wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலம் [ சுமதி தேவராஜூ] தேசிய வகை சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

காலத்திற்கு ஏற்ற சரியான விளக்கத்தைத் தெரிவு செய்க.

a)

ஒரு செயல் அல்லது தொழில் நடைபெறவிருப்பதைக் காட்டுவது நிகழ்காலம்.

b)

ஒரு செயல் அல்லது தொழில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காட்டுவது இறந்தகாலம்.

c)

ஒரு செயல் அல்லது தொழில் நடந்து முடிந்து விட்டதைக் காட்டுவது எதிர்காலம்.

d)

காலங்கள் மூன்று வகைப்படும்

2.

மயில் மழை வருமுன் தோகை விரித்தாடும். கோடிடப்பட்ட சொல் எந்த வகை காலத்தைக் குறிக்கின்றது?

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

3.

சுபா நாளை ஆடுவாள்.

மேலே உள்ள வாக்கியம் என்ன காலம் ?

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

4.

கீழ்காணும் வாக்கியத்தில் காணப்படும் வினையெச்ச சொல்லை மட்டும் தெரிவு செய்க.

மாலினியின் திருமண நிகழ்ச்சியில் அனைவரும்ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

a)

அனைவரும்

b)

மாலினி

c)

ஆடிப்

d)

திருமண

5.

போதி தர்மன் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் ________________. பின்னர், புத்த மதத்தைத் _____________________.

a)

பிறந்தார், தழுவுவார்

b)

பிறப்பார், தழுவுவார்

c)

பிறந்தார், தழுவினார்

d)

தழுவுவார், பிறந்தார்

6.

வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான காலத்தைத் தெரிவு செய்க.


மாமரத்தில் கனிகள் காய்த்துத்______

I. இறந்தகாலம்.

II. நிகழ்காலம்

III. எதிர்காலம்

a)

i , ii

b)

i , iii

c)

ii. iii

d)

i. ii , iii

7.

'தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு'என்ற முழக்கம் நாடெங்கும் பரவியதால் இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ___________________________________________________

a)

அதிகரிக்கும்

b)

அதிகரிக்கிறது

c)

அதிகரித்துள்ளது

8.

நேற்று முத்துவின் அப்பா சந்தையிலிருந்து பப்பாளிப்பழம் வாங்கி________________________ . முத்து பப்பாளிப்பழத்தைச் சுவைத்து____________________________.

a)

வந்தார், உண்டான்

b)

வருவார், உண்பான்

c)

வருவார், உண்டான்

d)

வருகிறார், உண்கிறான்

9.

கீழ்காணும் வாக்கியங்களுள் இறந்தகால வினைச்சொல்லை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நாளை பள்ளிக்கு வர மாட்டேன் என வசந்தன் மாலதியிடம் கூறினான்.

b)

தேன்மொழி அடுத்த வாரம் வெளிநாட்டிற்குச் செல்லவிருக்கிறாள்.

c)

பாட்டி கோவிலுக்குச் சென்று இறைவனைத் தரிசனம் செய்கிறார்.

d)

மலர்விழி தன்னுடைய துணிகளைத் துவைத்து காயப் போடுவாள்.

10.

கீழ்காண்பனவற்றுள் எது சரியான இணை அல்ல?

a)

பறந்தது - இறந்தகாலம்

b)

வரைகிறாள் - நிகழ்காலம்

c)

எழுதுவாள் - எதிர்காலம்

d)

மறைந்தார் - எதிர்காலம்

11.

கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ....................... ஆகும்.


உடல் நலம் சரியில்லாத தன் தந்தைக்கு உமா கடைக்குச் சென்று உணவு வாங்கி கொடுத்தாள்.

a)

வினையெச்சம்

b)

வினைமுற்று

c)

எழுவாய்

d)

பெயரெச்சம்

12.

கீழ்காணும் வினைமுற்று காட்டும் சரியான விடையைத் தெரிவு செய்க.


பார்க்கின்றான்


i. அஃறிணை

ii. ஆண்பால்

iii. நிகழ்காலம்

iv. படர்க்கை

a)

ii,iii,iv

b)

i, ii, iv

c)

i, ii, iv

d)

i .iii ,iv

13.

காலம் எத்தனை வகைப்படும் ?

a)

3

b)

1

c)

6

d)

2

14.

சரியான எதிர்காலத்தைக் காட்டும் சொற்களை தேர்ந்தெடுக.

a)

பாடினான்

b)

பாடுகிறார்

c)

செல்வார்

d)

நடந்தன

15.

கீழ்க்காணும் கூற்று எந்தக் காலத்தைக் குறக்கிறது ?

a)

இந்நாட்டுப் பிரதமராகத் தேர்வு பெற்றுள்ள நான் இந்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன்.

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

d)

இறந்தகாலம்

16.

நாட்டில் கொரோன வைரஸ் கிருமியால் சில மாதங்களிலேயே பலர் பலியாயினர்.

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகாலம்

17.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இறந்தகால வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அமெரிக்க பிரதமர் இந்திய நாட்டுக்கு மூன்று நாள்கள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

b)

நீதிமன்ற ஆணைப்படி தேசிய முன்னணி ஆண்டுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும்

c)

வேலன் ஆசியான் விளையாட்டுப் போட்டிக்காகத் தம் பயிற்சியைத் தீவிரப்படுத்துகிறார்.

d)

நேற்று வங்கிக் கொள்ளையில் சம்மந்தப்பட்ட இருவரைக் கைது செய்தனர்.

