NEW
Font size
Worksheetsமரபுத்தொடர் இணைமொழிகள்
Total questions: 20
Worksheet time: 10mins
அதிக சுதந்திரம் என்ற பெயரில் சிலர் துப்பாக்கிகளைக் கையிலேந்தி
________________ சிறு குழந்தைகளைச் சுட்டுக் கொல்லும் போக்கினை உலக நாடுகள் வன்மையாகக் கண்டிக்கின்றன.
விருப்பு வெறுப்பின்றி
ஈவிரக்கமின்றி
கங்கு கரையின்றி
யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க சில கருத்துகளை நேரடியாக கூறாமல் _____ கூறுவது நல்லது
சீரும் சிறப்புமாக
கண்டதையும்
கேட்டதையும்
சாடை மாடையாய்
ஒருவர் எவ்வளவு பெரிய செல்வந்தரானாலும் பிறரிடம் எப்போதுமே __________ பேச வேண்டும்.
அடக்க ஒடுக்கத்துடன்
இன்பத் துன்பத்துடன்
மேடு பள்ளத்துடன்
சிலர் வாழ்க்கையில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று _____________ பேசுவார்களே தவிர அதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
ஒருகை பார்த்து
வெட்டிப் பேச்சு
சாக்குப் போக்குகள்
தொழிலாளர்கள் பல முறை போராடியபோதும் அவர்களின் ஊதியத்தை அதிகரிக்க முடியாது என்று முதலாளிகள் _______ கூறிவிட்டனர்.
சீரும் சிறப்புமாக
அழுத்தம் திருத்தமாக
ஆற அமர
மனிதனுக்கு மனிதன் சமம் என்றாலும் இன்னும் பல இடங்களில் ஒருவன் மற்றொருவனைவி உயர்ந்தவன் என்ற ________ இருக்க தான் செய்கிறது.
ஏற்றத் தாழ்வு
நெளிவு சுளிவு
சட்ட திட்டம்
இரண்டு மணி நேரம் மெதுவோட்டம் ஓடிய மாணவர்கள், அதன் முடிவில் _____ காணப்பட்டனர்.
ஒட்டி உலர்ந்து
வற்றி வரண்டு
வாடி வதங்கி
இளைத்து களைத்து
இன்றைய இளைய தலைமுறையினர் பலர் ____ உடலைப் பெற
விரும்பித் தவறான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றத் துவங்குகின்றனர்.
ஒட்டி உலர்ந்த
இளைத்து களைத்த
வாட்ட சாட்டமான
______ இருந்த ரவியும் குணாவும் தற்போது இணைந்து பல சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்
ஈடு இணையாக
ஊரும் பேருமாக
எதிரும் புதிருமாக
வாழ்க்கை ____ நிறைந்தது என்பதை அறிந்து நாம் அவற்றைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
சொத்து சுகம்
நெளிவு சுளிவு
மேடு பள்ளம்
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, தகாத செயல்களில் ஈடுபடுபவர்களைச் சீருடை அணியாத காவலர்கள் ________________ பிடித்துக் கைது செய்வர்.
வாட்ட சாட்டமாக
விட்டுக்கொடுத்து
கையுங்களவுமாக
சில வேளைகளில் நாம் வெளிநாடுகளுக்குச் சென்று சிரமங்களை எதிர்கொள்ளும் போதுதான் நம் நாட்டின் ________________ உணர்கிறோம்.
இன்ப துன்பங்களை
அருமை பெருமைகளை
நெளிவு சுளிவுகளை
தம்மிடம் இருப்பவற்றை இல்லை என்று சொல்லாமல் மற்றவருக்குக் கொடுத்த தமிழ் மன்னர்கள் _______ பெயர் பெற்றவர்கள்.
வம்பு தும்பிற்கு
ஏற்ற தாழ்விற்கு
தான தர்மத்திற்கு
குடும்பத்திலுள்ள பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் ____________ வாழத் தவறுவதால் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிப்புக்குள்ளாகி விடுகிறது.
இடங்கொடுத்து
ஓட்டம்பிடித்து
விட்டுக்கொடுத்து
ஆனந்தி தன் பிள்ளைளுடன் வீட்டின் _______________ பகிர்ந்துகொள்வதால் அவர்களும் பணத்தின் அருமையைப் புரிந்துகொண்டு செலவு செய்கிறார்கள்.
வரவு செலவுகளை
நன்மை தீமைகளை
ஏற்றத் தாழ்வுகளை
சமூக மன்றத்தின் திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சரை மக்கள் _____ முழங்க வரவேற்றனர்
கூச்சல் குழப்பம்
மேள தாளம்
மேடு பள்ளம்
திரைப்படங்களில் எப்போதுமே ____________ நடிக்கும் நடிகர்கள் உண்மையில் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
விட்டுக்கொடுத்து
எதிரும் புதிருமாக
நகமும் சதையுமாக
பெற்றேர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கடுமையாக நடந்துகொண்டாலும் அவர்களின் கருத்துகளுக்கும் _____________ மிகவும் அவசியம்.
இடங்கொடுப்பது
விட்டுக்கொடுப்பது
ஈடுகட்டுவது
ஓட்டப் பந்தயத்தில் இம்முறை முதல் நிலையில் வரவில்லை என்றாலும் அடுத்த முறை ______________ விடுவதாக பரத் தன் நண்பர்களிடம் சவால் விட்டான்.
இட்டுக்கட்டி
ஈடுகட்டி
ஒரு கை பார்த்து
தன் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்தாலும் ரவி _____ அவற்றைக் கடந்து வந்தான்.
வாட்ட சாட்டமாக
முட்டி மோதி
ஏனோ தானோ
