NEW
Font size
Worksheetsபாடம் 15-09-2022 படிவம் 1
Total questions: 20
Worksheet time: 7mins
திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
____________ எனக்கேட்ட தாய்.
சான்றோன்
ஆன்றோன்
ஆன்றோர்
சான்றோர்
பாகுபாட்டைக் குறிக்கும் இணைமொழி யாது ?
அகமும் புறமும்
தங்கு தடை
உயர்வு தாழ்வு
கள்ளங்கபடு
பின்வரும் சூழலுக்குப் பொருத்தமான மரபுதொடர் எது ?
பெரியவர் : மணமக்களே, நீங்கள் இருவரும் பன்னெடுங்காலம் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வீர்களாக. உங்களுடைய தலைமுறைகளும் உங்களைப் போலவே சிறப்புடன் வாழ்வார்களாக !
வாழையடி வாழை
ஏட்டிக்குப் போட்டி
உச்சி குளிர்தல்
கானல் நீர்
திருக்குறளின் முதலடியில் சிவப்பு நிறச் சொல்லின் மிகச் சரியான பொருள் யாது ?
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
பெருந்துயர்
பெருமகிழ்ச்சி
கர்வம்
இறுமாப்பு
கீழ்க்காணம் உரையாடலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
அமுதன் : சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் என வள்ளுவர் ஏன் கூறினார் ?
கபிலன் : வீண் பேச்சும் பயனற்ற பேச்சும் எந்தப் பயனையும் நமக்குத் தாரா என்பதால்தான்.
ஏட்டிக்குப் போட்டி
வெட்டிப் பேச்சு
அரைப் படிப்பு
கானல் நீர்
வெட்டிப் பேச்சு எனும் மரபுத்தொடருக்குப் பொருத்தமான விளக்கம் எது ?
எதிர்த்துப் பேசுதல்
பயனற்ற பேச்சு
அரைப் படிப்பு
கானல் நீர்
அரைப்படிப்பு எனும் மரபுத்தொடர் எதைக் குறிக்கிறது ?
இடைநிலைக் கல்வியை
அனுபவக் கல்வியை
நிரம்பாக் கல்வியை
ஏட்டுக் கல்வியை
_______________ இன்றி சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதைப் பார்க்கவே பரவசமாக உள்ளது.
தங்குதடை
கள்ளங்கபடு
நோய்நொடி
உயர்வு தாழ்வு
அந்த முதியவர் தினமும் உடற்பயிற்சி செய்வதால் ____________ இல்லாமல் திடமாக இருக்கிறார்.
தங்குதடை
உயர்வு தாழ்வு
கள்ளங்கபடு
நோய்நொடி
சீதையைக் கண்ட அந்த நொடியிலேயே அவளுடைய உடலும் உள்ளமும் எப்படிப்பட்டது என்பதை இராமன் உணர்ந்தான்.
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
தங்கு தடை
நாணிக் கோணி
போராட்டத்தைச் சந்திக்கத் தயாராக இருந்தால் வாழ்க்கையில் எந்த ____________ ஏற்பட்டாலும் எளிதாகத் தாண்டிச் செல்லலாம்.
நோய்நொடி
கள்ளங்கபடு
தங்குதடை
உயர்வு தாழ்வு
தன் அண்ணன் புதிய மகிழுந்து வாங்கியதைக் கண்ட அருள்செல்வன் ______________ தானும் ஒரு மகிழுந்தை வாங்கி வந்தான்.
வாழையடி வாழையாக
ஏட்டிக்குப் போட்டியாக
தோள் கொடுத்து
வெட்டிப் பேச்சாக
அமுதரசியின் திருமணம் இனிதே நடந்தேற குடும்பத்தினர் அனைவரும் ____________ உதவினர்.
தோள் கொடுத்து
வாழையடி வாழையாக
ஏட்டிக்குப் போட்டியாக
அரைப்படிப்பாக
அறிவழகி : மழை மட்டும் பெய்யாமல் இருந்தால், ஓட்டப்பந்தயத்தில் நான் முதலாவதாக வந்திருப்பேன்.
கனிமொழி : அப்படியா ?
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஆசிரியர் : மாணவர்களே, சிரத்தையோடு படியுங்கள். நல்ல நூல்களைத் தேடிப் படியுங்கள். சிறந்த நூல்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகும். நாமும் சிறந்து விளங்கலாம்.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
தன் கையே தனக்குதவி
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
கணடதைக் கற்கப் பண்டிதனாவான்
பொருள்களின் விலை _________ ஏற்றம் கண்டு வருவதால் அனைவருக்கும் பாதிப்பே ஏற்படும்.
கிடு கிடுவென
கட கடவென
வெட வெடவென
நச நசவென
மழையில் முழுக்க நனைந்துவிட்ட, முருகனின் உடல் ________ ஆடியது.
நச நசவென
கிடு கிடுவென
கட கடவென
வெட வெடவென
உடற்கல்வி பாடவேளைக்குப் பின் வியர்வையால் உடல் ________ இருந்ததால் மாணவர்கள் மின்விசிறியின் கீழ் அமர்ந்து இளைப்பாறினர்.
கிடு கிடுவென
கட கடவென
நச நசவென
வெட வெடவென
இதுவரை ______________________ இருந்த சிரேஷின் அம்பு விடும் ஆற்றல் அமெரிக்க வீரரை வீழ்த்தியதன் மூலம் வெளிப்பட்டது.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல
புதுமணத் தம்பதிகளை __________________ வாழ்வதுடன் பதினாறு பேறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டுமெனப் பெரியோர் வாழ்த்தினர்.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல
