Font size
WorksheetsMATHS
Total questions: 86
Worksheet time: 43mins
p சிவப்பு q நீலம் மற்றும் r பச்சை நிற கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவு
q/p+q+r
p/p+q+r
p+q/p+q+r
p+r/p+q+r
ஆங்கில எழுத்துக்கள்{a,b,...z} - லிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது அந்த எழுத்து x க்கு முந்தைய எழுத்துக்களில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
12/13
1/13
23/26
3/26
சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவு விகிதம்
1:2:3
2:1:3
1:3:2
3:1:2
இடைக் கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே h1அலகுகள் மற்றும் r1அலகுகள் ஆகும். இடைக் கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே h2 அலகுகள் மற்றும் r2அலகுகள் மற்றும் h2 : h1 = 1:2 எனில் r2 :r1 ன் மதிப்பு
1:3
1:2
2:1
3:1
ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்திலுள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக் கோணம் β மேக பிம்பத்தின் இறக்கக் கோணம் 45° எனில் ஏரியிலிருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது
h(1+tan β )/1-tan β
h(1-tan β )/1+tan β
h tan (45°- β )
இவை ஒன்றும் இல்லை
இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு xமீ ஆகும் முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தை போல இரு மடங்காக உள்ளது அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்ற கோணங்கள் நிரப்பு கோணங்கள் எனில் குட்டையாக உள்ள நபரின் உயரம் காண்க
√2x
x/2√2
x/√2
2x
ஒரு நாற்கரம் ஆனது ஒரு சரி வேகமாக அமைய தேவையான நிபந்தனை
இரு பக்கங்கள் இணை
இரு பக்கங்கள் இணை மற்றும் இருபக்கங்கள் இணையற்ற வை
எதிர்ப் பக்கங்கள் இணை
அனைத்துப் பக்கங்களும் சமம்
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அளவுகள் சுவரை Y அச்சாக கருதினால் அந்த நபர் செல்லும் பாதை என்பது
x=10
y=10
x=0
y=0
வட்டத்தின் வெளிப்புற புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்
ஒன்று
2
முடிவற்ற
0
வட்டத்தின் தொடுகொடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்
மையம்
தொடு புள்ளி
முடிவிலி
நாண்
ஒரு நேரிய பல்லுறுப்புக்கோவையின் வரைபடம் ஒரு
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
மூன்று மாதிரிகளில் அமைந்த 3 நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில் அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றையொன்று வெட்டாது
A={1,2,3,4,5} லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
n(A×B)=6 மற்றும் A={1,3} எனில் n(B) ஆனது
1
2
3
6
1729- ஐ பகா காரணி படுத்தும் போது அந்த பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
1
2
3
4
1 முதல் 10 வரையுள்ள ( இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்
2025
5220
5025
2520
A={a,b,p},B={2,3},C={p,q,r,s} எனில் n[(AUC)×B] ஆனது
8
20
12
16
யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தின் படி a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்தன்மை முழுக்கள் q மற்றும் r. a=bq+r என்றவாறு அமையுமானால் இங்கு r ஆனது
1 < r < b
0 < r < b
0 ≤ r < b
0 < r ≤ b
x+y-3z=-6,-7y+7z=7,3z=9 என்ற தொகுப்பின் தீர்வு
x=1,x=2,x=3
x=-1,x=2,x=3
x=-1,x=-2,x=3
x=1,y=-2,z=3
AB/DE =BC/FD எனில் ABC மற்றும் EDF எப்பொழுது வடிவத்தேவையாக அமையும்
∠ B= ∠ E
∠ A= ∠ D
∠ B= ∠ D
∠ A= ∠ F
(-5,0),(0,-5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
