wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SCIENCE YEAR 6

Total questions: 25

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

_________ என்பது ஒரு பொருள் கீழே விழாமல் தன் ஆரம்ப நிலையிலே நிலைத்திருப்பதாகும்.

a)

உறுதித்தன்மை

b)

நிலைத்தன்மை

2.

________ நிலைத்தன்மை கொண்ட பொருள்கள் எளிதில் கீழே விழும்.

a)

அதிக

b)

நிறைய

c)

குறைந்த

d)

மிகுதியான

3.

ஒரு கட்டடத்தின் நிலைத்தன்மைக்கு அதன் உயரமும், ________ காரணமாகின்றன.

a)

அடித்தள பரப்பளவும்

b)

வடிவமும்

c)

நீளமும்

4.

_______ பரப்பளவைக் கொண்ட கட்டடங்களை விட _______ பரப்பளவைக் கொண்ட கட்டடங்கள் நிலைத்தன்மையற்று இருக்கும்.

a)

குறுகிய , அகலமான

b)

அகலமான , குறுகிய

5.

ஒரு கட்டடத்தின் ________ அதன் கட்டுமானப் பொருள்களும் வடிவமும் காரணமாகின்றன.

a)

நிலைத்தன்மைக்கு

b)

உறுதித்தன்மைக்கு

6.

_________ , ________ , _________ ஆகியவை கட்டுமானத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.

a)

நெகிழி,ஆடி,காகிதம்

b)

கற்காரை,இரும்பு,எஃகு

7.

________ மற்றும் வில் போன்ற வடிவம் உறுதித்தன்மை கொண்டது.

a)

நேரான

b)

வளைவான

c)

உயரமான

8.

ஒட்டகச்சிவிங்கி நீர் அருந்தும்போது அதன் காலை அகலப் பரப்பிக் கொள்ளும்.

இதன் காரணம் யாது?

a)

அதன் அளவைக் குறைக்க

b)

தன்னை உறுதியாக்கிக் கொள்ள

c)

அதன் எடையை அதிகரிக்க

d)

அதன் அடித்தளப் பரப்பளவை அதிகரிக்க

9.

உணவுப் பதனிடுதல் என்றால் என்ன?

a)

உணவு குறைந்த நாட்கள் கெடாமல் இருக்க செய்யும் வழிமுறையாகும்.

b)

உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க செய்யும் வழிமுறையாகும்.

c)

உணவு நீண்ட நாட்கள் கெட வேண்டும் என்பதற்கான வழிமுறையாகும்.

10.

கெட்டுப் போன சோறின் தன்மை எப்படி இருக்கும்?

a)

நிறமாற்றம் , வழவழப்புத் தன்மை

b)

வாடை , சுவை

c)

வாடியிருத்தல் , பூஞ்சணம் பூத்தல்

11.

உணவு ஏன் கெடுகிறது?

a)

நச்சியமும் குச்சியமும் உணவுப் பொருள்களை கெடச் செய்கிறது.

b)

உணவுப் பொருள்கள் சொந்தமாகவே கெடும்.

c)

பூஞ்சணமும் குச்சியமும் உணவுப் பொருள்களை கெடச் செய்கிறது.

12.

உணவுகள் எப்படிக் கெடுகின்றன?

a)

நீர் , காற்று , மிதமான வெப்பநிலை , ஊட்டச்சத்து , ஏற்ற நிலைத்தன்மை

b)

நீர் , காற்று , வெயில் , தாதுச் சத்து , ஏற்ற காரத்தன்மை

c)

நீர் , காற்று , மிதமான வெப்பநிலை , தாதுச் சத்து , ஏற்ற காடித்தன்மை

13.

சரியான விடையைத் தெரிவு செய்க. உலர்த்துதல்

a)

மீன் , மிளகாய் , அரிசி

b)

மீன் , பால் , கோழி

c)

மீன் , பழம் , முட்டை

14.

