Font size
Worksheetsபழமொழி
Total questions: 40
Worksheet time: 20mins
உப்பிட்டவரை ------------------- -----------------
நினை உள்ளளளவும்
உள்ளளவும் நினை
நினை
உப்பிட்டவரை உள்ளளவும் நினை பழமொழியின் பொருள் என்ன?
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறந்துவிடலாம்
உதவி செய்ய கூடாது
உப்பிட்டவரை உள்ளளவும் நினை பழமொழி .............. வழியுருத்துகிறது.
உதவும் மனப்பான்மையை
நன்றி மனப்பான்மையை
உதவும் மற்றும் நன்றி மனப்பான்மையையும்
படித்த பழமொழிகளை சரியாக தெரிவு செய்.
ஊருடன் கூடி வாழ்
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு
உப்பிட்டவரை நினை உள்ளளவும்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
3. தேவி பரிசு கிடைத்ததால் அகம் மகிழ்ந்தாள்.
சரி
பிழை
அழுத பிள்ளை (a) குடிக்கும்
பழமொழியின் பொருளை எழுதுக.
(a)
குமார் கடினமாக உழைத்து தனக்கு வேண்டிய மடிக்கணினி சுயமாக வாங்கி கொண்டான்.
மேற்காணும் சூழல் பழமொழிக்கு ஏற்றதா?
சரி
தவறு
அகரன் தினமும் வேலைக்குச் சென்று தனக்குக் கொடுக்கப்படும் அனைத்தும் வேலைகளைச் சரியாக செய்வான்.
இச்சூழல் பழமொழியின் பொருளைக் குறிக்குமா?
தவறு
சரி
ஏற்புடையது
அமுதன் தன் தந்தைக்குத் தன்னால் இயன்ற அனைத்தும் செய்வான். கல்லூரி முடிந்து வந்து பகுதி நேர வேலைக்குச் செல்வான்; அதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தந்தையின் மருத்துவ செலவிற்கும் தன் ஆசைகளையும் ஒவ்வொன்றாய் தாமே செய்துக் கொள்வான்.
இதில் இப்பழமொழியைக் குறிக்கும் வாக்கியது யாது?
அமுதன் தன் தந்தைக்குத் தன்னால் இயன்ற அனைத்தும் செய்வான்.
கல்லூரி முடிந்து வந்து பகுதி நேர வேலைக்குச் செல்வான்
அதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தந்தையின் மருத்துவ செலவிற்கும் தன் ஆசைகளையும் ஒவ்வொன்றாய் தாமே செய்துக் கொள்வான்.
நாயைக் கண்டால் எதை காணோம் ?
சாப்பாடு
கல்
குச்சி
யானைக்கொரு காலம் வந்தால் எதுக்கு ஒரு காலம் வரும் ?
கழுதை
நாய்
பூனை
பழமை + மொழி =
பழமொழி
பலமொழி
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறியுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
மாறன் : பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் சரணும் சிறப்பாகப் பாடுகிறாரே?
நாதன் :.........................................................................................
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்
அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?
தனிமரம் தோப்பாகாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒற்றுமையே பலம
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வாணி சிரமப்பட்டுப் பட்டபடிப்பை முடித்தாள்.பல இடங்களில் வேலை தேடி அலைந்தாள் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவர் தம் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியதும் என்ன வேலை என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
உப்புக் கொடுத்தவரை
உப்பு வாங்கியவரை
உணவு கொடுத்தவரை
உணவு வாங்கியவரை
கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
அறிவாளியாக இருப்பவளே ஆற்றல்மிக்கவளாகத் திகழ்வாள்
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
நாம் தூய்மையைக் கடைபிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.
விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
குணா, நாதனின் ஏழ்மையைக் கண்டு மனமிரங்கி பல உதவிகள் செய்தார்.நாதன் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததும் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் அவரிடம் சண்டை போட்டான்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?
தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.
சுத்தம் சுகம் தரும்
தனிமரம் தோப்பாகாது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
டைகர் வூட் ஒரு சிறந்த கோல்ப் விளையாட்டளராகத் திகழ்கிறார்.அவர் சிறுவயது முதலே கோல்ப் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.பல போட்டிகளில் கலந்து தம் திறமையை வளர்த்துக் கொண்டார்.
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறுகக் கட்டி பெருக வாழ்.
ஒற்றுமையே பலம்
கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?
ராமு : உன் மகன் இந்த வயதிலும் சைக்கிலைக் கொண்டு சாகசங்களையெல்லாம் செய்கின்றானே!
மதி : அவனது எதிர்காலம் எப்படியிருக்குமென்று இதிலிருந்தே தெரிகிறது அல்லவா...
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற முயற்சியோடு பயிற்சி செய்த முருகன் வெற்றி பெற்றான்.
சிறு துளி பெரு வெள்ளம்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
சிறு துளி பெரு வெள்ளம்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளங்கன்று பயம் அறியாது
சிறு துளி பெரு வெள்ளம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
சிறு துளி பெரு வெள்ளம்
சுடர் விளக்காயினும் ______________________________
தூண்டுகோல் வேண்டும்
தூண்டுகோல் தேவை
தேற்றுதல் தேவை
சுவரை வைத்துத்தான் ______________________________
சித்திரம் வரைய வேண்டும்
ஓவியம் வரைய முடியும்
சித்திரம் வரைய முடியும்
ஓவியம் வரைய வேண்டும்
கீழ்க்கண்ட பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
நம் உடல் நலமாக இருந்தால்தான் நம் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தை சிறப்பாகச் செய்ய முடியும்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டுத்
ஆற்றல் கொண்டு இயங்குபவருக்கு ___________________________________________________________
தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், அஃது அவருக்குத் தன்னம்பிக்கையைத் தரும்.
தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், அஃது அவரது ஆற்றலை மேலும் ஓங்கச் செய்யும்.
தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், அவரால் எதையும் சாதிக்க இயலாது.
மித்ரா இனிமையான குரல்வளம் படைத்தவள். ஆனாலும் தன் குருவின் வழிகாட்டலினால் சங்கீதம் பயின்று, இன்று சிறந்த பாடகியாகத் திகழ்கிறாள்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
தேசிகன் சிறுவயதிலேயே தன் மாமாவிடமிருந்து பல அரிய கலைகளைக் கற்றார். இருந்தாலும் உரிய வயதில் தன் ஆசிரியரிடமிருந்து பல கலைகளைக் கற்றுப் பெரிய வித்வானாகத் திகழ்ந்தார்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
பாடகி சித்திரா எப்போதும் தன் குரல்வளத்தைக் கவனித்துக் கொள்வார். தன் குரலின் இனிமையைக் கெடுக்கும் உணவு வகைகளை அவர் முற்றும் தவிர்த்தார். நல்ல குரல் வளம் இருந்தால் மட்டுமே அனைவரையும் கவரும் வண்ணம் பாட முடியும் என அவர் அடிக்கடி கூறுவார்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
தன் பள்ளியின் காற்பந்து அணியின் 'கோல்' காப்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட கண்ணன், கால்களையும் கைகளையும் வலுப்படுத்த அதிகமாகப் பயிற்சிகள் செய்தான்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
சுதேவி இயற்கையிலேயே பேச்சாற்றல் மிக்கவள். எனினும் தன் தந்தையின் உந்துகோலால் தன்னால் தேசிய அளவிலான பேச்சுப் போட்டியில் சாதனை படைக்கவிருக்கிறாள்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
மாலினி பொறுமையாக எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதிச் சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
