wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

9ம் வகுப்பு- இயல்-6

Total questions: 44

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

"ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து

மாலைத்தாமம் வளையுடன் நாற்றி,

விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்" - சிலப்பதிகாரத்தில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ள காதை

a)

அரங்கேற்றுக்காதை

b)

காடுகாண் காதை

c)

குன்றக் குரவை

d)

வரந்தரு காதை

2.

"கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை

பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன" - என்று சிற்பக்கலை பற்றிக் குறிப்பிடும் நூல்

a)

தொல்காப்பியம்

b)

திவாகர நிகண்டு

c)

பிங்கல நிகண்டு

d)

புறப்பொருள் வெண்பா மாலை

3.

மாளிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்ததைக் கூறும் நூல்

a)

தொல்காப்பியம்

b)

சிலப்பதிகாரம்

c)

மணிமேகலை

d)

நன்னூல்

4.

செப்புத்திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுவது

a)

பல்லவர்

b)

சேரர்கள்

c)

சோழர்கள்

d)

பாண்டியர்கள்

5.

கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சிற்பங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன?

a)

இரண்டாம் பராந்தகன்

b)

முதலாம் பராந்தகன்

c)

முதலாம் இராசேந்திரன்

d)

முதலாம் இராஜராஜன்

6.

பொருத்துக:

1) தஞ்சைப் பெரிய கோவில் - மூன்றாம் குலோத்துங்கச் சோழன்

2) கங்கை கொண்ட சோழபுரம் - முதலாம் இராசராசன்

3) திரிபுவன வீரேசுவரம் கோவில் - இரண்டாம் பராந்தகன்

4) மூவர் கோவில் - முதலாம் இராசேந்திரன்

a)

4 2 1 3

b)

2 4 1 3

c)

4 2 3 1

d)

2 4 1 3

7.

தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரி அமைந்துள்ள இடம்

a)

கும்பகோணம்

b)

நார்த்தாமலை

c)

மாமல்லபுரம்

d)

கொடும்பாளூர்

8.

சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள நூல் எது?

a)

சிற்பக்கலை

b)

சிற்பசாத்திரம்

c)

சிற்பநூல்

d)

சிற்பச்செந்நூல்

9.

பேரூர் சிவன் கோவில் யாருடைய சிற்பக்கலைக்கு சிறந்த சான்று

a)

நாயக்கர்

b)

விஜயநகரம்

c)

பாண்டியர்

d)

பல்லவர்

10.

ஒரே பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ள இடம்

a)

திருமலை(ஆரணி)

b)

திருநாதர்குன்று

c)

திருப்பருத்திக்குன்றம்

d)

சரவணபெலகெலா

11.

பொருத்துக:

1) மைவனம் - சாந்தம்

2) முருகியம் - இறகு

3) சிறை - குறிஞ்சிப்பறை

4) சாந்தம் - மலைநெல்

a)

2 4 1 3

b)

4 2 1 3

c)

4 3 2 1

d)

2 1 3 4

12.

பொருத்துக:

1) பொலம் - தானியக்குவியல்

2) கடறு - அழகு

3) பொலி - ஒரு வகை மான்

4) உழை - காடு

a)

4 1 2 3

b)

3 2 1 4

c)

2 4 3 1

d)

2 4 1 3

13.

பொருள் தருக: மல்லல்

a)

வளம்

b)

வயல்

c)

கொம்பு

d)

குளம்

14.

பொருள் தருக: துவரை

a)

முத்து

b)

பவளம்

c)

சங்கு

d)

கொம்பு

15.

"இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" என்று கூறியவர் யார்?

a)

புலவர் குழந்தை

b)

பெரியார்

c)

அறிஞர் அண்ணா

d)

காமராசர்

16.

இராவண காவியத்தின் ஆசிரியர்

a)

புலவர் செ. ராசு

b)

து. ரங்கன்

c)

கந்தர்வன்

d)

புலவர் குழந்தை

17.

இராவண காவியத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

a)

5

b)

4

c)

3

d)

6

18.

இராவண காவியத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

a)

3000

b)

3100

c)

3200

d)

3300

19.

தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்?

a)

புலவர் செ. ராசு

b)

கந்தர்வன்

c)

புலவர் குழந்தை

d)

இறையரசன்

20.

யாப்பதிகாரம், தொடையதிகாரம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

a)

கந்தர்வன்

b)

இளங்குமரனார்

c)

புலவர் செ. ராசு

d)

புலவர் குழந்தை

21.

இலக்கணக்குறிப்பு தருக: மன்னிய

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

பண்புத்தொகை

d)

பெயரெச்சத் தொடர்

22.

இலக்கணக் குறிப்பு தருக: வெரீஇ

a)

செய்யுளிசை அளபெடை

b)

சொல்லிசை அளபெடை

c)

இன்னிசை அளபெடை

d)

உயிரளபெடை

23.

இலக்கணக் குறிப்பு தருக: மலர்க்கண்ணி

a)

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

b)

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

c)

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

d)

ஆறாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

24.

பொருத்துக:

1) எருத்துக்கோடு - வினைத்தொகை

2) கரைபொரு - இரண்டாம் வேற்றுமைத்தொகை

3) மரைமுகம் - ஆறாம் வேற்றுமைத்தொகை

4) வருமலை - உவமைத்தொகை

a)

2 3 1 4

b)

2 1 4 3

c)

3 2 4 1

d)

2 3 4 1

25.

