NEW
Font size
Worksheetsஆகஸ்டு மாத சிவனருள் புதிர் போட்டி
Total questions: 10
Worksheet time: 4mins
1. இந்திய மதங்களில் மக்கள் எத்தனை வகையான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழுகின்றன?
இரண்டு
மூன்று
ஐந்து
2. பிற உயிர்களைக் கொல்வதும் புலால் உண்பதும் குற்றம் எனக் கண்டிக்கின்றவர் யார்?
தொல்காப்பியர், அகத்தியர்
திருவள்ளுவர், வள்ளலார்
திருவள்ளுவர்,
திருமூலர்
3. 'கற்ற பின் நிற்கவே கல்வி' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள திருக்குறளை தேர்வு செய்க.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
4. எல்லா மொழிகளுக்கும் அகரம் ஏன் முதல் ஆனது?
இதழ், நா ஆகியவற்றின் அசைவுகளால் பிறப்பதால்.
அகரமாகிய உயிரெழுத்து தானே தனித்து இயங்காது.
அகரம் இதழ்,நா ஆகியவற்றின் அசைவுகள் ஏதும் இன்றி வாயைத் திறந்த அளவில் பிறப்பதால்.
5. சடமாகிய உலகங்கள் தாமே தோன்றி, நின்று, அழியா.
தவறு
சரி
6. உடல், உலகம் எப்படி தோற்றுவிக்கப்பட்டவை?
உடல், உலகம் தாமே தோன்றியவை
உடல், உலகம் என்றும் உள்ளதாகிய பொருள்
ஆதி என்னும் பகவனால் தோற்றுவிக்கப்பட்டவை
7. கடவுள் வாழ்த்தின் முதற் குறள் எதை சுட்டிக்காட்டுகிறது?
ஆணவம் உண்மை
உயிர் உண்மை
கடவுள் உண்மை
8. கீழ்க்கண்ட வற்றில் அகவழிபாட்டுச் செந்தனையைக் குறிப்பிடாத அப்பர் தேவாரத்தை தேர்வு செய்க.
காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கையில் கோலக் காவுளான்.
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
9. சடப்பொருள்களின் தன்மை யாது?
உயிரற்றவை,
செயல்பட முடியாது
உயிர் உண்டு, செயல்பட முடியாது
உயிரற்றவை, செயல்பட முடியும்
உயிர் உண்டு, செயல்பட முடியும்
10. உலகம் இயற்கையா? செயற்கையா?
என்றும்
உள்ளது
இயற்கை
செயற்கை
