NEW
Font size
S
M
L
XL
WorksheetsABC 3.0 C2 TAMIL (International Prelim)
Total questions: 30
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
மாற்கு சுவிசேஷப் புத்தகத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
a)
a. 10
b)
b. 24
c)
c. 20
d)
d. 16
2.
மாற்கு 1:2-3, இல் எழுதியிருக்கிறபடி வாக்கியத்தைப் பூர்த்தி செய்யவும். “இதோ, நான் என் ________ உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே ________ சத்தம் உண்டாகும்” என்றும் தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறது.
a)
a. தூதனை; கூப்பிடுகிறவனுடைய
b)
b. பிரதிநிதி; அலறுகிறவனுடைய
c)
c. துணைவன்; பாடுகிறவனுடைய
d)
d. சட்டப்பூர்வமானவன்; சிரிக்கின்றவனுடைய
3.
வனாந்தரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தவன் யார்? (Mk. 1:4)
a)
a. தாவீது
b)
b. இயேசு
c)
c. யோவான்
d)
d. மோசே
4.
யார் பரிசுத்த ஆவியினால் நமக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்? (Mk. 1:8)?
a)
a. தானியேல்
b)
b. இயேசு
c)
c. யோவான்
d)
d. ஆபிரகாம்
5.
யோவான் ஒட்டகமயிர் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டியிருந்தான். ________, _______ புசித்து வந்தான். (Mk. 1:6)
a)
a. திராட்சைப் பழங்களையும் திராட்சரசத்தையும்
b)
b. வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும்
c)
c. தேனையும் பாலையும்
d)
d. குழவியையும் ஆற்றுநீரையும்
6.
இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்? (Mk. 1:9)
a)
a. சரி
b)
b. தவறு
7.
ஆவியானவர் இயசுவின் மீது ________ இறங்கினார். (Mk. 1:10)
a)
a. வண்ணத்துப்பூச்சியைப் போல்
b)
b. வௌவாலைப் போல்
c)
c. புறாவைப் போல்
d)
d. குருவியைப் போல்
8.
மாற்கு 1:12 இல், வனாந்திரந்திரத்திற்குப் போகும்படி இயேசுவை ஏவியவர் யார்?
a)
a. ரோம வீரர்கள்
b)
b. யோவான்
c)
c. யோவானின் சீஷர்கள்
d)
d. ஆவியானவர்
9.
இயேசு வனாந்தரத்திலே எத்தனை நாட்கள் இருந்தார்? (Mk. 1:13)
a)
a. ஐம்பது நாட்கள்
b)
b. நாற்பது நாட்கள்
c)
c. அறுபது நாட்கள்
d)
d. ஏழு நாட்கள்
10.
இயேசு எங்குத் தேவனுடைய இராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் குறித்துப் பிரசிங்கித்தார்? (Mk. 1:14)
a)
a. கலிலேயா
b)
b. எருசலேம்
c)
c. எகிப்து
d)
d. பெத்லகேம்
11.
இயேசு மாற்கு 1:15 இல் என்ன கூறினார்?
“காலம் நிறைவேறிற்று; தேவனுடைய இராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி ____.”
a)
a. என்னுடைய சிலுவையைச் சுமந்து கொள்ளுங்கள்
b)
b. உங்களது பகைவர்களைச் சிநேகியுங்கள்
c)
c. உங்களது வளத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்
d)
d. சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்
12.
சீமோன் அந்திரேயாவின் வேலை என்ன? (Mk. 1:16)
a)
a. விவசாயம்
b)
b. மீன்பிடித்தல்
c)
c. தீயணைப்பு
d)
d. மலர் வியாபாரம்
13.
மாற்கு 1:19-20 இயேசு, யாக்கோபும் யோவானும் என்ன செய்து கொண்டிருந்த போது அவர்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்று கூறி அழைத்தார் இல்?
a)
a. உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது
b)
b. வலைகளைப் பின்னிக் கொண்டிருந்த போது
c)
c. மீன்களை விற்றுக் கொண்டிருந்த போது
d)
d. ரொட்டியை உடைத்துக் கொண்டிருந்த போது
14.
மாற்கு 1:30-31, காய்ச்சலில் கிடந்த போது இயேசு யாரின் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார்?
a)
a. ஜேம்ஸ்
b)
b. சீமோனின் மாமி
c)
c. அந்திரேயாவின் தாய்
d)
d. யோவானின் மாமி
15.
