NEW
Font size
Worksheetsபழமொழி ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 10mins
1. குற்றம் செய்தவரின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
தனிமரம் தோப்பாகாது
சிக்கனம் சீரளிக்கும்
2. அளவுக்கு மீறி செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிக்கனம் சீரளிக்கும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
3. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
முறையாக எதையும் பயிற்சி செய்து வந்தால் அதில் வல்லமை பெறலாம்.
ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
தனியாக வாழ பழக வேண்டும்.
4. சிறு துரும்பும் பல் குத்த உதவும்
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே சாதித்துக்கொள்ள வேண்டும்
தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்
தேவையற்றது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்
5. இப்படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
ஒற்றுமையே பலம்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
6. இப்படம் எதை உணர்த்துகிறது?
சிக்கனம் தூற்றிவிடும்
சிக்கனம் சீரளிக்கும்
சிக்கனம் தேவையில்லை
7. சுண்டெலியை அற்பமான உயிர் என சிங்கம் நினைத்தது. ஆனால், சிங்கம் வளையில் சிக்கிக் கொண்டபோது சுண்டெலிதான் காப்பாற்றியது.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிறு துளி பெரு வெள்ளம்
சிறு துரும்பும் பல் குத்த உதவாது
8. சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று சுயமாகக் கடை ஒன்றை வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிக்கனம் சீரளிக்கும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
9. அருளினி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து உணர்ந்தாள்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
10. மாலனின் புத்தகத்தைத் திருடிய வேலனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
காற்றுள்ள் போதே தூற்றிக் கொள்
சிறு துளி பெரு வெள்ளம்