18.

வனைந்தார்

கொடுக்கப்பட்டுள்ள சொல் காட்டும் காலத்தைத் தெரிவு செய்க

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

19.

கீழ்க்காணும் வாக்கியங்களுள் நிகழ்காலத்தைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

விவசாயிகள் நெற்பயிர்களை விற்றனர்

b)

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருவதைப் பாருங்கள்.

c)

எதிர்வரும் பள்ளி விடுமுறையில் நான் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளேன் என்று பரதன் கூறினான்.

d)

டாக்டர் காதர் இபுராகிம் தமன்முனைப்பு உரையைக் கேட்ட மக்கள் உற்சாகமாக அமர்ந்திருந்தனர்.

20.

நிகழ் காலம் என்பது ஒரு செயல் அல்லது தொழில் __________ காட்டும்.

a)

நடைபெற்றுக் கொண்டிருப்பதை

b)

நடைபெறுவதை

c)

நடக்கும்

21.

எந்த வாக்கியம் சரியாக உள்ளது ?

a)

குமுதன் நடனம் ஆடுகிறாள்.

b)

சிவா நாளை வந்தான்.

c)

நேற்று பாடலை வினோத் பாடுவான்.

d)

கர்ணன் போரில் உயிர் மாண்டான்.

22.

வாக்கியத்தில் பொருத்தமான நிகழ்கால சொல்லைத் தெரிவு செய்க.


கயல்விழி தான் எழுதிய கவிதையை மேடையில் -____________________________

a)

படைக்கிறாள்

b)

படைப்பாள்

c)

படைத்தாள்

23.

கீழ்காணும் சொல்லில் பொருத்தமான காலம் காட்டும் இணையைத் தெரிவு செய்க....


மறை

a)

..........யும் [ நிகழ்காலம் ]

b)

..........கிறது [ எதிர்காலம் ]

c)

.........ந்தது [இறந்தகாலம்]

24.

அடுத்த வாரம்-__________________ கண்காட்சியைக் காண என் பள்ளியின் அறிவியல் கழகம் ஏற்பாடு செய்து வருகின்றது.

a)

நடைபெற்ற

b)

நடைபெறவுள்ள

c)

நடைபெற

d)

நடைபெற்றுக் கொண்டிருக்கும்

25.

கீழ்க்காணும் வாக்கியங்களுள் எதிர்காலத்தைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சுமதி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவருக்குப் படிக்க ஆசைப்பட்டாள்.

b)

விமலா மேடையில் நடனம் ஆடினாள்.

c)

பாரதிதாசன் புனைந்த பாடல்கள் கருத்து ஆழமிக்கவை

d)

சாந்திக்கு சரவணன் தந்த கொலுசு மிகவும் அழகாக இருந்தது.

26.

கீழ்க்காணும் வாக்கியத்தை எதிர்கால பன்மை வாக்கியமாக மாற்றுக.


ஆசிரியர் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார்.

a)

ஆசிரியர் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றுவர்

b)

ஆசிரியர் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றுவார்.

c)

ஆசிரியர்கள் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றுவர்

d)

ஆசிரியர்க்ள் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார்.

27.

சரியான இறந்த கால வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கடந்த ஆண்டு ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தைக் கல்வி அமைச்சர் சிறப்பாகத் தொடக்கி வைப்பார்.

b)

கடந்த ஆண்டு ஆசிரியர் தினக் கொண்டாட்டம் கல்வி அமைச்சரால் மிகவும் சிறப்பாகத் தொடக்கி வைக்கப்பட்டது

c)

கடந்த ஆண்டு ஆசிரியர் தினக் கொண்டாட்டம் கல்வி அமைச்சர் சிறப்பாகத் தொடக்கி வைக்கிறார்

d)

கடந்த ஆண்டு ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தைக் கல்வி அமைச்சர் சிறப்பாகத் தொடக்கி வைத்துள்ளார்.

28.

சரியான எதிர்கால வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

நேரம் தவறாமல் உணவு கொள்வதால் அவர் நீணடகாலம் நோயின்றி வாழ்கிறார்.

b)

காலம் தவறாமல் கடமைகளைச் செய்வதால் அவரின் புகழ் பெருகும்.

c)

நான் நல்லதையே நினைக்கின்றேன் நல்லதே நடக்கிறது.

d)

உள்ளதைச் சொல்லுக ! உலகை வெல்லுக !

29.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

இறந்தகாலம் - பாடினான், நடக்கும், கேட்டான், ஆடினர்

b)

நிகழ்காலம் - பாடுகிறான், நடக்கின்றன, கேட்கிறாள்

c)

எதிர்காலம் - பாடுவான், நடக்கும், ஆடின்ர், செல்லும்

30.

கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான காலத்தைத் தெரிவு செய்க.


கலையரசன் மருத்துவக் கல்வி கற்க வெளிநாடு __________. நாளை காலை அவன் இளம் பருத்துவராக நாடு _________.

a)

இறந்தகாலம், எதிர்காலம்

b)

நிகழ்காலம், நிகழ்காலம்

c)

இறந்தகாலம், இறந்தகாலம்

d)

எதிர்காலம், நிகழ்காலம்