wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7/4/2023 bahasa tamil

Total questions: 4

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

வாழைமரம்

a)

வாழை மரம் ஒரு பயனுள்ள தாவரமாகும். இம்மரத்தின் எல்லாப் பகுதிகளும் நமக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. இம்மரம் வெப்பமும் நீரும் உள்ள இடங்களில் செழித்து வளரும். வாழை மரத்தை மலேசியாவில் அதிகம் பயிர் செய்கிறார்கள்.

b)

மேலும், வாழைப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். நன்கு பழுத்த பழங்களின் தோலை நீக்கிச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் பலகாரங்களும் செய்து சாப்பிடலாம். இது ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். உடல் ஆரோக்கியத்திற்கு வாழைப்பழம் மிகவும் நல்லது.

2.

புத்தகத்தின் பயன்

a)

புத்தகத்திலிருந்து அறிவை மட்டும் நாம் பெறவில்லை. எழுத்தாளரின் பண்பட்ட சிந்தனைகளையும் அனுபவங்களையும் பெறுகின்றோம். ஒரு மனிதனை மாபெரும் மேதையாக்கி புகழ் பெறச் செய்வது புத்தகங்களே என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். அந்த அளவிற்குப் புத்தகம் மனித வாழ்வில் ன்மைகள் முக்கியப் பங்காற்றுகிறது.

b)

இன்று எத்தனையோ வகையான புத்தகங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. கதை, கவிதை, அறிவியல், வரலாறு, வாழ்வியல், இலக்கியம், தன்முனைப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் நமக்குப் பயன் தருகின்றன.

3.

நோயற்ற வாழ்வு

a)

‘நோயற்ற வாழ்வே குறைவற்றசெல்வம்' என்பதற்கேற்ப நாம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்கும் மேலானது எனக் கூறுவர்.

b)

நோயற்ற வாழ்க்கைக்கு உடற்பயிற்சியும் இன்றியமையாததாகும். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் சுறுசுறுப்பாகவும் மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர, உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுபடும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட  உண்மையாகும்.

4.

சுற்றுச்சூழல் தூய்மைகேடு

a)

மற்றொரு முக்கியமான தூய்மைக்கேடு, நீர், நில தூய்மைக்கேடாகும். வீடுகள், வியாபாரத்தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் ஆறு, குளம், ஏரிகள் போன்ற நீர் நிலைகளிலும் நிலத்திலும் சென்று சேர்கின்றன. அந்த நீரைப் பருகும் மனிதர்களும் பலவிதமான நோய்க்கு ஆளாகின்றனர் ஆறு மற்றும் கடலில் இவ்வாறு கலக்கும் பல ரசாயனக் கழிவுகளால் நீர் மாசுபட்டு அதில் வாழும் உயிரினங்களின் உடலில் இந்த ரசாயனங்கள் சேர்கின்றது.

b)

நாகரீகம் வளர மனிதன் ஆற்றங்கரைகளை விட்டு நகர்ந்து காடுகளை அழித்து நகரமாக்கிக் குடியேறினான். இன்றைய நவநாகரீக உலகில் நகரம் என்பது வளர்ந்து கொண்டே செல்கிறது. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுபோல மனிதனின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மனிதனின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வதாக உள்ள நம் பூமி, மனிதனால் உண்டாக்கப்படும் சீர்கேட்டினால் பலவகையிலும் பாதிக்கப்படுகிறது. இதையே 'சுற்றுச்சூழல் நூய்மைக்கேடு' என்று அழைக்கிறோம்.