Worksheetsதமிழ்மொழி இலக்கணம் 3
Total questions: 50
Worksheet time: 25mins
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
மலர் + கொண்டு = மலர்கொண்டு என்பது என்ன வகை புணர்ச்சி?
திரிதல்
கெடுதல்
இயல்பு
விகாரம்
எது சரியான புணர்ச்சி அல்ல.
அத்தலைவன்
பூஞ்சோலை
எவ்வானை
தைத்திங்கள்
சரியான புணர்ச்சியைத் தெரிவு செய்க.
கூலியாள்
மாயிலை
காலைவுணவு
பூயிலை
சரியானதைத் தெரிவு செய்க.
பொன் + தகடு = பொந்தகடு
பொன் + தகடு = பொற்தகடு
பொன் + தகடு = பொற்றகடு
பொன் + தகடு = பொன்தகடு
ல் முன் த் -- ற் ஆகும் எனும் விதிக்கேற்ப புணர்ந்துள்ளதைத் தெரிவு செய்க.
பொற்குடம்
கற்றூண்
முட்டாள்
வேற்படை
எது சரியான எண்ணுப்பெயர் புணர்ச்சி அல்ல
ஒன்பது + பத்து = தொண்ணூறு
பத்து + பத்து = நூறு
எட்டு + பத்து = எண்பது
மூன்று + பத்து = முப்பது
எது சரியானது அல்ல.
ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று
இரண்டு + இரண்டு = இவ்விரண்டு
மூன்று + மூன்று = மும்மூன்று
நான்கு + நான்கு = நன்நான்கு
சரியானதைத் தெரிவு செய்க
அவ்வளவுப் பெரிய
அத்துணைப் பெரிய
அத்தனைப் பெரிய
அவைப் பெரிய
சரியாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.
சரியாக செய்தாய்
சரியானப் பதில்
சரியாய் செய்தான்
சரியாகச் செய்தாய்
காடு + அரண் = ?
காடரண்
காட்டரண்
காட்டுஅரண்
காடுஅரண்
சரியாகப் புணர்ந்துள்ளவற்றைத் தெரிவு செய்க.
தை + திங்கள்
சேறு + வயல்
வரி + குயில்
தைதிங்கள், சேறுவயல், வரிகுயில்
தைத்திங்கள், சேறுவயல், வரிகுயில்
தைத்திங்கள், சேற்றுவயல், வரிக்குயில்
தைத்திங்கள், சேற்றுவயல், வரிகுயில்
சரியான விடையைத் தெரிவு செய்க.
பா + அமை
சே + அடி
நாகு + யாது
பாவமை, சேவடி, நாகியாது
பாவமை, சேவடி, நாகுயாது
பாயமை, சேவடி, நாகுயாது
பாயமை, சேயடி, நாகியாது
வளவன் + அவன் = வளவனவன். என்ன வகை புணர்ச்சி?
இயல்பு
தோன்றல்
திரிதல்
கெடுதல்
நிலங்கண்டான் என்பது என்ன வகை புணர்ச்சி?
இயல்பு
தோன்றல்
திரிதல்
கெடுதல்
காரவடை என்பது என்ன வகை புணர்ச்சி?
இயல்பு
தோன்றல்
திரிதல்
கெடுதல்
நாள் + தோறும் = ?
நாள்தோறும்
நாடுதோறும்
நாடோறும்
நாட்டோறும்
சில இடத்து உயிராகவும் சில இடத்து மெய்போலவும் ஒலித்து, உயிரும் ஆகாமல் மெய்யும் ஆகாமல் தனிநிலையாய் வரும் எழுத்து ...
சுட்டெழுத்து
வினாவெழுத்து
ஆய்தவெழுத்து
நெட்டெழுத்து
சரியான தன்மைப் பெயரைத் தெரிவு செய்க.
நீங்கள்
அவர்கள்
உங்கள்
எங்கள்
பொருள் முற்றுப்பெறாத வினைச்சொல் ..............
எச்ச வினை
வினைமுற்று
வினைச்சொல்
தன்வினை
1. கீழ்காண்பவற்றுள் எது தன்வினை வாக்கியம்?
அ. தம்பி படிப்பித்தான்
ஆ. மாதவி நடனம் ஆடினாள்
இ. தாத்தா உண்பித்தார்
ஈ. கலைஞர் பாடுவித்தார்
2. தன்வினையைக் குறிக்கும் சொல்லைத் தெரவு செய்க.
அ. உண்பித்தாள்
ஆ. எழுதுவித்தார்
இ. கற்றார்
ஈ. செய்வித்தேன்
3. பின்வருவனவற்றுள் பிறவினைச் சொல்லைத் தெரிவு செய்க.