0 ச.அலகுகள்
25 ச.அலகுகள்
5 ச.அலகுகள்
எதுவுமில்லை
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் √3:1 எனில் சூரியனை காணும் ஏற்ற கோண அளவானது
45°
30°
90°
60°
15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்ட கூம்பின் வளைபரப்பு
60 π ச.செ.மீ
68 π ச.செ.மீ
120 π ச.செ.மீ
136 π ச.செ.மீ
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
P(A) > 1
0 ≤ P(A) ≤ 1
P( ϕ )=0
P(A)+P(A)=1
A={1,2},B={1,2,3,4},C={5,6} மற்றும் D ={5,6,7,8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(A×C) ⊂ (B×D)
(B×D) ⊂ (A×C)
(A×B) ⊂ (A×D)
(D×A) ⊂ (B×A)
யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தை பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி
0,1,8
1,4,8
0,1,3
1,3,5
x2-2x-24 மற்றும் x2 - kx-6 ன் மீ.பொ. வ (x-6) எனில் k ன் மதிப்பு
3
5
6
8
Δ LMN-ல் ∠ L=60°, ∠ M=50° மேலும் Δ LMN ∼ Δ PQR எனில் ∠ R-ன் மதிப்பு
40°
70°
30°
110°
x=11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது
x- அச்சுக்கு இணை
y அச்சுக்கு இணை
ஆதி புள்ளி வழி செல்லும்
(0,11) என்ற புள்ளி வழிச்செல்லும்
ஒரு மின் கம்பம் ஆனது அதன் அடியில் சமதள பரப்பில் உள்ள ஒரு புள்ளியில்30° கோணத்தை ஏற்படுத்துகிறது. முதல் புள்ளிக்கு b மீ உயரத்தில் உள்ள இரண்டாவது புள்ளியில் இருந்து மின்கம்பத்தில் அடிக்கு இறக்கக் கோணம் 60° எனில் மின் கம்பத்தின் உயரமானது
√3b
b/3
b/2
b/√3
r அலகுகள் ஆரமுடைய இரு சம அரை கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு
4 π r2ச.அ
6 π r2ச.அ
3 π r2ச.அ
8 π r2ச.அ
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம்ஆம் இட மதிப்பானது 7-ஐ விட குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு
3/10
7/10
3/9
7/9
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது x/3 வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் x-ன் மதிப்பானது
2
1
3
1.5
ஆரம் 5 செ.மீ மற்றும் சாயுயரம் 13 செ.மீ உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம்
12 செ.மீ
10செ.மீ
13 செ.மீ
5 செ.மீ
ஒரு கோபுரத்தின் உயரம் 60 மீ ஆகும். சூரியனை காணும் ஏற்றக் கோணம் 30°-லிருந்து 45° ஆக உயரும் போது கோபுரத்தின் நிழலானது x மீ குறைகிறது எனில் x ன் மதிப்பு
41.92 மீ
43.92மீ
43 மீ
45.6 மீ
(5,7),(3,p) மற்றும் (6,6) என்பன ஒரு கோடமைந்தவை எனில் p-ன் மதிப்பு
3
6
9
12
இருசமபக்க முக்கோணம் Δ ABC-ல் ∠ C=90° மற்றும் AC=5 செ.மீ எனில் AB ஆனது
2.5 செ.மீ
5 செ.மீ
10 செ.மீ
5√2 செ.மீ
3y-3/y ÷ 7y-7/3y2 என்பது
9y/7
9y2/(21y-21)
21y2-42y+21/3y3
7(y2-2y+1)/y2
65 மற்றும் 117 யின் மீ.பொ. வ -வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது m இன் மதிப்பு
4
2
1
3
n(A)=m மற்றும் n(B)=n என்க. A-யிலிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்றுக் கணம் இல்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn-1
2mn
(a+2,4) மற்றும் (5,2a+b) ஆகிய வரிசை சோடிகள் சமம் எனில்(a, b) என்பது
(2,-2)
(5,1)
(2,3)
(3,-2)
F1=1,F2=3 மற்றும் Fn=F n-1+Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
3
5
8
11
கீழ்கண்டவற்றுள் எது y 2+1/y 2-க்கு சமம் இல்லை
Y4+1/y2
(y+1/y)2
(y-1/y)2+2
(y+1/y)2-2
கொடுக்கப்பட்ட படத்தில் ST ∥ QR ,PS=2 செ.மீ மற்றும் SQ= 3செ.மீ எனில் Δ PQR யின் பரப்பளவுக்கும், Δ PST யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்
25:4
25:7
25:11
25:13
