wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KERTAS 036 BT UPSR BHG.A

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

காலியிடத்திற்குப் பொருத்தமான இரட்டைக் கிளவிகளை அடையாளம் காண்க.


பலமுறை கூறியும் காது கேளாதவன் போல் நின்று கொண்டிருந்த கவிதாவை _________________ என அறைந்தார் அம்மா.

a)

A. பளபள

b)

B. பளீர்பளீர்

c)

C. பளார்பளார்

2.

சரியான இணைமொழியை அடையாளம் காண்க.

கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் ________________ மக்களால் விரும்பப் படுகிறது.

a)

A.  அருமை பெருமை

b)

B.  அன்றும் இன்றும்

c)

C.  நன்மை தீமை

d)

D.  மேலும் கீழும்

3.

சரியான மரபுத்தொடர்களை அடையாளம் காண்க.


நேர்முகத் தேர்வுக்குச் சென்ற வாணியை ____________ அலுவலக முதல்வர் பல கேள்விகளைக் கேட்டார்.

a)

A. கை கழுவுதல்

b)

B. ஈடு கட்டுதல்

c)

C. எடுப்பார் கைப்பிள்ளை

d)

D. ஆழம் பார்த்தல்

4.

படத்திற்குப் பொருந்தாத பழமொழியை அடையாளம் காண்க.

a)

A. சுத்தம் சுகம் தரும்

b)

B. ஒற்றுமையே பலம்

c)

C. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

d)

D. அவனன்றி ஓரணுவும் அசையாது

5.

பொருளுக்கு ஏற்ற வெற்றி வேற்கையை அடையாளம் காண்க.


மூடர்களோடு நூறு வருடம் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும் அந்த நட்பானது நீரிலுள்ள பாசிபோன்று வேர் ஊன்றாமல் உறுதியற்று இருக்கும்.

a)

A. நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

b)

B. நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

c)

C. நூறாண்டு பழகினு வேர் கொள்ளாதே

நீர்க்குட் பாசிபோல் மூர்க்கர் கேண்மை

6.

பொருளுக்கு ஏற்ற பழமொழியை அடையாளம் காண்க.


நல்லவன் போல் நடித்து மாதவனின் வீட்டினுள் புகுந்து பல விலையுயர்ந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றான் கண்ணாயிரம்.

a)

A. சூரியனைக் கண்ட பனி போல

b)

B. பசுத்தோல் போர்த்திய புலி போல

c)

C. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

7.

சூழலுக்கேற்ற பழமொழியை அடையாளம் காண்க.


சிறுவயதிலேயே படம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தான் கபிலன். சரியான வழிகாட்டல் இருந்ததால் தற்போது தலைசிறந்த ஓவியனாகத் திகழ்கிறான்.

a)

A. சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்.

b)

B. முன் வைத்த காலைப் பின் வைக்காதே

c)

C. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

8.

படத்திற்கேற்ற பழமொழியை அடையாளம் காண்க.

a)

A. பதறாத காரியம் சிதறாது

b)

B. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

C. அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

9.

தவறான இணையை அடையாளம் காண்க

a)

A, பழக்க வழக்கம் - தொன்று தொட்டு

b)

B. தான தர்மம் - கொடை பெறுதல்

c)

C. மூலை முடுக்கு - எல்லா மூலைகளிலும்

d)

D. வரவு செலவு - வருமானமும் செலவினமும்

10.

சூழலுக்கேற்ற பழமொழியை அடையாளம் காண்க.


தலைவர் பதவியிலிருந்து விலகியதும் திரு.அருணன் சுற்றுவட்டார மக்களுக்கு உதவி செய்வதை நிறுத்திக் கொண்டார்.

a)

A. ஈடு கட்டுதல்

b)

B. ஆழம் பார்த்தல்

c)

C. எடுப்பார் கைப்பிள்ளை

d)

D. கை கழுவுதல்

11.

தமிழ்நெடுங்கணக்கில் 216 _________ எழுத்துகள் உள்ளன.

a)

A. உயிர்மெய்

b)

B. உயிர்

c)

C. மெய்

d)

D. ஆய்த

12.

சரியான சினைப் பெயரைத் தெரிவு செய்க.

a)

A. இலை

b)

B. ஆசை

c)

C. அழுகை

d)

D. கோயில்

13.

நான்காம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. அம்மா செல்வியைக் கூப்பிட்டார்.

b)

B. இன்று வைஷ்ணவிக்குப் பிறந்த நாள்.

c)

C. கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தார்.

d)

D. தினகரனும் டிவியேஷனும் ஓவியம் வரைந்தனர்

14.

கீழ்க்காணும் வாக்கியங்களில் காணும் இறந்த கால வினைமுற்றைத் தெரிவு செய்க.

a)

A. வேகமாக ஓடிய பையன் முதல் பரிசு வென்றான்.

b)

B. அப்பா வாங்கிய பொம்மை அழகாக இருக்கிறது.

c)

C. கமலா புதிய நாவல் ஒன்றை எழுதுகிறாள்.

d)

D. அஃது அழகிய பூனை.

15.

சரியான விடையைத் தெரிவு செய்க

a)

A. ராஜன் + இந்திரன் = ராஜேந்திரன்

b)

B. மகா + ஈஸ்வரி = மகேஸ்வரி

c)

C. தேவன் + இந்திரன் = தேவேந்திரன்

d)

D. ராஜன் + ஈஸ்வரன் = ராஜேஸ்வரன்

16.

சரியான செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

A. என்னுடன் கடைக்கு வருவாயா

b)

B. கதவைத் திறந்து வை

c)

C. சென்னையில் இடைவிடாது மழை பொழிகிறது

17.

ஆண் + அழகன்

a)

A. இயல்பு புணர்ச்சி

b)

B. தோன்றல் புணர்ச்சி

c)

C. திரிதல் புணர்ச்சி

d)

D. விகாரப் புணர்ச்சி

18.

சரியான வினையடை கொண்ட சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

A. உயரமான மரம்

b)

B. செழிப்பான பயிர்

c)

C. ஆழமான கிணறு

d)

D. அன்பாக பேசினான்

19.

சரியான வலிமிகுந்துள்ள வாக்கியத்தை அடையாளம் காண்க.

a)

புலி மானைத் கடித்துக் கொதறியது.

b)

கலைமகள் மலர்களைக் கொய்துத் தந்தாள்.

c)

கண்ணகி பாட்டுப் பாடினாள்.

d)

மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றுக் கூறினார் பிரதமர்.

20.

சரியான இலக்கணக் கூற்றை அடையாளம் காண்க.

a)

காரவடை - கெடுதல் விகாரம்

b)

வடகிழக்கு - திசைப்புணர்ச்சி

c)

பப்பத்து - கெடுதல் விகாரம்

d)

கண்ணிமை - தோன்றல் விகாரம்