wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5

Total questions: 55

Worksheet time: 28mins

Name
Class
Date
1.

இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?

a)

ஈகை திறன்

b)

ஒப்புர வொழுகு

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

உடையது விளம்பேல்

2.

சரியான பெயரடையைத் தெரிவு செய்க

a)

நீளமான ஆறு

b)

அருமையாகப் பாடினார்

c)

வேகமாக நடந்தாள்

d)

நன்றாகப் பேசினார்

3.

தனந்தேடி ............................. புதைக்க வேண்டாம்.

a)

வாசல் வழி

b)

யுறவென்று

c)

யுண்ணாமற்

d)

யொருநாளும்

4.

பிழையாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

இவ்யாழ்

b)

மென்றுத் தின்றான்

c)

கற்றூண்

d)

பூஞ்சோலை

5.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க

a)

தாயும் சேயும்

b)

அல்லும் பகலும்

c)

ஆடை அணிகலன்

d)

ஆடல் பாடல்

6.

ஒளடதம் குறை எனப் பாடியவர் யார்?

a)

ஒளவையார்

b)

அதிவீரராம பாண்டியன்

c)

உலகநாத பண்டிதர்

d)

பாரதியார்

7.

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எனும் திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.

a)

கற்றனைத் தூறும் அறிவு.

b)

நிற்க அதற்குத் தக.

c)

என்புதோல் போர்த்த உடம்பு.

d)

உயிரினும் ஓம்பப் படும்.

8.

படத்திற்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

காட்டுத் தீ போல

c)

நகமும் சதையும் போல

d)

எலியும் பூனையும் போல

9.

சரியானவற்றைத் தெரிவு செய்க.

a)

ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு

b)

பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா

c)

ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்

d)

பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை

10.

கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
11.

1. கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


கோரனி நச்சுச் தொற்றின் தாக்கம் அடுத்த வருடம் வரை நீடிக்கலாம் என உலகச் சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

a)

கோரனி

b)

வருடம்

c)

சுகாதார அமைப்பு

d)

உலக

12.

காற்பந்து போட்டியாளர்கள் அனைவரும் _________ திறமையை வெளிப்படுத்தினர்.

a)

தன்

b)

தம்

c)

அவர்கள்

d)

தன்னுடைய

13.

கோடிடப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.


அந்தக் கைவினைப்பொருள்கள் மரத்தால் செய்யப்பட்டவை.

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

14.

வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு சரியான இடத்தைத் தெரிவு செய்க.


மன்னா, என் நிலைமையைக் கூறிவிட்டேன். இனி தங்களின் தீர்ப்பு எதுவானாலும் அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்.

a)

தன்மை, படர்க்கை

b)

முன்னிலை, தன்மை,

c)

படர்க்கை, முன்னிலை

d)

தன்மை, முன்னிலை

15.

கீழ்க்கண்ட செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெர்வு செய்க.


தெனாலி இராமனின் புத்திசாலித்தனம் அரசரைப் பெரிதும் ஈர்த்தது.

a)

அரசரின் புத்திசாலித்தனம் தெனாலி இராமனால் பெரிதும் ஈர்க்கப்பட்டது.

b)

அரசர் தெனாலி இராமனின் புத்திசாலித்தனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

c)

அரசர் தெனாலி இராமனைப் பெரிதும் ஈர்த்தார்.

d)

தெனாலி இராமனின் புத்திசாலித்தனத்தை அரசர் பெரிதும் ஈர்த்தார்.

16.

கணினியின் வருகையால் மனிதன் பல நன்மைகள் அடைந்துள்ளான். __________ தவறாகப் பயன்படுத்தினால் நமக்குத் தீமை விளைவது திண்ணம்.

a)

ஆனால்

b)

எனவே

c)

இருப்பினும்

d)

அல்லது

17.

செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டு வாக்கியத்தைத் தெரிவு செய்க.


அம்மா தீபாவளிக்குச் சுவையான அணிச்சல் செய்தார்.

a)

தீபாவளிக்கு அம்மாவால் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.

b)

அம்மாவால் தீபாவளிக்குச் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.

c)

சுவையான அணிச்சல் தீபாவளிக்கு அம்மாவால் செய்யப்பட்டது.

d)

தீபாவளி சுவையான அணிச்சல் அம்மாவால் செய்யப்பட்டது.

18.

ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது?

a)

செய்வினை வாக்கியம்

b)

செயப்பாட்டுவினை வாக்கியம்

c)

தனி வாக்கியம்

d)

தொடர் வாக்கியம்

19.

திரு கணேசன் விசாரிக்காமல் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.


கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெர்வு செய்க

a)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

b)

வெள்ளம் வருமுன் அணைபோடு

c)

புத்திமான் பலவான்

d)

ஆழம் அறியாமல் காலை விடாதே

20.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

_______________________________________

a)

எழுமையும் ஏமாப் புடைத்து

b)

மாடல்ல மற்ற யவை

c)

தீமை இலாத சொலல்

d)

தீயினும் அஞ்சப் படும்

21.

