NEW
Font size
Worksheetsஇலக்கியம்
Total questions: 25
Worksheet time: 9mins
"நன்றாகத்தானே இருக்கிறாய்.... உழைக்காமல் பிச்சை எடுப்பது கேவலமாக இல்லையா?
இக்கூற்று ஏற்புடைய ஆத்திசூடி யாது?
உடையது விளம்பேல்
ஈவது விலக்கே
லூக்கம்அது கைவிடேல்
ஏற்பது இகழ்ச்சி
"இப்போது கணினித் துறையில்தான் அதிகமான வாய்ப்பு உள்ளது. எனவே, அத்துறையில்தான் நான் மேற்கல்வியைத் தொடரவுள்ளேன்" என்று இளமாறன் கூறினான்.
இக்கூற்றுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க
ஒப்புர ஒழுகு
ஓதுவ தொழியேல்
ஊக்கமது கைவிடேல்
ஔவியம் பேசேல்
இப்படத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடுக்கவும்
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
இளைத்தல் இகழ்ச்சி
ஔடதம் குறை
கற்றவற்றிற்கேற்ப வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்விளக்கத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடுக்கவும்
கற்றது ஒழுகு
எண்ணுவது உயர்வு
ஆண்மை தவறேல்
அச்சம் தவிர்
இப்படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
இவற்றுள் எவை உலகநாதர் பண்டிதர் இயற்றியது?
கொன்றை வேந்தன்
உலக நீதி
ஆத்திசூடி
வெற்றி வேற்கை
செல்வத்தைத் தேடி , அதை அனுபவிக்காமல் பூமியில் புதைத்து வைக்க வேண்டாம்.
ஏற்ற உலக நீதியைத் தெர்ந்தெடுக்கவும்
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
நிலையில்லக் காரியத்தை நிருத்த வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
இவற்றுள் எது அதிவீரராம பாண்டியன் எழுதிய செய்யுள் அல்ல?
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுநின்ற நடுவே
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
'மூர்க்கர் கேண்மை' இதன் பொருள் யாது?
கூடா ஒழுக்கம்
மூடர்களின் நட்பு
நல்லவர்களின் நட்பு
உயர்ந்த நட்பு
இவற்றுள் எவை அதிவீரராம பாண்டியன் இயற்றியது?
தொல்காப்பியம்
உலக நீதி
கொன்றை வேந்தன்
வெற்றி வேற்கை
இவற்றுள் எவை வான் சிறப்பை உணர்த்தும் குறள்?
உள்ளத்தால் பொய்யா தொழிகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
தமிழர்தம் திருமறையாகவும் உலக பொதுமறையாகவும் போற்றப்படும் நூல் எது?
திருவாசகம்
திருக்குறள்
பல்வகைச் செய்யுள்
திருமுறை
கொரோனா நச்சுயிரியைப் பற்றிய பல நம்பகத்தன்மையற்ற செய்திகள் ஊடகங்களில் பரவுவதை எவரும் நம்ப வேண்டா; பிறருக்குப் பகிரவும் வேண்டாமென்று காவற்றுறை அதிகாரி கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
தீயவை தீய பயத்தால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
இவற்றுள் எதைப் பற்றி வள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் குறிப்பிடவில்லை
ஒழுக்கம்
உழவு
கல்வி
மதம்
வள்ளுவர் ஏன் அனிச்சம் பூவை விருந்தினரோடு உவமை படுத்துகிறார்?
விருந்தினர்களை முகம் மலர வரவேற்றால் அனிச்சம் பூ மலர்வது போல் அவர்களின் முகமும் மலரும்.
விருந்தினர்களை முகம் மலர வரவேற்காவிட்டால், தொட்டால் வாடும் அனிச்சம் பூ போல் அவர்களின் முகமும் வாடும்.
விருந்தினர்களை முகம் மலர வரவேற்காவிட்டால், நுகர்ந்தவுடன் வாடும் அனிச்சம் பூ போல் அவர்களின் முகமும் வாடிவிடும்.
