wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2_ஒளியியல்

Total questions: 26

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளிவிலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

a)

A

b)

B

c)

C

d)

D

2.

பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

a)

f

b)

ஈறிலாத் தொலைவு

c)

2f

d)

f க்கும் 2f க்கும் இடையில்

3.

மின்விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு ஒளியூட்டப்படும்போது, குவி லென்சானது

a)

விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

b)

குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

c)

இணைக் கற்றைகளை உருவாக்கும்

d)

நிறக் கற்றைகளை உருவாக்கும்

4.

குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ____ மதிப்புடையது.

a)

நேர்க்குறி

b)

எதிர்க்குறி

c)

நேர்க்குறி (அ) எதிர்க்குறி

d)

சுழி

5.

ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்படும் இடம் ____

a)

முதன்மைக் குவியம்

b)

ஈறிலாத் தொலைவு

c)

2f

d)

f க்கும் 2f க்கும் இடையில்

6.

ஒரு லென்சின் திறன் 4 D எனில் அதன் குவியத் தொலைவு

a)

4 மீ

b)

-40 மீ

c)

0.25 மீ

d)

-2.5 மீ

7.

கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது ____ தோற்றுவிக்கப்படுகிறது.

a)

விழித்திரைக்குப் பின்புறம்

b)

விழித்திரையின் மீது

c)

விழித்திரைக்கு முன்பாக

d)

குருட்டுத் தானத்தில்

8.

விழி ஏற்பமைவுத்திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

a)

குவி லென்சு

b)

குழி லென்சு

c)

குவி ஆடி

d)

இரு குவிய லென்சு

9.

சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது

a)

5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு

b)

5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழிலென்சு

c)

10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு

d)

10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழிலென்சு

10.

ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும் நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலைநீளங்கள் VB, VG,VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

a)

VB = VG = VR

b)

VB > VG > VR

c)

VB < VG < VR

d)

VB < VG > VR

11.

ஒளிக்கதிரின் பாதை ____ என்று அழைக்கப்படுகிறது.

a)

ஒளிவிலகல்

b)

ஒளி எதிரொளிப்பு

c)

ஒளிக்கதிர்

d)

ஒளி

12.

ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றைவிட ____.

a)

குறைவு

b)

அதிகம்

c)

சமம்

d)

சுழி

13.

படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும், சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால், அது ____ சிதறல் எனப்படும்.

a)

மீட்சிச்

b)

ஒளிச்

c)

ஒலிச்

d)

ஏதுமில்லை

14.

ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது படுகின்ற ஒளிக்கதிரின் ____ நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.

a)

அலைக்கதிரின்

b)

அலைவரிசையின்

c)

அதிர்வெண்ணின்

d)

அலைநீளத்தின்

15.

____ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

a)

விழித்திரை

b)

கருவிழி

c)

ஐரிஸ்

d)

விளி வெண்படலம்

16.

ஒளியின் திசைவேகமானது அடர்வு குறைந்த ஊடகத்தை விட, அடர்வு மிகு ஊடகத்தில் ____ இருக்கும்.

a)

குறைவாக

b)

அதிகமாக

c)

சமமாக

d)

சுழியாக

17.

லென்சின் திறனானது அதன் ____ சார்ந்தது.

a)

வளைவு தூரத்தை

b)

குவிய தொலைவைச்

c)

வளைவு மையத்தைச்

d)

ஆடி மையத்தைச்

18.

விழி லென்சின் குவிக்கும் திறன் ____ தூரப்பார்வை ஏற்படுகிறது.

a)

குறைவதால்

b)

அதிகரிப்பதால்

c)

மங்குவதால்

d)

இருகுவதால்

19.

____ ஆனது எப்போதும் சிறிய மாய பிம்பத்தையே உருவாக்கும்.

a)

குவி ஆடி

b)

குழி லென்ஸ்

c)

குழி ஆடி

d)

குவி லென்ஸ்

20.

பொருத்துக

a)

விழித்திரை

1.

ரெட்டினா

b)

கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை

2.

கண் பாவை

c)

விழி ஏற்பமைவுத் திறன்

3.

சிலியரித் தசைகள்

d)

சேய்மைப் புள்ளி விழியை நோக்கி நகர்தல்

4.

கிட்டப்பார்வை

e)

அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல்

5.

தூரப்பார்வை

21.

ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால், அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் ____ இருக்கும்.

a)

அதிகமாக

b)

சமமாக

c)

சுழியாக

d)

குறைவாக

22.

ஊடகத்தின் ஒளி விலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு ____ தகவில் இருக்கும்.

a)

நேர்

b)

எதிர்

c)

சம

d)

சுழி

23.

விழி லென்சின் குவிக்கும் திறன் ____ கிட்டப்பார்வை ஏற்படுகிறது.

a)

குறைவதால்

b)

அதிகரிப்பதால்

c)

மங்குவதால்

d)

இருகுவதால்

24.

கிட்டப்பார்வை குறைபாட்டை சரிசெய்ய ____ பயன்படுத்தப்படுகிறது.

a)

குவி லென்ஸ்

b)

இரு குவிய லென்சு

c)

குழி லென்ஸ்

d)

குவி ஆடி

25.

தூரப்பார்வை குறைபாட்டை சரிசெய்ய ____ பயன்படுத்தப்படுகிறது.

a)

குவி லென்ஸ்

b)

இரு குவிய லென்சு

c)

குழி லென்ஸ்

d)

குவி ஆடி

26.

வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி வழியாகச் செல்லும்போது ஒளிவிலகல் அடைந்து பல்வேறு நிறங்களாக பிரியும் நிகழ்வு____

a)

நிறப்பிரிகை

b)

நிறமாலை

c)

ஒளி சிதறல்

d)

எதிரொளிப்பு

Similar Resources on Wayground