“ தேவா, கவலைப்படாதே. அக்கறையுடன் நீ பயிற்சிகளை மேற்கொண்டால் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.”


மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

வருந்தினால் வாராதது எதுவும் இல்லை

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

நிறைகுடம் தளும்ப்பாது.

22.

பணக்காரர்களுக்கானச் சிறப்பு, சுற்றியுள்ள உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.


மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கை யாது?

a)

தந்த சொல் மிக்க மந்திரம் இல்லை

b)

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.

c)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

23.

அனைத்து செல்வங்களைவிட அழியாத செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமே.


மேற்காணும் பொருளுக்கேற்ற திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெர்வு செய்க.

a)

தீயினும் அஞ்சப் படும்

b)

ஞாலத்தின் மாணப் பெரிது

c)

மாடல்ல மற்றை யவை

24.

கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்


மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற உலகநீதி யாது

a)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

b)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

c)

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

d)

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.

25.

கோறனி தொற்றால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், சில தரப்பினர்கள் பொய் தகவல்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.


இச்சூழலுக்குப் பொருந்தாத உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

இலைமறை காய்போல

c)

காட்டுத் தீ போல

26.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.


வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

கடகட

b)

பளீர்பளீர்

c)

தடதட

d)

மடமட

27.

அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதியோடு தொடர்புள்ள திருக்குறளைத் தேர்ந்தெடு.

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

b)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

d)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

28.

எ + யானை =


சேர்த்தெழுதுக

a)

ஏயானை

b)

எய்யானை

c)

எவ்வானை

d)

எவ்யானை

29.

உலகநீதியின் பொருளைத் தேர்ந்தெடு


மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

a)

பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது

b)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்

c)

மனம் போகும் வழியெல்லாம் போக வேண்டும்

d)

மனம் போல பொய் சொல்ல வேண்டாம்

30.

பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்.

a)

கை கூடுதல்

b)

ஈவிரக்கம்

c)

கரைத்துக் குடித்தல்

d)

தட்டிக் கழித்தல்

31.

வாய்மை எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

மாற்றம்

b)

உண்மை

c)

பொய்

d)

வண்ணம்

32.

சேர்த்தெழுதுக.


கண் + இமை =

a)

கண்இமை

b)

கண்ணிமை

c)

கணிமை

d)

கணீமை

33.

பிரித்தெழுதுக


கற்றணை

a)

கற்று + இணை

b)

கல் + இணை

c)

கல் + அணை

d)

கற்+ அணை

34.

சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.


பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.

a)

எனவே

b)

ஆகவே

c)

இருப்பினும்

d)

ஏனென்றால்

35.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி


எனத் தொடங்கும் செய்யுளில் எந்த ஐம்பூதம் முதலாகக் குறிக்கப்படுகிறது?

a)

காற்று

b)

ஆகாயம்

c)

நிலம்

d)

நீர்

36.

கம்பராமாயணத்தில் எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?

a)

ஆயிரம்

b)

பத்தாயிரம்

c)

பன்னிரெண்டாயிரம்

d)

இருபதாயிரம்

37.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

38.

சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


அண்ணன் உண்டியலில் சேமித்து வைத்தப் பணத்தைத் தம்பி எடுக்கும் தருணத்தில் அப்பாவிடம் பிடிபட்டான்.

a)

கரைத்துக் குடித்தல்

b)

பெயர் பொறித்தல்

c)

திட்ட வட்டம்

d)

கையும் களவுமாய்

39.

சேர்த்தெழுதுக.


உள் + பூசல்

a)

உள்பூசல்

b)

உல்பூசல்

c)

உட்பூசல்

d)

உப்பூசல்

40.

இடுக்கண் எனும் சொல்லின் பொருளைக் கண்டறி.

a)

இடுங்கிய கண்

b)

இன்பம்

c)

துன்பம்

d)

இரண்டு கண்

41.

1.கீழ்க்காணும் குழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.


மகாபாரதக் கதையில், வறுமையில் வாடிய தம் நண்பர் குசேலர் தம்மிடம் யாசகம் கேட்கும் முன்பே அளவிட இயலாத அளவுக்குச் செல்வத்தை வாரி வழங்கினார் கண்ணபிரான்.

a)

A எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்

b)

B செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்

c)

C வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு

d)

D.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

42.

2. கீழ்க்காண்பனவற்றுள் இணைமொழி சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A அன்றும் இன்றும் படித்த மாறன் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான்

b)

B கதிரவன் சாலையைக் கடப்பதற்குமுன் அங்கும் இங்கும் பார்த்தான்

c)

C வளர்மதி எழுதிய கட்டுரையின் குறை நிறைகளை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்

43.

3.கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் கிரந்த எழுத்துகள் மட்டும் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க

a)

A.ஐஸ்வர்யம்,

பக்க்ஷி,

விஷம்,கர்ஜனை

b)

B.புஷ்பம், ரோஜா,ஷண்பகம்,சாமந்தி

c)

C.ஜனவரி,ஜூலை,ஆகஸ்டு,நவம்பர்

d)

D.கிருஷ்ணன், மஹாதேவன், சிவன்,சரஸ்வதி

44.

கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க


ஈ , ஊ ,ஐ,ஒள


a)

A உயிர் நெடில் எழுத்துகள்

b)

B உயிர்க் குறில் எழுத்துகள்

c)

C வல்லின மெய் எழுத்துகள்

d)

D மெல்லின மெய் எழுத்துகள்

45.

5.சரியான விடையைத் தெரிவு செய்க

a)

A மண் + குடம் = மண்குடம்

b)

B கல் + பாறை = கட்பாறை

c)

C முள் + செடி = முட்செடி

d)

D பொன் + பானை = பொன்பானை

46.

6.உயர்திணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க

a)

A ஆண்பால், பெண்பால், பலவின்பால்

b)

B ஆண்பால், பெண்பால், பலர்பால்

c)

C பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்

d)

D ஒன்றன்பால், பலர்பால், பலவின்பல்

47.

7.கீழ்க்காணும் வாக்கியத்தில் காலியிடத்திற்கு ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க


பள்ளிகளுக்கிடையிலான காற்பந்துப் போட்டியில் பார்த்திபன் மிகச் சிறப்பாக விளையாடினான். ……………………….. , மாவட்டப் போட்டிக்கு அவன் தேர்வாகவில்லை.

a)

A எனவே

b)

B ஆகவே

c)

C மேலும்

d)

D இருப்பினும்

48.

8.வேற்றுமை உருபைச் சரியாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A. 2ஆம் வேற்றுமை உருபு - மாலா பள்ளிக்குச் சென்றாள்,

b)

B. 4ஆம் வேற்றுமை உருபு - நாய் தண்ணீரைத் தேடி அலைந்தது.

c)

C. 2ஆம் வேற்றுமை உருபு - யானைக்குப் பெரிய தந்தம் உண்டு.

d)

D. 4ஆம் வேற்றுமை உருபு - அவனுக்குக் கடுமையான வயிற்றுவலி.

49.

9.கீழ்க்காண்பனவற்றுள் வினையடை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A இளமாறன், இனிமையான பாடலைப் பாடினார்.

b)

B இளமாறன், பாடலை இனிமையாகப் பாடினார்.

c)

C இளமாறன், பாடிய பாடல் இனிமையானது.

d)

D இளமாறன், இனிய பாடலைப் பாடினார்.

50.

10.கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க


அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.

a)

A. மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.

b)

B நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.

c)

C அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.

d)

D. நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை

51.

11.கீழ்காணும் கருத்துக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க


துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்

a)

A. ஏறு போல் நட

b)

B. ஆண்மை தவறேல்

c)

C. இளைத்தல் இகழ்ச்சி

d)

D. உடலினை உறுதிசெய்

52.

12.கீழ்க்காணும் சொற்றொடருக்கு எதிர்மறையான கருத்தைக் கொண்டுள்ள மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


எண்ணித் துணிக கருமம்

a)

A கரைத்துக் குடித்தல்

b)

B கண்ணும் கருத்தும்

c)

C அவசரக் குடுக்கை

d)

D முழு மூச்சு

53.

13.பொருத்தமான மரபுத்தொடரை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A படிப்பிலும் விளையாட்டிலும் பல பரிசுகளைப் பெறும் மகனைப் பார்த்துப் பரிமளா உச்சிக் குளிர்ந்தாள்.

b)

B பூப்பந்தாட்டப் போட்டியில் தான் வெற்றிப் பெறப் போவதாக மாறன் கடுக்காய் கொடுத்தான்.

c)

C குமரன் ஆழம் பார்த்துப் பணத்தைச் சேமித்துத் தான் விரும்பிய மிதிவண்டியை வாங்கினான்.

d)

D முகிலரசி ஒரு செயலைக் கிள்ளுக் கீரையெனத் தொடங்கிவிட்டு அதனை முடிக்க முடியாமல் திண்டாடுவாள்.

54.

14.நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும் என்னும் பழமொழிக்கு ஈடான உவமைத்தொடரைத் தெரிவு செய்க

a)

A மலரும் மணமும் போல

b)

B இலைமறை காய் போல

c)

C குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

D சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

55.

15.கோடிடப்பட்ட செய்யுள் வரியின் பொருளைத் தெரிவு செய்க


நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

A இல்லாவிடினும் அவர் குறையை வெளியில் சொல்லக் கூடாது.

b)

B.நல்லவராக இல்லாவிடினும் அடக்கமானவராக நாம் இருக்க வேண்டும்.

c)

C .நல்லவராக இல்லாவிடினும் நாம் அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும்.

d)

D.நல்லவராக இல்லாவிடினும் நாம் அடங்கிப் போகுபவராக இருக்கக் கூடாது.