wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

திருக்குறள் இயற்றப்பட்டு எத்தனை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

a)

2000 ஆண்டு

b)

3000 ஆண்டு

c)

1000 ஆண்டு

2.

திருக்குறளில் உள்ளடங்கி இருக்கும் முப்பால் யாவை?

a)

ஆண்பால், பெண்பால், பலர்பால்

b)

பலவின்பால், ஒன்றன்பால், ஆண்பால்

c)

அறம், பொருள், இன்பம்

3.

1330 குறட்பாக்களில் எத்தனை அதிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

a)

200 அதிகாரம்

b)

133 அதிகாரம்

c)

100 அதிகாரம்

4.

தமிழ்நாட்டில் திருவள்ளுவர் தினம் எந்நாளில் அறிவிக்கப்பட்டது?

a)

தை மூன்றாம் நாள்

b)

தை இராண்டாம் நாள்

c)

தை நான்காம் நாள்

5.

திருவள்ளுவர் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஊரில் தோன்றியதாகக் கருதப்படுகிறது?

a)

தஞ்சாவூர்

b)

கும்பகோணம்

c)

மயிலாப்பூர்

6.

இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் ................


a)

திருமூலர்

b)

வீரமா முனிவர்

c)

பெருஞ்சித்திரனார்

7.

யார் திருக்குறளுக்கு உரைநடையில் சிறந்த விளக்கம் எழுதினார்?

a)

பரிமேலழகர்

b)

தனிநாயகம் அடிகள்

c)

வீரமா முனிவர்

8.

‘உயிரைவிட ஒழுக்கம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது’

இந்த விளக்கதிற்கேற்ற திருக்குறள் யாது?


a)

ஒழுக்கம் தரலான் விழுப்பந் ஒழுக்கம்

   உயிரினும் ஓம்பப் படும்

b)

 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

   உயிரினும் ஓம்பப் படும்

c)

 ஒழுக்கம் விழுப்பந் ஒழுக்கம் தரலான்

   உயிரினும் ஓம்பப் படும்

9.

‘மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு வளரும். தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்கப் அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்’

மேற்கண்ட விளக்கத்திற்கான குறள் யாது?


a)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

   எழுமையும் ஏமாப் புடைத்து.

b)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

   கற்றனைத் தூறும் அறிவு

c)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

   இடுக்கண் களைவதாம் நட்பு

10.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

-----------------------------------------------

விடுப்பட்ட குறளின் வரிகள் யாவை?


a)

கற்றனைத் தூறும் அறிவு

b)

தோன்றலின் தோன்றாமை நன்று

c)

    எழுமையும் ஏமாப் புடைத்து

11.

ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறை கற்கும் கல்வி அவரின் வாழ்நாளெல்லாம் தொடர்ந்து நிலைத்திருக்கும்.

மேற்காணும் விளக்கத்திற்கேற்ற குறட்பா யாது?


a)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

   எழுமையும் ஏமாப் புடைத்து.

b)

 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது

c)

 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

   சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

12.

"வள்ளுவன் வாசுகி போல் வாழ்வாங்கு வாழ வேண்டும்"

என்ற வாழ்த்துரைக்கு ஏற்ற குறட்பாவை உறுதிசெய்க.

a)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

   சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

b)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது

c)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

   இடுக்கண் களைவதாம் நட்பு

13.

நாவடக்கம் தொடர்பான கருத்துகளை உணர்த்தும் குறட்பா எது?

a)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

   சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

b)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது

c)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

   இடுக்கண் களைவதாம் நட்பு

14.

'நெருங்கிய நண்பனுக்குச், சிரமம் ஏற்பட்டபோது உடனே அதைக் களைவதுவும், துன்பத்தில் இருக்கும்போது அவனுக்கு உதவுவதுமே உண்மையான நட்பு.'

மேற்காணும் விளக்கத்திற்கேற்ற குறட்பாவை உறுதிசெய்க.

a)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

   சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

b)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது

c)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

   இடுக்கண் களைவதாம் நட்பு

15.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

மேற்காணும் கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் யாது?

a)

உணவாக ஆக்கி

b)

உண்பவர்க்கு

c)

 ஊட்டமான உணவு

16.

நன்றி மறப்பது நன்றன்று ...........

.......................................

மேற்காணும் குறட்பாவில் விடுபட்ட வரிகள் யாவை?

a)

நன்றல்லது அன்றே மறப்பது நன்று

b)

நன்று நன்றல்லது அன்றே மறப்பது

c)

மறப்பது நன்றல்லது அன்றே நன்று

17.

................................................ அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை

மேற்காணும் குறளில் விடுபட்ட வரிகள் யாவை?


a)

செல்வத்துட் செவிச்செல்வம் செல்வஞ்

b)

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்

c)

செல்வஞ் செவிச்செல்வம் செல்வத்துட்

18.

திருக்குறளில் பயன்படாத ஒரே உயிரெழுத்து?

a)

 ஔ

b)

c)

19.

அன்பு இல்லாதவர்களின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்டது ஆகும்.

மேற்காணும் பொருளை உணர்த்தும் குறள் யாது?

a)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது

b)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

   இடுக்கண் களைவதாம் நட்பு

c)

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

   என்புதோல் போர்த்த உடம்பு

20.

திருவள்ளுவரின் கருத்துப்படி மனிதர்களின் நற்செயல்களுக்குத்  தடையாக இருப்பவை யாவை?

a)

அன்பு, மதம், செல்வம்

b)

சாதி, மதம், செல்வம்

c)

மனிதநேயம், மதம், செல்வம்

21.

திருவள்ளுவர் எந்த சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்?

a)

தெய்வப் புலவர், முதற்பாவலர்

b)

வாயுறை வாழ்த்து, முதற்பாவலர்

c)

தமிழ்மறை, முதற்பாவலர்

22.

வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பின்படி, திருவள்ளுவர் வாழ்ந்த காலம் எது?

a)

கி.பி 3ஆம் நூற்றாண்டு

b)

கி.பி 1ஆம் நூற்றாண்டு

c)

கி.பி 2ஆம் நூற்றாண்டு

23.

திருவள்ளுவர் மொத்தம் எத்தனை குறட்பாக்களை இயற்றியுள்ளார்?


a)

1320

b)

1330

c)

1329

24.

திருவள்ளுவர் எந்தத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தார் என நம்பப்படுகிறது?

a)

உற்பத்தி தொழில்

b)

வணிகத் தொழில்

c)

நெசவுத் தொழில்

25.

  திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன?

a)

வாசுகி

b)

தாமரை அம்மையார்

c)

பொன்னம்மா