wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Term 2 3E மரபுத்தொடர், இணைமொழி புதிர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வீட்டுப்பாடத்தை நாளை தருகிறேன், இடைவேளை முடிந்த பிறகு தருகிறேன் என்று கமல் ஆசிரியரை _____________________?

a)

இட்டுக்கட்டினான்

b)

இழுத்தடித்தான்

c)

இடித்துரைத்தான்

d)

இடங்கொடுத்தான்

2.

தேவையற்ற பொருள்களை நீக்குவதை உணர்த்தும் மரபுத்தொடர் எது?

a)

கைகழுவுதல்

b)

எடுத்தெறிதல்

c)

கழித்துக் கட்டுதல்

d)

தலைமுழுகுதல்

3.

நட்டாற்றில் விடுதல், நொடித்துப்போதல் இரண்டும் ஒரே பொருளை உணர்த்துகின்றன

a)

சரி

b)

தவறு

4.

குமார் பல தவறுகளையும் பிழைகளையும் செய்தாலும் அவன் தன் மீது காட்டும் அன்பு, ரவியினது _____________

a)

தலையெடுத்தது

b)

கண்ணை மறைத்தது

c)

கண்ணைப் பிதுக்கியது

d)

பழிவாங்கியது

5.

கவினை _________ நினைத்திருந்த சிலர் அவன் தமிழ் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றதை அறிந்ததும் வாயடைத்துப் போனார்கள்.

a)

ஏட்டிக்கு போட்டியாக

b)

சாடை மாடையாக

c)

கிள்ளுக்கீரையாக

d)

எதிரும் புதிருமாக

6.

தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை _________ செய்யும் மாணவர்களே விரைவில் அறிவிலும் திறமையிலும் முன்னேறுவார்கள்

a)

கண் பிதுங்கி

b)

ஓடியாடிப் பார்த்து

c)

கைநனைத்து

d)

தலைமேற்கொண்டு

7.

மாலா _______ மட்டுமே மையமாகக் கொண்டு, தீர விசாரிக்காமல் பல 'கிசு கிசு' செய்திகளைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினாள்

a)

கண்டதையும் கேட்டதையும்

b)

ஊரையும் பேரையும்

8.

மாணவர்கள் விலையுயர்ந்த பொருள்களையே நாடி தம் பெற்றோர் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை __________________ கூடாது

a)

அள்ளிக்கொடுக்க

b)

அள்ளியிறைக்க

c)

இடங்கொடுக்க

d)

முகங்கொடுக்க

9.

சில நாடுகளுக்கிடையே _________ ஏற்படுவதால் பாதிக்கப்படுவது அப்பாவியான குடிமக்களே ஆகும்.

a)

வம்பும் தும்பும்

b)

போரும் பூசலும்

c)

சீரும் சிறப்பும்

d)

மேடும் பள்ளமும்

10.

நண்பர்கள் தவறு செய்தால் _______________ ஓர் அன்பான, உண்மையான நண்பனின் குணமாகும்.

a)

தட்டிக்கேட்பதே

b)

இடங்கொடுப்பதே

c)

இடித்துரைப்பதே

d)

எடுத்தெறிவதே