Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10. வேதிவினைகளின் வகைகள்

Total questions: 25

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது

a)

சிதைவுறுதல் வினை

b)

சேர்க்கை வினை

c)

ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

d)

இரட்டை இடப்பெயர்ச்சி வினை

2.

ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

a)

வெப்பம்

b)

மின்னாற்றல்

c)

ஒளி

d)

எந்திர ஆற்றல்

3.

கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. C(s) + O2(g) → CO2(g) . இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படுகிறது?

a)

சேர்க்கை வினை மற்றும் எரிதல் வினை

b)

சேர்க்கை வினை மற்றும் மீளா வினை

c)

சேர்க்கை, எரிதல் மற்றும் மீளா வினை

d)

சேர்க்கை, எரிதல் மற்றும் சிதைவுறுதல் வினை

4.

Na2SO4(aq) + BaCl2 (aq) → BaSO4(s) + 2NaCl (aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது?

a)

நடுநிலையாக்கல் வினை

b)

எரிதல் வினை

c)

வீழ்படிவாதல் வினை

d)

ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

5.

வேதிச்சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?

i) இயக்கத் தன்மை உடையது

ii)சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்

iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை

iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.

a)

அ. i,ii மற்றும் iii

b)

ஆ. i,ii மற்றும் iv

c)

இ. ii,iii மற்றும் iv

d)

i,iii மற்றும் iv

6.

X (s) + 2HCl (aq) → XCl2 (aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது?

i) Zn

ii) Ag

iii) Cu

iv) Mg

சரியான இணையைத் தேர்ந்தெடு.

a)

i மற்றும் ii

b)

ii மற்றும் iii

c)

iii மற்றும் iv

d)

i மற்றும் iv

7.

பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்” வகை அல்ல?

a)

C(s) + O2(g) → CO2(g)

b)

2K(s) + Br2(l) → 2KBr(s)

c)

2CO(g) + O2(g) → 2CO2(g)

d)

4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

8.

கீழ்க்கண்டவற்றுள் எது வீழ்படிவாதல் வினையைக் குறிக்கிறது?

a)

A(s) + B(s) → C(s) + D(s)

b)

A(s) + B(aq) → C(aq) + D(l)

c)

A(aq) + B(aq) → C(s) + D(aq)

d)

A(aq) + B(s) → C(aq) + D(l)

9.

ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-)ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?

a)

1 x 10-3 M

b)

3 M

c)

1 x 10-11 M

d)

11 M

10.

தூளாக்கப்பட்ட CaCO3 கட்டியான CaCO3 யைவிட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்

a)

அதிக புறப்பரப்பளவு

b)

அதிக அழுத்தம்

c)

அதிக செறிவினால்

d)

அதிக வெப்பநிலை

11.

அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ____ என்று அழைக்கப்படுகிறது?

a)

நடுநிலையாக்கல் வினை

b)

எரிதல் வினை

c)

வீழ்படிவாதல் வினை

d)

ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

12.

ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினைபுரியும்போது ____ வாயு வெளியேறுகிறது.

a)

ஹைட்ரஜன்

b)

குளோரின்

c)

நைட்ரஜன்

d)

ஆக்ஸிஜன்

13.

பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை ____ என்று அழைக்கப்படுகிறது.

a)

உயிரியல் சமநிலை

b)

வேதியியல் சமநிலை

c)

இயற்பியல் சமநிலை

d)

இயற்கை சமநிலை

14.

ஒரு பழச்சாறின் pH மதிப்பு 5.6, இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும்போது இதன் pH மதிப்பு ____

a)

குறைகிறது

b)

அதிகமாகிறது

c)

மாற்றம் இல்லை

d)

சுழியாகிறது

15.

250C வெப்பநிலையில் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு ____

a)

4 x 10-14 மோல்2 டெசிமீ-6

b)

3 x 10-14 மோல்2 டெசிமீ-6

c)

1 x 10-14 மோல்2 டெசிமீ-6

d)

2 x 10-14 மோல்2 டெசிமீ-6

16.

மனித இரத்தத்தின் பொதுவான pH மதிப்பு ____

a)

7

b)

7.1

c)

7.4

d)

7.3

17.

மின்னாற்பகுப்பு என்பது ____ வகை வினையாகும்.

a)

சிதைவுறுதல்

b)

நடுநிலையாக்கல்

c)

வேதியியல்

d)

மின்னாற்சிதைவு

18.

தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்களின் எண்ணிக்கை ____

a)

இரண்டு

b)

ஒன்று

c)

மூன்று

d)

நான்கு

19.

வேதி எரிமலை என்பது ____ வகை வினையாகும்.

a)

சிதைவுறுதல்

b)

நடுநிலையாக்கல்

c)

வேதியியல்

d)

மின்னாற்சிதைவு

20.

ஹைட்ரஜன் (H+)அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி ____ என்று அழைக்கப்படுகிறது.

a)

ஹைட்ரஜன் அயனி

b)

ஹைட்ராக்சைடு அயனி

c)

புரோட்டான் அயனி

d)

நியூட்ரான் அயனி

21.

பொருத்துக:

a)

நடுநிலையாக்கல் வினை

1.

NH4OH (aq) + CH3COOH(aq) → CH3COONH4 (aq) + H2O (l)

b)

ஒற்றை இடப்பெயர்ச்சி

2.

Zn(s) + CuSO4(aq) → ZnSO4(aq) + Cu(s)

c)

வெப்பச் சிதைவு வினை

3.

ZnCO3(s) → ZnO (s) + CO2 (g)

d)

எரிதல் வினை

4.

C2H4(g) + 4O2(g) → 2CO2(g) + 2H2O(g) + வெப்பம்.

22.

சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைட்ரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி ____

a)

செய்யும்

b)

செய்யாது

c)

வினைபுரியும்

d)

வினைபுரியாது

23.

SO3, CO2, NO2 போன்ற வாயுக்கள் கரைந்துள்ளதால் மழைநீரின் pHமதிப்பு 7 - யை விட _____ இருக்கும்.

a)

அதிகமாக

b)

சமமாக

c)

குறைவாக

d)

தெரியவில்லை

24.

ஒரு மீள் வினையின் சமநிலையில் வினைவிளை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு எப்போதும் ____ இருக்கும்.

a)

அதிகமாக

b)

குறைவாக

c)

சமமாக

d)

மிகக்குறைவாக

25.

pH தாளை அமில கரைசலில் நனைக்கும் பொழுது சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமாக மாறுகிறது எனில் காரக் கரைசலில் நனைக்கும் பொழுது ____ நிறங்களாக மாறும்

a)

பச்சை

b)

கரு ஊதா,ஊதா, நீலம்

c)

ஊதா, பச்சை,நீலம்

d)

நீலம்,மஞ்சள்,பச்சை