wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PU1H1 2024

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வளவன் சிறுவனாக இருக்கும் போதே அவனது தந்தை இறந்து விட்டதால் பல்வேறு உதவிகளைச் செய்து _____ அவனது மாமாவை வளவன் நன்றியோடு நினைவுகூர்ந்தான்

a)

அகலக்கால் வைத்த

b)

அலைக்கழித்த

c)

குரல்கொடுத்த

d)

கைதூக்கவிட்ட

2.

தன் உயிர்த் தோழி தன்னைப் புரிந்துகொள்ளாமல் பிரிந்து சென்றதை நினைத்து _______ கொண்டு நின்ற அகிலாவை அவளது அக்கா ஆறுதல் கூறித் தேற்றினாள்

a)

கண்ணைக் கசக்கிக்

b)

கண்ணை உறுத்திக்

c)

காதில் பூச்சிற்றிக்

d)

கரைபுரண்டு

3.

துரித உணவுகளை ஒதுக்கி பாரம்பரிய உணவுகளை மக்கள் விரும்பி உண்பதால் சிறுதானிய உற்பத்தியாளர்களின் ______

a)

ஆட்டங்கண்டுள்ளது

b)

கை ஓங்கியுள்ளது

c)

கை சுத்தமாகியுள்ளது

d)

கரைபுரண்டுள்ளது

4.

உலகப் பொருளாதாரம் _______ தொடங்கினால் மக்கள் வாழ்க்கை இன்னும் மோசமாகும் நிலை உருவாகலாம்

a)

ஆட்டங்காணத்

b)

அகலக்கால் வைக்கத்

c)

கண்ணாயிருக்கத்

d)

கரைபுரளத்

5.

குடும்ப நல்வாழ்வைக் கருதி நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பை வழங்கும் அரசாங்கத்தின் முடிவுக்குத் தாய்மார்கள் பலரும் _______

a)

காதில் வாங்கினர்

b)

கைதூக்கிவிட்டனர்

c)

குரல் கொடுத்தனர்

d)

கரைபுரண்டனர்

6.

தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்யவேண்டும் என்று ஆசிரியர் கூறிய அறிவுரைகளை ______  அபிநயா இறுதித்தேர்வில் தோல்வி அடைந்தாள்

a)

காதில் வாங்காத

b)

காதோடு காதாக

c)

கண்ணாயிருக்காத

d)

கரைபுரண்டனர்

7.

முல்லையைத் திருமணம் செய்துகொள்வதில் கோபாலனுக்கு ஆர்வம் இல்லாதபோதும் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி _____ திருமணத்திற்குச் சம்மதித்தான்

a)

குரல்கொடுத்து

b)

காதோடு காதாக

c)

காதில் வாங்காது

d)

அரைமனதோடு

8.

ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்ட எனக்கு உதவுவதாக உறுதியளித்த ரவி என்னை ______ இறுதியில் உதவாமல் கைவிரித்து விட்டான்

a)

அலைக்கழித்துவிட்டு

b)

கைதூக்கிவிட்டு

c)

காதில் வாங்கிவிட்டு

d)

காதில் பூச்சுற்றிவிட்டு

9.

_____ சொல்ல வேண்டிய செய்திகளை ஊரார் பார்க்க நிழற்படங்களோடு சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது

a)

கண்ணை உறுத்தி

b)

கைதூக்கிவிட்டு

c)

அரைமனதாக

d)

காதோடு காதாக

10.

நான் சொகுசான வீட்டில் வசிப்பது எனது உறவினர்களின் "________'', என்று சொல்லி வருந்தினான் செல்வம்

a)

கண்ணை உறுத்தியது

b)

கண்ணைக் கசக்கியது

c)

கரைபுரண்டது

d)

கைதூக்கிவிட்டது

11.

குறைவான சம்பளத்தில் பணியாற்றும் செல்வம் தன் மகனை ________ வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைப்பதால் குடும்ப செலவிற்கே தவித்துக் கொண்டிருக்கிறார்

a)

காதில் வாங்கி

b)

அகலக்கால் வைத்து

c)

குரல்கொடுத்து

d)

கைதூக்கிவிட்டு

12.

சில நாடுகள் தேர்தலின்போது மக்களின் ______ வாக்குறுதிகளை அள்ளிவீசி தேர்தலில் ஓட்டு வாங்கிவிடுகின்றனர்

a)

கண்ணாயிருந்து

b)

காதில் பூச்சுற்றி

c)

ஆட்டங்கண்டு

d)

கைதூக்கிவிட்டு

13.

________ உடையவரைத்தான் காசாளராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே வங்கிகளின் முடிவாகும்

a)

கைசுத்தம்

b)

அரைமனது

c)

கை ஓங்கி

d)

கைதூக்கிவிடும்

14.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்கள் ______ வெள்ளமெனத் திரண்டனர்

a)

குரல் கொடுத்து

b)

அலைக்கழித்த

c)

கை ஓங்கிய

d)

கரைபுரண்ட

15.

ஆண்டிறுதித் தேர்வுக்கு இரவும் பகலும் ______ படித்த முத்தமிழன் அத்தேர்வில் உச்சத் தேர்ச்சி அடைந்தான்

a)

குரல் கொடுத்து

b)

கண்ணாயிருந்து

c)

அகலக்கால் வைத்து

d)

கரைபுரண்டு