wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

புறாக்கள் ___________ தேடிச் சென்றன.

a)

இறை

b)

இரை

c)

உரை

2.

2. மாலா அனுதினமும் காலையில் _______ வனை வழிபடுவாள்.

a)

இரை

b)

இறை

c)

ஏணி

3.

3.அக்காள் கடிதத்தை ___________யில் போட்டார்.

a)

உரை

b)

உறை

c)

அறை

4.

4.தலைமையாசிரியர் சபைகூடலில் __________ யாற்றினார்.

a)

உரை

b)

உறை

c)

அரம்

5.

5. நான் பந்து விளையாடினேன்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

6.

அம்மா தங்கைக்குப் பாடம் சொல்லித் தருகிறார்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

7.

7. எனக்குத் தம்பியுடன் விளையாடப் பிடிக்கும்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

8.

8. உன் எதிர்கால ஆசை என்ன?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

9.

9. விஜயா அழகாக நடனம் ஆடினாள்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

10.

10. நாங்கள் விடுமுறையில் கடலுக்குச் சென்றோம்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

11.

11. நீ கொண்டு வந்த உணவைக் காட்டு

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

12.

சினந்தேடி என்பதன் பொருள் யாது?

a)

கோபத்தை அடக்கிக் கொண்டு

b)

கோபத்தை வருவித்துக் கொண்டு

13.

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.

கோடிட்ட சொல்லின் பொருள் :

a)

துன்பம்

b)

இன்பம்

14.

உலகநீதியை நிறைவு செய்க.


சினந்தேடி யல்லலையுந் ............... வேண்டாம்.

a)

தேட

b)

பாட

15.

சினம் என்பதன் பொருள்:

a)

கோபம்

b)

கவலை

16.

சினந்திருந்தார் என்பதன் பொருள் :

a)

கோபங்கொள்ளாதவர்

b)

கோபங்கொண்டோர்

17.

கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.

சினந்திருந்தார் ............... சேறல் வேண்டாம்.

a)

பாதைவழிச்

b)

வாசல்வழிச்

18.

சேறல் வேண்டாம் என்பதன் பொருள் என்ன?

a)

போக வேண்டாம்.

b)

போக வேண்டும்.

19.

இவ்விரு உலகநீதியும் எதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது?

a)

கவலை

b)

மகிழ்ச்சி

c)

கோபம்

20.

கோபம் கொள்பவரிடம் பழகுவது நல்லது.

a)

ஆம்

b)

இல்லை

21.

"அறம் செய விரும்பு "எனும் ஆத்திசூடியை எழுதியவர் யார்

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

பாரதிதாசன்

d)

அதிவீரராம பாண்டியன்

22.

கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.


அன்னையும் பிதாவும்--------------------------

a)

மூவா மருந்து

b)

சுற்றம் இல்லை

c)

முன்னறிவு தெய்வம்

d)

சாலவும் நன்று

23.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழியணி எந்த வகையைச் சேர்ந்தது?

a)

ஆத்திசூடி

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

திருக்குறள்

24.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

a)

சல சல

b)

கல கல

c)

நற நற

d)

பள பள

25.

படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

அச்சம் தவீர்

b)

ஆண்மை தவறேல்

c)

ஊண்மிக விரும்பு

d)

ஔடதம் குறை

26.

நீர் ஓடும் ஓசை


மேற்காணும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

சல சல

b)

கல கல

c)

நற நற

d)

மள மள

27.

மேலே உள்ள படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

இளங்கன்று பயமறியாது

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

28.

திருக்குறளைப் பூர்த்தி செய்க


.............................................................

நற்றாள் தொழாஅர் எனின்

a)

இனிய உளவாக இன்னாத கூறல்

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

d)

கற்க கசடற கற்பவை கற்றபின்

29.

இவர் இயற்றிய நூல் என்ன?

a)

திருக்குறள்

b)

ஆத்திசூடி

c)

பழமொழி

d)

தேவாரம்

30.

அகத்தின் ---------------- முகத்தில் --------


பழமொழியைப் பூர்த்தி செய்க.

a)

அழகு ............ தெரியும்

b)

அழகு......... தெரியாது

c)

தெரியும்........ அழகு

d)

தெரியாது....... அழகு

31.

முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.

a)

எழுவாய் வேற்றுமை

b)

பயனிலை வேற்றுமை

c)

செயபடுபொருள் வேற்றுமை

32.

முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.

a)

எழுவாய் வேற்றுமை

b)

பயனிலை வேற்றுமை

c)

செயபடுபொருள் வேற்றுமை

33.

வேற்றுமை உருபு


வேற்றுமை _______ வகைப்படும்.

a)

ஒன்பது

b)

பத்து

c)

எட்டு

34.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


அண்ணன் தங்கையை அழைத்தார்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

35.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


கண்ணகி காற்சிலம்பை உடைத்தாள்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

36.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


ஆசிரியர் கனகாவைப் பாராட்டினார்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

37.

வீரர்கள் போரிடுவதற்கு ___________ பயன்படுத்துவர்.

a)

வாழ்

b)

வால்

c)

வாள்

38.

வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.

a)

அன்றும் இன்றும்

b)

கண்ணும் கருத்துமாய்

c)

அரை குறை

d)

மேடு பள்ளம்

39.

"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.

a)

அல்லும் பகலும்

b)

ஆதி அந்தம்

c)

அங்கும் இங்கும்

d)

நன்மை தீமை

40.

குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

____________________________________________

a)

இழுக்கா இயன்றது அறம்

b)

தெய்வத்துள் வைக்கப் படும்

c)

இகழ்வாரை நோவது எவன்

d)

தோன்றலின் தோன்றாமை நன்று

41.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


கயல்விழி துணி துவைத்தாள்.

a)

1-வேற்றுமை உருபு

b)

2-வேற்றுமை உருபு

c)

3-வேற்றுமை உருபு

d)

4-வேற்றுமை உருபு

42.

பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.


" வாழ வேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் உலகம் நம்மை மதிக்கும்"

a)

அகர முதல

b)

வையத்துள் வாழ்வாங்கு

c)

ஞாலங் கருதினுங்

d)

நன்றி மறப்பது நன்றன்று

43.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

44.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

45.

சிறு _____________ பல் குத்த உதவும் .

a)

துரும்பும்

b)

கரும்பும்

c)

எறும்பும்

46.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

47.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

48.

வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

49.

சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

50.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிக்கனம் சீரளிக்கும்