WorksheetsUnits and measurements
Total questions: 10
Worksheet time: 5mins
திருகளவியில் காட்டப்படும் மதிப்பு
12.04 மிமி
12.40 மிமி
12.004 மிமி
12.44 மிமி
ஒரு கனசதுரத்தின் பக்கத்தினை அளவிடும் போது 2.0 செமீ ± 4 % என கிடைக்கிறது. அதன் நிறையினை கணக்கிடும் போது 24.0 g ± 8 % என கிடைக்கிறது. அதன் அடர்த்தியினை கணக்கிடும் போது ஏற்படும் பிழையின் மதிப்பு
± 8%
± 10 %
± 12 %
± 20 %
ஒரு திருகு அளவியின் தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை 100. அதன் புரியிடைதூரம் 0.5 மிமி. அதன் மீச்சிற்றளவின் மதிப்பு
0.5 மிமி
0.005 மிமி
0.01 மிமி
0.001 மிமி
ஒரு திருகு அளவையின் சுழிப்பிழை +0.05 மிமி. அதனைப் பயன்படுத்தி ஒரு பொருளின் தடிமனை கணக்கிடும் போது 2.30 மிமி என கிடைக்கிறது. திருத்தம் செய்யப்பட்ட மதிப்பு
2.30 மிமி
2.25 மிமி
2.35 மிமி
2.80 மிமி
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவுகளில் (ஆற்றல்/பருமன்) இன் பரிமாணம் கொண்ட இயற்பியல் அளவு எது?
அழுத்தம்
விசை
திறன்
திருப்புத்திறன்
ஒரு மனிதன் 100.5 மீட்டர் தூரத்தினை 10.3 வினாடி நேரத்தில் கடக்கிறான். முக்கிய எண்ணுருவின் அடிப்படையில் அந்த மனிதனின் திசைவேகம்
9.757 மீ/வி
9.7 மீ/வி
9.76 மீ/வி
9.75 மீ/வி
இரண்டு நிறைகளின் மதிப்பு முறையே m1 = 1.2 kg, m2 = 5.42 gm என கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய எண்ணுருவை பயன்படுத்தி m1+ m2 வின் மதிப்பு
1.3 kg
1.2 kg
1.20542 kg
1.21 kg
கொடுக்கப்பட்ட மதிப்புக்களில் அதிக துல்லிய தன்மையை கொண்ட மதிப்பு
0.005 mm
5.00 mm
50.00 mm
5.0 mm
ஓரு ஆராய்ச்சியாளர் ஒரு இயற்பியல் அளவினை அளவிடும் போது 100 முறை கவனமாக அளவிடுகிறார். அவர் அதே பரிசோதனையை மீண்டும் செய்யும் போது 400 முறை அளவிடுகிறார், இதனால் அளவினை அளவிடுதலில் ஏற்படும் பிழையானது
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
முதலில் அதிகரித்து பின் குறையும்.
கொடுக்கப்பட்ட இயற்பியல் அளவுகளில் வெவ்வேறு பரிமாணங்களை உடையது
கணத்தாக்கு விசை மற்றும் உந்தம்
திருப்பு விசை , வேலை
அழுத்தம் மற்றும் தகைவு
உந்தம், கோண உந்தம்