அ. உண்டார்
ஆ. உண்பித்தார்
இ. ஊட்டினார்
4. கீழ்க்காணும் அட்டவணையில் சரியான புணர்ச்சியைத் தெரிவு செய்க.
அ. வில்வ + இந்திரம் = வில்வேந்திரம்
ஆ. பரம + உத்திரம் = பரமமுத்திரம்
இ. சர்வ + ஈஸ்வரன் = சர்வோஸ்வரன்
கவிதா + அஞ்சலி = கவிதேஞ்சலி
5. கீழ்க்காணும் வாக்கியங்களில் முற்றியலுகரச் சொல்லைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அ. பிறரைக் கெட்டது கூறுவது கூடாது
ஆ. இஃது ஓர் அரசனின் போர் வாள்
இ. முறையான உணவு நிறைவான வாழ்வு அளிக்கும்
ஈ. இன்று என் பள்ளியின் ஆண்டு விழா
6. பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
அ. நடு + தெரு = நடுத்தெரு
ஆ. சிறு + துளி = சிறுத்துளி
இ. இடு + பணி = இடுப்பணி
ஈ. நடை + பாதை = நடைப்பாதை
7. சரியான இணையைத் தெரிவு செய்க.
அ. பரிசு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆ. மனு - நெடில்தொடர்க் குற்றியலுகரம்
இ. எருது - மென்தொடர்க் குற்றியலுகரம்
ஈ. தராசு - வன்தொடர்க் குற்றியலுகரம்
8. கீழ்க்காணும் சொற்களுள் இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.
அ. முரடு
ஆ. பட்டு
இ. செய்து
ஈ. மூன்று
9. கீழ்க்காணும் சொற்களில் நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.
அ. சிரி
ஆ. மாசு
இ. விடு
ஈ.குழு
10. காலியான இடத்திற்கு ஏற்ற வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.
அ. பஞ்சு
ஆ. உப்பு
இ. மிளகு
ஈ. மருந்து
உன் கடிதத்தைப் பெற்றேன்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
நாங்கள் பேரங்காடி சென்றோம்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
அவர்கள் காற்பந்து விளையாடுகிறார்கள்
தன்மை
முன்னிலை
படர்க்கை
உமது பெயரை அறிவேன்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
சிங்கம் மானை வேட்டையாடியது.
தன்மை
முன்னிலை
படர்க்கை
எழிலன்
தன்மை
முன்னிலை
படர்க்கை
யாம்
தன்மை
முன்னிலை
படர்க்கை
நீவிர்
தன்மை
முன்னிலை
படர்க்கை
சிறுவர்கள்
தன்மை
முன்னிலை
படர்க்கை
நீங்கள்
தன்மை
முன்னிலை
படர்க்கை
அதிகாலையில் அப்பா வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பினார்.
வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் எவ்வகையைச் சார்ந்தது?
சினைப்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
சென்ற ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள் _____________ தூய்மைப்படுத்தினர்.
முதியோர் இல்லத்தைத்
பேரங்காடியைத்
ஆகாயத்தைத்
தவறான இணையைத் தெரிவு செய்க.
இடப்பெயர் - திடல்,கோவில்
பண்புப் பெயர்- வாய்,கை
தொழிற்பெயர் - உரமிடுதல்,சிரித்தல்
வட்டத்தில் இருக்க வேண்டிய சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.
, !
, .
? 1
கீழ்க்காண்பவற்றில் எது சினைப்பெயரைக் குறிக்கும்?
வீடு
விமானம்
கிளை
வாக்கியத்தில் விடுப்பட்ட சரியான பண்புப்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.
கடற்கரையோரத்தில் தென்னை மரங்கள் _____________ வளர்ந்திருந்தன.
பரிவாக
உயரமாக
கருமையாக
கீழ்க்காண்பவற்றில் எது தொழிற்பெயரைக் குறிக்கின்றது?
ஓடுதல்
மருத்துவர்
பள்ளிக்கூடம்
செயப்படுபொருள் சரியாக அமைந்த வாக்கியத்தைத் தெரிவு செய்க.
குயில் கூவியது.
அத்தை தூங்கினார்.
தம்பி பந்தை உதைத்தான்.
நான் பழம் வாங்கினேன்.
மேற்கண்ட வாக்கியம் எந்தக் காலத்தைக் குறிக்கிறது.
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
சரியான ஒலிமரபுச் சொற்களைத் தெரிவு செய்க.
கோழி அலறும்
கிளி கீச்சிடும்
காகம் அகவும்