பாஸ்டர் முறையில் பதனிடும் உணவு என்ன? சரியான விடையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
15.

காற்று நீக்கிப் பொட்டலமிடுதலின் மூலம் பதனிடும் உணவு என்ன? சரியான விடையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
16.

கொதிக்க வைத்தலின் விளக்கம் என்ன?

a)

உணவுப் பொருள்களில் உள்ள நீர் அகற்றப்படுகின்றது. காய்ந்த உணவுப் பொருள்களில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்.

b)

உணவுப் பொருள்களைச் சூடாக்குவதன் மூலம் நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. கொதிக்க வைத்தலின் மூலம் குச்சியங்கள் கொல்லப்படுகின்றன.

c)

உணவை வெப்பப்படுத்தி அதனை காற்றுப் புகாத கலன்களில் அடைப்பதாகும். நுண்ணுயிர்கள் கொல்வதற்கு அந்த உணவுகள் கொதிக்க வைக்கப்படும்.

17.

மேற்காணும் உணவை எவ்வாறு பதனிடலாம்.

a)

குளிர்ந்துறையச் செய்தல்

b)

மெழுகிடுதல்

c)

உப்பேற்றம்

18.

மேற்காணும் உணவை எவ்வாறு பதனிடலாம்.

a)

புகையிடுதல்

b)

ஊறவைத்தல்

c)

கொதிக்க வைத்தல்

19.

உணவுப் பதனிடும் தொழில்நுட்பத்தின் அவசியம் என்ன?

a)

குறைந்த நாள் கெடாமல் பாதுகாப்பதோடு உணவு விரயத்தையும் எதுவும் செய்யாது.

b)

அதிக நாள் கெட வைத்து உணவு விரயத்தையும் அதிகரிக்கும்.

c)

அதிக நாள் கெடாமல் பாதுகாப்பதோடு உணவு விரயத்தையும் தடுக்கலாம்.

20.

கார் பந்தயத்திற்குச் செல்லும் கார்கள், மற்ற கார்களை விட குட்டியாகக் காட்சியளிகின்றன. ஏன்?

a)

பார்ப்பவர்களைக் கவர

b)

நிலைத்தன்மை வாய்ந்ததாக இருக்க

c)

கனமாக இருக்க

d)

வேகமாக பணிக்க

21.

பின்வருவனவற்றுள் எது அறுவடை இயந்திரத்தின் நன்மையைக் காட்டுகிறது?

a)

வேலையாட்களின் செலவைக் குறைக்க

b)

காற்று தூய்மைக்கேட்டைக் குறைக்க

c)

வெட்டுமர நடவடிக்கையைக் குறைகிறது

d)

பெட்ரோலியம் பயன்பாட்டைக் குறைக்கிறது

22.

கீழ்க்காண்பனவற்றுள் எது புணரமைத்தலைக் குறிகிறது?

a)

பாதுகாக்கப்பட்ட காடுகளை அமைத்தல்

b)

பராமரிப்பு மையங்களை அமைத்தல்

c)

தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்களை வெட்டுதல்

d)

முற்றழிவை எதிர்நோக்கும் உயிரினங்களைப் பாதுகாத்தல்

23.

மரத்தில் வளரும் ஆர்கிட் செடி எந்த வகையான தாவரத்தின் தொடர்பினைக் குறிக்கிறது?

a)

பரிமாற்று வாழ்வு

b)

ஒத்துழைப்பு

c)

வேற்றின இணை வாழ்வு

d)

ஒட்டுண்ணி வாழ்வு

24.

கீழ்க்காண்பவை இரட்டைக்கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான பொருள்கள். ஒன்றைத் தவிர ...............................

a)

கற்காரை

b)

இரும்பு

c)

எஃகு

25.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தைக் கட்டுவதற்கு ஏறக்குறைய 36,910 டன் ..................... தேவைப்பட்டது.

a)

எஃகு

b)

இரும்பு

c)

கற்காரை

d)

நெகிழி