NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 30
Worksheet time: 10mins
1. திருக்குறளில் ___________ குறள்கள் பத்து பத்தாக __________ அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன..
1330, 133
1330, 1030
1013. 102
133, 1330
2. திருக்குறளைக் குறிக்கும் பிற பெயர்களில் எது சரி?
மூலப்பொருள்
வள்ளுவர் வாய்மை
நம்மறை
தெய்வ மறை
3. திருக்குறளில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளன?
5
3
7
10
4. இவற்றுள் எது திருவள்ளுவர் தொடர்பான தவறான கூற்று?
தமிழகத்தில் தோன்றியவர்
பன்மொழிப் புலவர்
இல்வாழ்வை ஏற்காதவர்
பல்வகை இயல்களில் திறமான புலமையுற்றவர்
5. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது ?
உ
எ
ஔ
ஒ
6. திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் யாவை ?
பனை, தென்னை
இரம்புத்தான் மரம், பனை
மாமரம், தென்னை மரம்
பனை, மூங்கில்
7. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் யாவை ?
முல்லை, அல்லி
அனிச்சம், குவளை
அல்லி, ரோஜா
ரோஜா, செம்பருத்தை
8. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் _____________________ ஆவார்.
தஞ்சை ஞானப்பிரகாசர்
கம்பர்
மறைமலை அடிகளார்
பிறைசூடன்
9. வோனுக்குச் பெங்கதிர் ஒன்று – புனல்
வண்றமக்குக் கோவிரி ஒன்றுண்டுநல்ல
மோனத்றதக் கோத்துவோை என்றுமிந்த
றவயத்துக் பகோன்று திருக்குறள்
மேற்கண்ட பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
பாரதியார்
பாவேந்தர் பாரதிதாசன்
திரு.வி.க
மறைமலையடிகளார்
10. திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் _______________.
இர்விங்
இப்ஸன்
அரிஸ்டோபனீஸ்
ஜி.யு.போப்.
11. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் _________________________ எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
பதிற்றுப்பத்து
பதினெண்கீழ்க்கணக்கு
அகநானூறு
பரிபாடல்
12. திருக்குறள் அடிப்படையில் ஒரு _______________ நூல் ஆகும்.
கலையியல்
சமய
வாழ்வியல்
அறிவியல்
13. திருக்குறளை ___________________ எனவும் அழைக்கலாம்.
வாயுரை வாழ்த்து
பொய்யாமொழி நூல்
பொதுமறை நூல்
தெய்வநூல்
14. திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இஃது_____________________ என அழைக்கப்படுகிறது.
தெய்வநூல்
உலகப் பொதுமறை
பொய்யாமொழி நூல்
நாவல்
15. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்கள் திருவள்ளுவரைக் குறிக்கின்றவையாகும், ஒன்றைத் தவிர
பொய்யில் புலவர்
நாயனார்
செந்நாப் போதர்
அறநெறி புலவர்
16. ‘உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க’ என்று தொடங்கும் குறளின் இரண்டாம் அடி எது?
உள்ளழிக்கல் ஆகா அரண்
நன்றின்பால் உய்ப்பது அறிவு
பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு
பண்புபா ராட்டும் உலகு
17. “ஒருவனை இகழ்ந்து பேசுவது விளையாட்டின் கண்ணும் நல்லது அன்று. உலக இயல்பினை அறிந்து நடக்கும் பண்புடையார் பகைவரிடத்தும் பண்புள என்று இகழார்” . இப்பொருள் குறிக்கும் குறளைச் சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர்
பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு
18. நண்புஆற்றா ராகி நயம்இல செய்வார்க்கும் _________________ ஆதல் கடை
மேற்கண்ட குறளில் விடுப்பட்ட இடத்தில் சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டுஉண்டு
பண்புஆற்றார்
பண்புஇலான்
பேதைமை
19. எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
எனும் குறளுக்கேற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
அறிவுடையோர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர்; அறிவில்லாதவர் எதனை உடையவரானாலும் எந்த நன்மையும் இல்லாதவரே ஆவர்.
எத்தகையவரும் எளிதில் சென்று காணக்கூடிய தன்மையுடன் ஒருவன் இருந்தால் யாவரும் பண்புடைமை என்னும் நல்ல நெறியை அடைதல் எளிது என்பர்.
பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்.
20. அரம்போலும் கூர்மைய ரேனு மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
இக்குறளில் கருமையாக்கப்பட்ட சொல் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுக.
மக்களின் மீது வெறுப்பு
தவறான பண்பு
இழிவான பண்பு
மக்களுக்குரிய பண்பு
21. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
இக்குறள் உணர்த்தாத நற்பண்பினைத் தேர்ந்தெடுக.
அனைவரிடமும் வெறுப்பாக நடந்து கொள்ளுதல்.
அனைவரிடமும் மகிழ்ச்சியாக நடந்து கொள்ளுதல்.
அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுதல்.
அனைவரிடமும் அரவணைப்புடன் நடந்து கொள்ளுதல்.
22. நல்ல பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம், கலத்தின் தீமையால் நல்ல பாலும் திரிந்து கெடுவதைப் போல, ஒருவர்க்கும் பயன்படாது போகும். இப்பொருள் குறிக்கும் குறளைச் சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்
23. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி ________________ பண்புஉள பாடுஅறிவார் மாட்டு.
மேற்கண்ட திருக்குறளில் விடுப்பட்ட இடத்தில் சரியான விடையைத் தெரிவு செய்க.
நயனொடு
பகையுள்ளும்
நன்பால்
பயன்உடையார்
“24. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
மேற்கண்ட குறளில் கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருளைத் தேந்ர்தெடுக்கவும்.
உண்மையற்ற பொருள்
தவறான பொருள்
உண்மை பொருள்
மெய்யற்ற பொருள்
25. உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு
இக்குறள் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்படத் தன் கடைமையாற்றும் சான்றோரின் பண்பு நலன்களை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவார்கள்.
எத்தகையவரும் எளிதில் சென்று காணக்கூடிய தன்மையுடன் ஒருவன் இருந்தால் யாவரும் பண்புடைமை என்னும் நல்ல நெறியை அடைதல் எளிது என்பர்.
கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும்.
26. அறிவுடையார் ஆவது அறிவார் _________________
அஃதுஅறி கல்லா தவர்.
மேற்கண்ட திருக்குறளில் விடுப்பட்ட இடத்தில் சரியான விடையைத் தெரிவு செய்க.
அஞ்சுவது
அறிவினார்க்கு
அறிவிலார்
அப்பொருள்
27. அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும். இப்பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்
அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு
அரம்போலும் கூர்மைய ரேனு மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
28. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு
இக்குறள் உணர்த்தும் கருத்தைத் தேர்ந்தெடுக.
உலக நடப்பிற்கேற்ப நடந்து கொள்ளுதல்
உலக நடப்புகளை அறியாமல் இருத்தல்
உலக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமை
உலக நடப்போடு எதிர்மறையாக நடந்து கொள்ளுதல்
29. எதிரதாக் காக்கும் ___________________ இல்லை
அதிர வருவதோர் நோய்.
மேற்கண்ட குறளில் விடுப்பட்ட இடத்தில் சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டுஉண்டு
மரம்போல்வர்
அறிவினார்க்கு
அறிவிலார்
30. அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்
இக்குறள் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும். கவும்
கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும்.
உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
பண்புடையார் தோன்றி உலகத்தில் வாழ்வதால்தான் உலகம் இருந்து கொண்டிருக்கின்றது; சான்றோர் தோன்றாது போனால் உலகம் மண்ணில் புகுந்து அழிவது உறுதி.
இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்.