மாற்கு1:40-45 இன் படி, இயேசு வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக் கூடாதபடிக்குப் போனதற்குக் காரணம் ______.
a)
a. குஷ்டரோகி ஒருவன் தான் இயேசுவால் குணமடைந்ததை ஒருவருக்கும் சொல்லாதபடி அவர் அவனை எச்சரித்தும் அந்தச் செய்தியை அவன் அனைவருக்கும் அறிவித்ததால்
b)
b. ஒரு பிச்சைக்காரனை இயேசு ஆசீர்வதிதத்தால் அவன் பணக்காரரனான செய்தியை வெளிப்படையாக எல்லாருக்கும் அறிவித்தால்
c)
c. பல ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஒரு முடவன் நடக்க ஆரம்பித்ததால் அவன் ஓடிப் போய் அனைவருக்கும் நடந்ததை அறிவித்ததால்
d)
d. ஒரு காது கேளாத வாய் பேச முடியாதவன் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவருடைய அற்புதத்தைக் குறித்து மிகவும் சத்தமாக நகரத்தாருக்கு அறிவித்ததால்
16.
நான்கு பேர் திமிர்வாதக்காரனைச் சுமந்து கொண்டு இயேசுவினிடத்தில் வந்தபோது, அவர்கள் என்ன செய்தார்கள்? (Mk. 2:3-4)
a)
a. திரிர்வாதக்காரன் இயேசுவைக் காணும்படியாக அவர்கள் முன் கதவை முட்டிக் கொண்டு வந்தார்கள்.
b)
b. திமிர்வாதக்காரனை முன்னே கொண்டு போக கூட்டத்தை நகருமாறு கூறினார்கள்.
c)
c. திமிர்வாதக்காரனைக் குணப்படுத்தும்படிக்கு இயேசுவை அழைத்தார்கள்.
d)
d. அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
17.
இயேசு பரிசேயரிடம், “பிணியாளிகளுக்கு ________ வேண்டியதேயல்லாமல் ________ வேண்டியதில்லை. ________ அல்ல, ________ மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்”, என்றார். (Mk. 2:14-17)
a)
a. வைத்தியன்; சுகமுள்ளவர்களுக்கு; நீதிமான்களை; பாவிகளையே
b)
b. குணப்படுத்துபவர்; சுகவீனம்; நல்லொழுக்கமுள்ளவர்களை; அத்துமீறுபவர்களை
c)
c. மீட்டமைப்பவர்; நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கு; ஒழுக்கமானவர்களை; தீமை செய்பவர்களை
d)
d. சிகிச்சையாளர்; தொல்லை கொடுப்பவர்களுக்கு; நல்லவர்களை; தவறு செய்பவர்களை
18.
மாற்கு 2:27-28 இல் இயேசு, “ஓய்வு நாள் படைப்புக்காக உண்டாக்கப்பட்டது; அதனால், மனுஷகுமாரன் ஆண்டவராகவும் ஓய்வுநாளாகக் கூடவும் இருக்கிறார்”..
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
a. சரி
b)
b. தவறு
19.
மாற்கு 3:7-8 இல், இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குச் சென்றபோது அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள்.
i. கலிலேயாவிலும், யூதேயாவிலும் இருந்து
ii.எருசலேமிலும், இதுமேயாவிலும்
iii.யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து
iv. சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து
a)
a. i, ii, iii
b)
b. i, iii, iv
c)
c. ii, iii, iv
d)
d. மேற்கூறிய அனைத்தும்
20.
இயேசு கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்கு இயேசு வந்தபோது படகிலிருந்து இறங்கினவுடனே யாரைச் சந்தித்தார்? (Mk. 5:1-2)
a)
a. அசுத்தமுள்ள வாயைக் கொண்ட ஒரு மனிதனை
b)
b. அசுத்தம் நிறைந்த தோலைக் கொண்ட ஒரு மனிதனை
c)
c. அசுத்த ஆவியுள்ள ஒரு மனிதனை
d)
d. அசுத்தம் நிறைந்த பாதங்களைக் கொண்ட ஒரு மனிதனை
21.
பன்றிகளை மேய்த்தவர்களும் மக்களும் இயேசுவைக் கதரேனே நகரத்து எல்லைகளை விட்டுப் போகும்படி கேட்டுக் கொண்டதற்கான காரணம் (Mk. 5:14-17) பிசாசு பிடித்திருந்தவன் வஸ்திரம் தரித்து, _____________, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
a)
a. உட்கார்ந்து
b)
b. நடனமாடி
c)
c. குதித்து
d)
d. ஓடிக்கொண்டு
22.
பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். இயேசு ஜெப ஆலயத்தலைவனின் மகளை மரணத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்த போது என்ன சொன்னார்? (Mk. 5:41-42)
a)
a. “தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.”
b)
b. “தலீத்தாகூமி என்றார்; அதற்கு; வாலிபப் பெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.”
c)
c. “தலீத்தாகூமி என்றார்; அதற்கு; இறந்த மனிதனே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.”
d)
d. “தலீத்தாகூமி என்றார்; அதற்கு; பரிதாபமான ஆத்துமாவே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.
23.
மாற்கு 8:27-28 இல், இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா பகுதியைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே, “ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார்? சீஷர்கள் கூறிய பதில் என்ன?
i. யோவான்ஸ்நானகன்
ii. எலியா
iii. இயேசு
iv. தீர்க்கதரிசிகளில் ஒருவர்
a)
a. i, ii, iii
b)
b. i, iii, iv
c)
c. ii, iii, iv
d)
d. i, ii, iv
24.
இயேசு பேதுருவையும் யாக்கோபுவையும் யோவானையும் உயரமான மலைக்குக் கூட்டிக் கொண்டு போன போது ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அந்தக் குரல் கூறியது என்ன? (Mk. 9:7-8)
a)
a. “இவர் என்னுடைய அன்பான குழந்தை; இவருக்குச் செவி கொடுங்கள்.”
b)
b. “இவர் என்னுடைய நேச குமாரன்; இவருக்குச் செவி கொடுங்கள்.”
c)
c. “இவர் என்னுடைய கண்மணி; இவருக்குச் செவி கொடுங்கள்.”
d)
d. “இவர் என்னுடைய அன்பானவர்; இவருக்குச் செவி கொடுங்கள்.”
25.
மாற்கு 10: 13-16 இல் இயேசு சீஷர்களிடம்: “சிறு பிள்ளைகள் ____ இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை” என்று சொன்னார்.
a)
a. என்னைவணங்குவதற்கு
b)
b. என் முன் நிற்பதற்கு
c)
c. என்னுடன் உட்காருவதற்கு
d)
d. என்னிடம் வருகிறதற்கு
26.
மாற்கு 11:7-10 இல், அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள்.முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: “ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ___;கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய ___ ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
a)
a. குடிமக்கள், மோசே தீர்க்கதரிசி
b)
b. ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர், பிதாவாகிய தாவீதின் ராஜ்யம்
c)
c. உன்னதமானவர், முற்பிதா
d)
d. இராஜா, தூதுவர்
27.
அவரோ பதில் ஒன்றும் பேசாமல் இருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி, “ நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானே? என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் _________ மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள். (Mk. 14:61-62)
a)
a. மலர் மேகங்கள்
b)
b. பறவை மேகங்கள்
c)
c. வானத்தின் மேகங்கள்
d)
d. ஆற்று மேகங்கள்
28.
மாற்கு15:6-15 இல், இயேசுவுக்குப் பதிலாகப் பிலாத்து விடுவித்த மனிதனின் பெயர் என்ன?
a)
a. பரபாஸ்
b)
b. பர்பரா
c)
c. பர்னபாஸ்
d)
d. பெத்சபா
29.
மாற்கு 15:37-39 இல், இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்த போது அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி என்ன சொன்னார்?
a)
a. “உண்மையாகவே இவர் தேவனுடைய தீர்க்கதரிசிதான்!”
b)
b. “உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன்தான்!”
c)
c. “உண்மையாகவே இவர் யூதர்களின் அரசர்தான்!”
d)
d. “உண்மையாகவே இவர் மனிதகுமாரன்தான்!”
30.
இயேசு உயிர்த்தெழுந்தபின், பதினொரு சீஷர்களுக்குத் தரிசனமாகி அவர்களுக்குச் சொன்னது __________ (Mk. 16:15)
a)
a. “நீங்கள் உலகமெங்கும் போய், பூமி முழுவதிற்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.”
b)
b.“நீங்கள் உலகமெங்கும் போய், வியாதியஸ்தர்களுக்கும் ஏழைகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.”
c)
c. “நீங்கள் உலகமெங்கும் போய், சிறுவர் பெரியவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.”
d)
d.“நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.”
Reset
