Worksheetsஇடைச்சொற்கள ஆ :4&5 அதற்காக,இன்னும்,மேலும்,ஏனெனில்,ஆனால்,ஆதலால்
Total questions: 20
Worksheet time: 7mins
(ஆ4) பிறர் கூறும் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.______ தீர யோசித்தப் பின்னரே முடிவெடுங்கள்.
ஆகையால்
ஆனால்
ஆதலால்
இன்னும்
(ஆ5) பல கட்டடங்களைக் கட்டுவதால் காடுகள் அழிக்கப்படுகின்றன. ___________ இந்நிலைமையால் தூய்மை கேடுகள் ஏற்படுகின்றன.
இன்னும்
மேலும்
அதற்காக
ஆனால்
(ஆ4). பூமியின் எழிலையும் தூய்மையையும் பாதுகாப்பது அனைவரது தலையாயக் கடமையாகும். ________________ , ஒரு சிலர் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதில்லை.
ஆகையால்
ஆனால்
எனவே
மேலும்
(ஆ5). அனைவரும் சின்மாயி பாடல்களை இரசிப்பதால் அவர் _______________ நிறைய பாடல்கள் பாடுகிறார்.
அதற்காக
மேலும்
இன்னும்
ஆதலால்
(ஆ4). அந்தப் பெரியவர் ஏழைகளுக்கு உதவுவார். ____________ அவர் நல்மனம் படைத்தவர்.
ஆகவே
ஏனெனில்
ஆனால்
இன்னும்
(ஆ5). தீயச் செயல்களால் கிரண் காவல் துறையினரிடம் பிடிப்பட்டான். ________________ அவனின் பெற்றோர் மனம் வருந்தினர்.
ஆனால்
(ஆ4). சரண் கெட்டிக்கார மாணவன்._________________ கொடுக்கப்படும் பாடங்களை முழுமையாகச் செய்ய மாட்டான்.
ஆகையால்
ஏனென்றால்
ஆனால்
அதற்காக
(ஆ5). நாம் உடல் ஆரோக்கியத்திற்காகச் சத்துள்ள உணவை உண்ண வேண்டும். ______________ நம் உடல் தூய்மையையும் பேண வேண்டும்.
(ஆ4). சூரிய ஒளி நம் உடலுக்கு நல்லது. ___________________ உயிர்ச்சத்து D இருக்கிறது.
ஆகவே
ஏனெனில்
ஆனால்
ஆகையால்
(ஆ5). கவிதா மிதிவண்டி வாங்க விரும்பினாள். ________,தனது வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து வைத்தாள்.
அதற்காக
இன்னும்
மேலும்
ஏனெனில்
(ஆ4). சாலையில் விபத்து ஏற்பட்டது._____________, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆதலால்
மேலும்
ஏனென்றால்
இன்னும்
(ஆ5). நந்தினி சிறந்த ஓவியங்கள் வரைந்தாள்.____ ,அழகான ஓவியங்களை வரைய முயற்சி செய்கிறாள்.
மேலும்
இன்னும்
அதற்காக
ஆதலால்
(ஆ5). மகிழினி தையல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். ________, சில கடைகளை வாங்க முடிவெடுத்துள்ளார்.
இன்னும்
அதற்காக
ஆனால்
ஆதலால்
(ஆ5) கவின் 10 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் மேலாளராகப் பணிப்புரிகிறார்.
_______________ அவருக்குச் சம்பள உயர்வு கிடைத்தது.
மேலும்
அதற்காக
இன்னும்
ஆனால்
(ஆ4). கனத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது.______________, பொது மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல ஆரம்பித்தனர்.
ஆதலால்
ஏனெனில்
ஆனால்
எனினும்.
(ஆ4). மாணவர்கள் குமரனைப் பாராட்டினர். ________________, அவன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளான்.
ஏனெனில்
ஆனால்
ஆகவே
எனவே
(ஆ5). ஆசிரியர் தினம் மிகவும் விமர்சையாக நடந்தேறியது. _________________ மாணவர்களின் படைப்பு அந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தன.
அதற்காக
மேலும்
ஆனால்
ஏனெனில்
(ஆ4). மாணவர்கள் நாளிதழ் வாசித்தல் அவசியம். _______________, அஃது அவர்களின் பொது அறிவை வளர்க்கும்.
ஏனெனில்
எனவே
ஆகவே
ஆதலால்
(ஆ5). சேரண் ஆசிய நாடுகளின் சுற்றுலா நிறுவனத்தைத் திறமையாக நடத்தி வருகிறார்._______, ஐரோப்பிய சுற்றுலா செல்லும் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறார்.
ஆனால்
இன்னும்
அதற்காக
ஆனால்
(ஆ4). அகிலனுக்குக் குத்துச் சண்டை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆசை. ____________, அவனது தந்தை அவனை நடன வகுப்பில் சேர்த்து விட்டார்.
எனவே
ஆனால்
ஏனென்றால்
இன்னும்