3x-y=4 மற்றும் x+y=8 ஆகிய நேர்க்கொடுகள் சந்திக்கும் புள்ளி
(5,3)
(2,4)
(3,5)
(4,4)
பல அடுக்கு கட்டிடத்தின் உச்சியில் இருந்து 20மீ உயரமுள்ள கட்டிடத்தின் உச்சி அடி ஆகியவற்றின் இறக்க கோணங்கள் முறையே 30° மற்றும் 60° எனில் பல அடுக்கு கட்டிடத்தின் உயரம் மற்றும் இரு கட்டடங்களுக்கு இடையேயான தொலைவானது
20,10√3
30,5√3
20,10
30,10√3
ஒரு உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தை பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கன அளவுகளில் விகிதம்
1:2
1:4
1:6
1:8
கமலம் குலுக்கள் போட்டியில் கலந்து கொண்டார் அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில் கமலம் வாங்கிய சீட்டுகளின எண்ணிக்கை
5
10
15
20
ஒரு பணப்பையில் ரூ.2000 நோட்டுகள் 10 ம், ரூ 500 நோட்டுகள் 15 ம் ,ரூ 200 நோட்டுகள் 25ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில் அந்த நோட்டு ரூ 500 நோட்டாகவோ அல்லது ரூ 200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
1/5
3/10
2/3
4/5
ஒரு உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில் அதன் மொத்த புறப்பரப்பு
9 π h2/8 ச.அ
24 π h2 ச.அ
8 π h2/9 ச.அ
56 π h2/9 ச.அ
(12,3),(4,a) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சாய்வு 1/8 எனில் a இன் மதிப்பு
1
4
-5
2
இரு வடிவத்தை முக்கோணங்கள் Δ ABC மற்றும் Δ P QR இன் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீஆகும்.PQ=10 செ.மீ எனில் AB இன் மதிப்பு
6 2/3 செ.மீ
10√6/3 செ.மீ
66 2/3 செ.மீ
15 செ.மீ
x/x2-25 - 8/x2+6x+5 இன் சுருங்கிய வடிவம்
x2-7x-40/(x-5)(x+5)
x 2+7x+40/(x+5)(x-5)(x+1)
x 2-7x+40/(x2-25)(x+1)
x 2+10/(x2-25)(x+1)
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில் பின்வரும் எண்களில் எது இந்த கூட்டுத்தொடர் வரிசையில் அமையும?
4551
10091
7881
13531
R={(x, x2)| xஆனது 13 ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
ஒரு கூட்டு தொடர் வரிசையின் ஆறாவது உறுப்பின் 6 மடங்கும் ஏழாவது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில் கூட்டு தொடர் வரிசையின் 13ஆவது உறுப்பு
0
6
7
13
x4+64 ஐ முழு வர்க்கமாக மாற்ற பின்வருவனவற்றுள் எதை கூட்ட வேண்டும்?
4x2
16x2
8x2
-8x2
6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதள தரையில் செங்குத்தாக உள்ளன அவற்றின் அடிகளுக்கு இடையே உள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?
13 மீ
14 மீ
15 மீ
12.8 மீ
(0,0) மற்றும் (8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்கு செங்குத்தான கோட்டின் சாய்வு
-1
1
1/3
-8
ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ. மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில் அதனை உருவாக்க பயன்பட்ட பொருளின் கன அளவு
5600 π க.செ.மீ
1120 π க.செ.மீ
56 π க.செ.மீ
3600 π க.செ.மீ
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன அதன் 16வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்
16m
62m
31m
31/2 m
(2x-1)2=9 யின் தீர்வு
-1
2
-1,2
இதில் எதுவும் இல்லை
O வை மையமாக உடைய வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளி P யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠ APB =70° எனில் ∠ AOB ன் மதிப்பு
100°
110°
120°
130°
கோட்டுத்துண்டு PQ-ன் சாய்வு 1/√3 எனில் PQ க்கு செங்குத்தான இருசமவெட்டியின் சாய்வு
√3
-√3
1/√3
0
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இருமடங்காகம் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?