பூக்கும் - இச்சொல்லில் உள்ள விகுதி

a)

வினைமுற்று விகுதி

b)

பெயரெச்ச விகுதி

c)

தொழிற்பெயர் விகுதி

d)

வினையெச்ச விகுதி

26.

பொருள் தருக: தாமம்

a)

மலை

b)

மாலை

c)

வளம்

d)

வயல்

27.

ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்

a)

பேயாழ்வார்

b)

பூதத்தாழ்வார்

c)

பெரியாழ்வார்

d)

திருமங்கையாழ்வார்

28.

நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

a)

135

b)

150

c)

153

d)

143

29.

பொருத்துக:

1) அன்பளிப்பு - அசோகமித்திரன்

2) சக்தி வைத்தியம் - கு. அழகிரிசாமி

3) முதலில் வரும் இரவு - தி. ஜானகிராமன்

4) அப்பாவின் சிநேகிதர் - ஆதவன்

a)

2 3 4 1

b)

2 4 3 1

c)

2 1 4 3

d)

4 3 2 1

30.

2008ஆம் ஆண்டு மினசாரப்பூ என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதமி விருதுபெற்றவர்

a)

அசோகமித்திரன்

b)

மேலாண்மை பொன்னுசாமி

c)

நாஞ்சில் நாடன்

d)

வண்ணதாசன்

31.

2010ஆம் ஆண்டு சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதமி விருதுபெற்றவர்

a)

அசோகமித்திரன்

b)

மேலாண்மை பொன்னுசாமி

c)

நாஞ்சில் நாடன்

d)

வண்ணதாசன்

32.

2016ஆம் ஆண்டு ஒரு சிறு இசை என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதமி விருதுபெற்றவர்

a)

அசோகமித்திரன்

b)

மேலாண்மை பொன்னுசாமி

c)

நாஞ்சில் நாடன்

d)

வண்ணதாசன்

33.

நாகசுரம் எந்த மரத்தால் செய்யப்படுகிறது?

a)

ஆச்சா

b)

தாமலம்

c)

நாளிகரம்

d)

பூவை

34.

பொருத்துக:

1) உயிர்முன் உயிர் - மணியடி

2) உயிர்முன் மெய் - பனிக்காற்று

3) மெய்ம்முன் உயிர் - ஆலிலை

4) மெய்ம்முன் மெய் - மரக்கிளை

a)

4 3 2 1

b)

1 2 3 4

c)

2 4 1 3

d)

4 2 1 3

35.

பொருத்துக:

1) இயல்பு புணர்ச்சி - வட்டாடினான்

2) விகாரப் புணர்ச்சி - இவனேயவன்

3) உடம்படுமெய் புணர்ச்சி - வாழைமரம்

4) குற்றியலுகரப் புணர்ச்சி - புறநானூறு

a)

3 4 1 2

b)

4 3 2 1

c)

3 2 1 4

d)

3 4 2 1

36.

பொருத்துக:

1) வகுப்பு - மென்தொடர்க் குற்றியலுகரம்

2) இரும்பு - இடைத்தொடர்க் குற்றியலுகரம்

3) அமிழ்து - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

4) வரலாறு - வன்தொடர்க் குற்றியலுகரம்

a)

4 3 2 1

b)

4 2 1 3

c)

4 1 2 3

d)

1 2 3 4

37.

பொருத்துக:

1) செல்வி + ஆடினாள் - மெய்யீறு + மெய்ம்முதல்

2) பாலை + திணை - மெய்யீறு + உயிர்முதல்

3) கோல் + ஆட்டம் - உயிரீறு + உயிர்முதல்

4) மண் + சரிந்தது - உயிரீறு + மெய்ம்முதல்

a)

3 4 2 1

b)

3 4 1 2

c)

4 3 2 1

d)

1 2 3 4

38.

பல்லவர் காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று

a)

மாமல்லபுரம்

b)

பிள்ளையார்பட்டி

c)

திரிபுவன வீரேசுவரம்

d)

தாடிக்கொம்பு

39.

'பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்' நிலப்பகுதி எது?

a)

குறிஞ்சி

b)

நெய்தல்

c)

முல்லை

d)

பாலை

40.

'அதிரப் புகுதக் கனாக் கண்டேன்' - யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

a)

கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

b)

தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

c)

ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

d)

ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

41.

நட்புக்காலம் என்னும் நூலை எழுதியவர் யார்?

a)

கவிஞர் அறிவுமதி

b)

கவிஞர் நா. முத்துக்குமார்

c)

கவிஞர் வைரமுத்து

d)

கவிஞர் சுராதா

42.

பின்வரும் குறளில் பயின்று வந்துள்ள அணியைக் காண்க.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண்.

a)

உருவக அணி

b)

ஏகதேச உருவக அணி

c)

உவமையணி

d)

இல்பொருள் உவமையணி

43.

பின்வரும் குறளில் பயின்று வந்துள்ள அணியைக் காண்க.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)

ஆழி எனப்படு வார்.

a)

உவமையணி

b)

உருவக அணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பிறிதுமொழிதல் அணி

44.

பின்வரும் குறளில் பயின்று வந்துள்ள அணியைக் காண்க.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

a)

உருவக அணி

b)

பிறிதுமொழிதல் அணி

c)

ஏகதேச உருவக அணி

d)

உவமையணி