wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

வினைமுற்று __________,____________,____________,_________,_________ ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும்.

a)

திணை, எண், பால், இடம், காலம்

b)

பொருள், பண்பு, திணை, எண், பால்

c)

சினை, எச்சம், பெயர், இடம், பால்

d)

பால், இடம், பண்பு, சினை, பெயர்

2.

நெடுங்கணக்கில் 216 எழுத்துகள் __________ ஆகும்.

a)

உயிர்மெய் எழுத்து

b)

உயிர் எழுத்து

c)

மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

3.

செய்வினை வாக்கியத்திற்கேற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

கூரை தாத்தாவின் வேயப்பட்டது.

b)

ஓவியம் மாலதியை வரையப்பட்டது.

c)

புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.

d)

பாடங்கள் கண்ணனோடு முறையாகச் செய்யப்பட்டன.

4.

அஃறிணை வகுப்பு எதனைக் குறிக்கின்றது ?

a)

பகுத்தறிவுள்ள உயிரினங்களையும் உயிருள்ளபொருள்களையும் குறிப்பது.

b)

பகுத்தறிவற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிப்பது.

c)

பகுத்தறிவற்ற உயிரினங்களையும் பகுத்தறிவுள்ள தேவர்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிப்பது.

d)

பகுத்தறிவற்ற உயிரினங்களையும் பகுத்தறிவுள்ள மனிதர்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிப்பது.

5.

நெல்மணிகளை உண்ட சுண்டெலிக்கு வயிறு நிரம்பிவிட்டது. ______________ பேராசையினால் சுண்டெலி தொடர்ந்து நிறைய உண்டதால் அதன் வயிறு பெருத்துவிட்டது.

a)

ஆகவே

b)

இதனால்

c)

இருப்பினும்

d)

ஆனால்

6.

உயிர் எழுத்துகள் ________________ வகைப்படும். அவை __________________ மற்றும் _______________ ஆகும்.

a)

2, குறில், நெடில்

b)

2, உயர்திணை, அஃறிணை

c)

3, ஆண்பால், பெண்பால், பலர்பால்

d)

2, தோன்றல், திரிதல்

7.

மேற்கோள் குறி _________________ வகைப்படும்.

a)

2

b)

3

c)

4

d)

5

8.

பின்வரும் வாக்கியங்களைத் தொடர் வாக்கியங்களாக மாற்றுக.

1. இன்று கடுமையாக மழை பெய்தது.

2. அமுதன் புறப்பாட நடவடிக்கைக்குச் சென்று வந்தான்.

a)

கடுமையான மழை பெய்வதால் அமுதன் புறப்பாட நடவடிக்கைக்குச் சென்று வந்தான்.

b)

கடுமையான மழை பெய்ததால் அமுதன் புறப்பாட நடவடிக்கைக்குச் சென்று வந்தான்.

c)

கடுமையான மழை பெய்தாலும் அமுதன் புறப்பாட நடவடிக்கைக்குச் சென்று வந்தான்.

d)

அமுதன் புறப்பாட நடவடிக்கைக்குச் சென்றதால் கடுமையான மழை பெய்தது.

9.

ஒன்றும் அறியாதவனாக இருந்த மணி அவ்வூரை விட்டுச் சென்றான். இன்று அவன் அறிவும் ஆற்றலும் மிகுந்தவனாக வீடு திரும்பினான்.

a)

எடுப்பார் கைப்பிள்ளையாக

b)

கிணற்றுத் தவளையாக

c)

அவசரக் குடுக்கையாக

d)

கிள்ளுக் கீரையாக

10.

கீழே கொடுக்கப்பட்ட பழமொழிக்கேற்ற கருத்தைக் கொண்ட வேறு பழமொழியைத் தெரிவு செய்க.


சிக்கனம் சீரையளிக்கும்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

b)

சிறுகக் கட்டிப் பெருக வாழ்.

c)

வெள்ளம் வரும்முன் அணைபோடு.

d)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

11.

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கபிலன் சிறந்த படைப்பை வழங்கினான். ஆனாலும், உச்சரிப்புப் பிழைகள் அதிகமாக இருந்ததால் அவனுக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை.

a)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

b)

கல்விக் கழகு கசடற மொழிதல்.

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

12.

இனியன் பலருடன் கூடா நட்பு கொண்டதால் இன்று அவன் மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்ல தொடங்கி விட்டான்.

a)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

b)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

c)

அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்.

d)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

13.

1. ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ எனும் கொன்றை வேந்தனின் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

சூதாடுதல்

b)

தேவையற்ற வாக்குவாதம் செய்தல்

c)

சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும்

d)

துன்பம் தரும்

14.

இயல், இசை, நாடகம் என்பது_______________ஆகும்.

a)

மூன்று தமிழ்

b)

முத்தமிழ்

c)

முக்கனி

d)

மூவர்

15.

பொருளுக்கு ஏற்ற செய்யுள் வரியைத் தெரிவு செய்க.


தன்னை உணர்ந்தவர்களுக்கு உள்ளவனவாகவும் தன்னை நம்பாதவர்களுக்கு இல்லாதவனாகவும் விளங்கி நம்மை அரசாளுகின்றான்.

a)

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

b)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

c)

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

d)

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

16.