6 மடங்கு
18 மடங்கு
12 மடங்கு
மாற்றமில்லை
4x4-24x3+76x2+ax+b ஒரு முழு வர்க்கம் எனில் a மற்றும் b யின் மதிப்பு
100,120
10,12
-120,100
12,10
Δ ABC யில் DE ∥ BC. AB=3.6 செ.மீ,AC=2.4செ.மீ மற்றும் AD=2.1 செ.மீ எனில் AE யின் நீளம்
1.4 செ.மீ
1.8 செ.மீ
1.2 செ.மீ
1.05 செ.மீ
Y அச்சில் அமையும் புள்ளி A-யின் செங்குத்து தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B-ன் கிடைமட்ட தொலைவு 5 எனில் AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு
8x+5y=40
8x-5y=40
x=8
y=5
ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின்......... மடங்காகும்
π
4 π
3 π
2 π
x செ.மீ ஆரமுள்ள ஒரு திண்ம கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம்
3x செ.மீ
x செ.மீ
4x செ.மீ
2x செ.மீ
சாய்வை பயன்படுத்தி நாற்கரம் ஆனது ஓர் இணை கரமாக உள்ளது எனக்கூற நாம் காணவேண்டியவை
இரு பக்கங்களின் சாய்வுகள
இரு சோடி எதிர்ப் பக்கங்களின் சாய்வுகள்
அனைத்து பக்கங்களின் நீளங்கள்
இரு பக்கங்களின் ஆய்வுகள் மற்றும் நீளங்கள்
படத்தில் உள்ளவாறு O வை மையமாக கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில் ∠ POQ ஆனது
120°
100°
110°
90°
q2x2+p2+r2=0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள் qx2+pc+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில் p,q,r என்பன
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன
ஒரு பெருக்கு தொடர் வரிசையில் உள்ளன
கூட்டுத்தொடர் வரிசை மற்றும் பெருக்கு தொடர் வரிசை இரண்டிலும் உள்ளன
இதில் எதுவும் இல்லை
x 2+4x+4 என்ற இருபடி பல்லுறப்புக்கோவை X அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
0
1
0 அல்லது 1
2
Δ ABC ல் AD ஆனது ∠ BAC ன் இருசமவெட்டி.AB=8 செ.மீ,BD= 6 செ.மீ மற்றும் DC= 3செ.மீ எனில் பக்கம் AC ன் நீளம்
6 செ.மீ
4 செ.மீ
3 செ.மீ
8 செ.மீ
8y= 4x+21 என்ற நேர்கோட்டின் சமன் பாட்டிற்கு கீழ்க்கண்டவற்றில் எது உண்மை?
சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6
சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6
சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
16 செ.மீ உயரமுள்ள ஒரு நேர்வட்ட கூம்பின் இடைக்கண்ட ஆரங்கள் 8 செ.மீ மற்றும் 20 செ.மீ எனில் அதன் கன அளவு
3328 π க.செ.மீ
3228 π க.செ.மீ
3240 π க.செ.மீ
3340 π க.செ.மீ
கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகு பந்தின் வடிவம் கிடைக்கும்
உருளை மற்றும் கோளம்
அரைக்கோளம் மற்றும் கூம்பு
கோளம் மற்றும் கூம்பு
கூம்பின் இடைக்கண்டம் மற்றும் அரைக்கோளம்
256x8y4z10/25x6y6z6 யின் வர்க்கமூலம்
16/5 |x2z4/y2|
16 |y2/x2z4|
16/5 |y/xz2|
16/5 |xz2/y |
(2,1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர் கோடுகள்
x-y-3=0;3x-y-7=0
x+y=3;3x+y=7
3x+y=3;x+y=7
x+3y-3=0;x-y-7=0
r1 அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப் பந்து உருக்கப்பட்டு r2 அலகுகள் ஆரமுடைய 8 சமகோள பந்துகளாக ஆக்கப்படுகிறது எனில் r1:r2
2:1
1:2
4:1
1:4
1 செ.மீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையில் இருந்து அதிகபட்ச கன அளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில் அதன் கன அளவு
4/3 π
10/3 π
5 π
20/3 π
படத்தில் O வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீது உள்ள புள்ளி R வழியாக செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும்.CP=11 செ.மீ மற்றும் BC=7 செ.மீ எனில் BR-ன் நீளம்
6 செ.மீ
5 செ.மீ
8 செ.மீ
4 செ.மீ
கொடுக்கப்பட்ட படத்தில் PR=26 செ.மீ,QR=24 செ.மீ ∠ PAQ=90°,PA=6செ.மீ மற்றும் QA=8 செ.மீ எனில் ∠ PQR ஐக் காண்க
80°
85°
75°
90°
உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவு
1
0
2
3
