் பயத்தால் சிலுசிலுவென நடுங்கினாள்.

c)

சந்தையில் காய்கறிகள் பரபரவென பசுமையாக இருப்பதைக் கண்டு மக்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்டினர்.

d)

மழையில் விளையாடிக்கொண்டிருந்த சோழனின் உடலைச் சிலுசிலுவென வீசிய குளிர்க்காற்றுச் சிலிர்க்கச் செய்தது.

3.

கீழ்காணும் வாக்கியங்களில் இரட்டைக்கிளவியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இடைவிடாது பெய்த மழையால் தளதள எனச் செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளிச் செடிகள் வெள்ளத்தில் மூழ்கின.

b)

அருணன் தன் பள்ளிப் பாடங்களைச் சிலுசிலு என செய்து முடித்தான்.

c)

பலமாக வீசிய காற்றால் மரத்தின் கிளை ஒன்று பரபர என முறிந்து விழுந்தது.

4.

கீழ்காணும் இரட்டைக்கிளவிக்கான பொருள் யாது?


பரபர

a)

அவசர அவசரமாகச் செய்தல்

b)

விரைவாக ஓடுதல் எப்போதும்

c)

இடத்தை விட்டு செல்லுதல்

d)

துடிப்பாகச் செயல்படுதல்

5.

சிலுசிலு என்பதன் பொருள் யாது ?

a)

எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்

b)

அவசர அவசரமாகச் செய்தல்

c)

குளிர்ச்சித்தன்மை

d)

பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை

6.

துருதுரு என்பதன் பொருள் யாது ?

a)

எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்

b)

பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை

c)

குளிர்ச்சித்தன்மை

d)

அவசர அவசரமாகச் செய்தல்

7.

பரபர என்பதன் பொருள் யாது ?

a)

எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்

b)

குளிர்ச்சித்தன்மை

c)

அவசர அவசரமாகச் செய்தல்

d)

பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை

8.

தளதள என்பதன் பொருள் யாது?

a)

எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்

b)

குளிர்ச்சித்தன்மை

c)

அவசர அவசரமாகச் செய்தல்

d)

பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை

9.

பயிரிட்ட மூன்றே வாரங்களில் கீரைச் செடிகள் யாவும் _________ என வளர்ந்ததால் நிலவரசனின் தோட்டம் பச்சைப் பசேல் என்று பசுமையாகக் காட்சியளிக்கிறது.

a)

சிலுசிலு

b)

துருதுரு

c)

பரபர

d)

தளதள