விருந்தினர்களை முகம் மலர வரவேற்காவிட்டால், கொய்ததும் வாடும் அனிச்சம் பூ போல் அவர்களின் முகமும் வாடிவிடும்.
இவற்றுள் எது இப்படத்திற்கு ஏற்ற திருக்குறள் அல்ல?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
'மெய்வருத்தம் பாரார்' என்பதன் பொருள் என்ன?
உண்மையைப் பொருட்படுத்த மாட்டார்
எதைப் பற்றியும் கவலைக் கொள்ள மாட்டார்
உடலையும் நோயையும் பொருட்படுத்த மாட்டார்
வருத்தம் கொள்ள மாட்டார்
_____________________ எனும் பாடல் இராமலிங்க வள்ளலாரால் இயற்றப்பட்டது.
திருவாசகம்
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு
திருவருட்பா
நெல்லுக்கு உமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு; புல்லிதழ் பூவிற்குமுண்டு
மேற்கண்ட அடிகள் எதை உவமையாக உணர்த்துகிறது?
பிறரிடமுள்ள குறைகளும் சிறுமைகளும்
பிறரிடமுள்ள பெருமைகளும் நற்பண்புகளும்
பிறரிடமுள்ள நல்லது கெட்டது
பிறரிடமுள்ள அக்கறை மனப்பான்மை
இளம்பூரணன் பள்ளி ஓய்வு வேளையில் _________________ ஓடினான்.
சுற்றும் முற்றும்
அங்கும் இங்கும்
மூலை முடுக்கில்
ஆடிப்பாடி
இவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்
எலியும் பூனையும் போல : எப்பொழுதும் நட்போடு இருத்தல்
பசுத்தோல் போர்த்திய புலி போல : தீயவன் போல் நடிக்கும் நற்குணம் உள்ளவன்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல - எவராலும் அறியப்படாத ஒருவரின் திறமை
இலைமறை காய் போல : ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
நளவேந்தன் (1) _________தன் வேளைகளைச் செய்து முடித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் (2)_________வென மின்னிய மோதிரத்தைக் கண்டான். அது யாருடையதாக இருக்குமென்று அறியாது (3)_________ விழித்துக் கொண்டிருந்தான்.
(1) குடுகுடு, (2) பள பள, (3) திரு திரு
(1) மள மள, (2) மினுமினு, (3) திரு திரு
(1) மள மள, (2) பள பள, (3) சிடுசிடு
(1) மள மள, (2) பள பள, (3) திரு திரு
கரிகாலன் கல்வியில் வெற்றிப் பெறுவேன் என்று சிறு வயதிலேயே __________. அதற்கேற்ப பாடங்களைக்____________ படித்தான். அனைத்துப் பாடங்களிலும்___________
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.கங்கணம் கட்டினான்
2.கண்ணும் கருத்துமாகப் 3.வெளுத்துவாங்கினான்
1.கங்கணம் கட்டினான்
2.கண்ணும் கருத்துமாகப்
3.வெளுத்து வாங்கினான்
1.கங்கணம் கட்டினான்
2.கண்ணும் கருத்துமாகப்
3.அள்ளி விட்டான்
1.கங்கணம் கட்டினான்
2.கரைத்துக் குடித்தான்
3.வெளுத்து வாங்கினான்
எய்தவனிருக்க அம்பை நோவானேன்?
இதன் பொருள் என்ன?
எப்படிப்பட்ட விடிவாத குணம் கொண்டவரிடமும் பக்குவமாக எடுத்துக் கூறினால் எளிதில் மனம் இரங்கி விடுவர்.
குற்றத்திற்குக் காரணமானவர்களை விடுத்து மற்றவர்களை நொந்து கொள்வதில் பயனில்லை.
ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும்.
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்' இதன் பொருள் யாது
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்தாமல் இருக்கும்
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை துரத்தியடித்து விடும்.
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொன்று விடும்
