NEW
Font size
Worksheetsபொருத்தமான பெயரெச்சச் சொல்லை / வினையெச்சச் சொல்லைத் தேர்
Total questions: 11
Worksheet time: 6mins
நீண்ட நாள்களுக்குப் பிறகு நான் என் நண்பர்களை _____________________ மிகுந்த ஆவலுடன் புறப்பட்டுச் சென்றேன்.
நோக்க
சந்திக்க
காக்க
சேர்க்க
பொதுப் படைத்திரட்டுப் பயிற்சிக்குரிய அறிவிப்பை ______________ என் அண்ணன் உடனே இராணுவ முகாமுக்குக் கிளம்பிச் சென்றார்.
கேட்டால்
கேட்க
கேட்கும்
கேட்ட
செல்வந்தர் சுந்தரின் மறைவுக்குப் பிறகும் ஏழை எளியவர்களுக்குத் தொடர்ந்து உதவி _________ வருகின்றது.
கிடைக்க
கிடைத்த
கிடைத்து
கிடைக்கும்
குழந்தை தரையில் _______________ வந்த அழகைக் கண்டு தாயார் பூரித்துப்போனார்.
தவழ்ந்து
தவழ
தவழ்ந்த
தவழ்கிற
வழிதவறித் தன் வீட்டுக்குள் __________________ பூனையை அமரன் பத்திரமாகக் கொண்டுபோய் உரியவரிடம் ஒப்படைத்தான்.
நுழைய
நுழைந்த
நுழைந்து
நுழையும்
பெரியவரைக் கண்டால் எல்லாரும் மரியாதையாக எழுந்து ________ வணக்கம் தெரிவிப்பார்கள்.
நிற்க
நின்று
நின்ற
நின்றால்
தாயார் சமைத்த விருந்து உணவை நாங்கள் ___________________ சாப்பிட்டோம்.
பசித்து
தனித்து
சுவைத்து
ரசித்து
குழந்தை தரையில் _______________ வந்த அழகைக் கண்டு தாயார் பூரித்துப்போனார்.
தவழ்ந்து
தவழ
தவழ்ந்த
தவழ்கிற
கோதை நூலகத்திலிருந்து இரவல் ________________ நூலைக் குறித்த காலத்தில் திருப்பிக் கொடுத்தாள்.
கொடுத்த
கேட்ட
எடுத்த
பெற்ற
நல்லவேளை! கை தவறி ________________ கண்ணாடிக் குவளை உடையவில்லை.
பாய்ந்த
சரிந்த
விழுந்த
திறந்த
தோகை விரித்து ____________ மயிலின் அழகை எல்லாரும் நிழற்படம் எடுத்தார்கள்.
தோன்றிய
ஆடிய
நடித்த
பறந்த