ரகு தன் தாயார் மருத்துவமனையில் இருப்பதாகச் சாமர்த்தியமாகப் பொய் சொல்லிவிட்டு திரைப்படம் பார்க்கச் சென்றான்.


கோடிடப்பட்ட சொற்களுக்கு ஏற்ற மரபுத் தொடரைத் தெரிவு செய்க.

a)

கம்பி நீட்டுதல்

b)

காது குத்துதல்

c)

கடுக்காய் கொடுத்தல்

d)

அள்ளி விடுதல்

17.

சரியான இணைமொழியை எழுதுக.

கேமரன் மலை பகுதியின் சாலைகள் _____________ மிகுந்ததாக காணப்படுகின்றன.

a)

அருமை பெருமை

b)

மேடு பள்ளம்

c)

அன்றும் இன்றும்

d)

சுற்றும் முற்றும்

18.

கீழ்க்காணும் வாக்கியங்களில் ரகரச் சொல் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பூனை எலியைத் துறத்தியது.

b)

அம்மா அரிசியை முரத்தில் புடைத்தார்.

c)

அகிலன் கடற்கரையில் மணல் வீடு கட்டினான்.

d)

மாலினி பூக்களைப் பரித்தாள்.

19.

பின்வருவனவற்றுள் கிரந்த எழுத்துகளைக் கொண்டிருக்கும் சொற்கள் யாவை?

I. புஷ்பம்

II. கஷ்டம்

III. ஒளவை

IV. ஜாடி

a)

I,II,III

b)

I,III,IV

c)

I,II,IV

d)

II,III,IV

20.

கொடுக்கப்பட்ட பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

a)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.

b)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

c)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.

d)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக.

21.

சேர்த்து எழுதுக.


தென்னை + கீற்று

a)

தென்னங்கீற்று

b)

தென்னம்கீற்று

c)

தென்னைக்கீற்று

d)

தென்னைகீற்று

22.

மாட்டு வண்டிக்காரன் தனது மாடுகளை அதிவேகமாக ஓடச்செய்ய சாட்டையால், ________________ என்று அடித்தார்.

a)

பளீர் பளீர்

b)

பள பள

c)

பளார் பளார்

23.

வித்தியாபதி மேடையில் பேசும்போது, மற்றவர் மனம் அறியாது தன் விருப்பம் போல் வார்த்தைகளை அள்ளி வீசுவான். ஒரு நாள் அப்படிப் பேசுகையில், ஒரு பெரியவர் அவன் முன்தோன்றி “உன் பேச்சு மற்றவர் மனம் புண்படும்படியாக இருக்கிறது!” எனவே பேச்சை நிறுத்தும்படி அனைவரது முன்னிலையிலும் உத்தரவிட்டார்.

a)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

c)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

24.

ஆங்கிலம், பிரேஞ்சு, இலத்தின் போன்ற மொழிகளில் புலமை பெற்றதோடு, நீச்சல், படகோட்டம், குதிரையோட்டம் போன்றவற்றிலும் திறமைப் பெற்று விளங்கிய அவர், உடற்குறைபாடுகள் உள்ளவர்களாலும் முடியும் என்பதைச் செய்து காட்டியது, உடற்குறைபாடுகள் உள்ள மற்றவர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது.

a)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

25.

இராமன் பல்கலைகழகம் சென்று பட்டப்படிப்பை முடித்து கல்வி அமைச்சில் ஓர் அதிகாரியாக வேலையில் அமர்ந்த பிறகுதான் அவரது குடும்பம் ______________ ஆரம்பித்தது.

a)

தாளம் போட

b)

தட்டிக்கழிக்க

c)

தலைமுழுகுதல்

d)

தலை எடுக்க

26.

மதன் கோடீஸ்வரர்.தொழில் நுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றுச் சிறந்த

தொழிலதிபராகத் திகழ்கிறார்.மேலும், அவர்தம் உறவினர் பிள்ளைகளைத்

தமக்குச் சொந்தமான தொழிற்சாலையிலேயே வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

c)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

d)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

27.

‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’

இத்திருக்குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம் யாது?

a)

அறிவுடைமை

b)

ஒழுக்கமுடைமை

c)

வான் சிறப்பு

d)

பெருமை

28.

ஒரு சிக்கலை எதிர்நோக்குவதற்கு முன்பாகவே அதனைத்தடுப்பதற்கான வழிவகைகளை அறிந்து செயல்பட்டால் துன்பம் விளையாது.


சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

வெள்ளம் வருமுன் அணைபோடு

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

c)

வருந்தினால் வாராதது இல்லை

29.

நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது இடையில் ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்.

இக்கூற்றிற்கு ஏற்ற விகாரப் புணர்ச்சி எது?

a)

திரிதல்

b)

தோன்றல்

c)

புணர்தல்

d)

கெடுதல்

30.

சேர்த்தெழுதுக


மா + கொத்து =

a)

மாங்கொத்து

b)

மாகொத்து

c)

மாக்கொத்து