Font size
Worksheetsமீள்பார்வை ஆண்டு 2
Total questions: 30
Worksheet time: 17mins
சரியான தனிவாக்கியத்தைத் தேர்ந்தெடு
யோகேந்திரன் மேடையில் பாடல் பாடினான்.
முத்து வேகமாக ஓடி வந்து அமர்ந்தான்.
படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
சிவருபனும் பவிணாவும் புத்தகம் வாசித்தனர்.
சிவருபன் புத்தகம் வாசித்தான்.
சிவருபன் தரையில் படுத்துப் புத்தகம் வாசித்தான்
படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
தரணித்தா உணவு சமைத்துச் சாப்பிடுகிறாள்.
தரணித்தா உணவு சாப்பிடுகிறாள்.
படத்திற்கு ஏற்ற தனி வாக்கியம் எது?
தரண் பழம் உண்கிறான்.
துர்கா பழம் உண்கிறாள்.
தரணும் துர்காவும் பழம் உண்கின்றனர்.
தோழிகள் _____________ விளையாடினர்.
வர்ணம்
பல்லாங்குழி
சிற்பி அழகான _____________ வடிக்கிறான்.
பொம்மையை
சிலையை
திரு ஜெயந்திரன் _____________ வாங்கினார்.
அன்பை
பழங்கள்
லாவிஷா உணவு ________________.
விளையாடினாள்
சமைத்தாள்
தவனேஷ் நீர் _________________.
சாப்பிட்டான்
அருந்தினான்
திவ்யா அழகாக நடனம்
ஆடினாள்
செய்தாள்
சிதேஷ் புல்லாங்குழல் இசைத்தான். (இது தனி வாக்கியமாகும்)
சரி
தவறு
டிவேனேஷ் பள்ளிச் சுவருக்கு அழகாக சாயம் ________________________.
பூசுகிறான்
பூசுகிறார்கள்
பூசுகிறது
தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தம்பி புத்தகம் எடுத்து பாடம் படித்தான்.
குரங்கு மரம் தாவியது.
அம்மா கடைக்குச் சென்று பழங்கள் வாங்கினார்.
____________! என்ன செய்வேன்? வேறு பணம் இல்லையே!
ஐயகோ
அடடா
ஆஹா
அப்படியா
___________! எவ்வளவு சுவையான உணவு!
அப்படியா
ஆஹா
ஐயோ
அம்மா
____________! என் உடம்பெல்லாம் வலிக்கிறதே!
ஆஹா
ஐயோ
அடடே
அப்படியா
மயில் ______________விரித்து ஆடும்.
தோகை
இறகு
இறக்கை
கால்
____________யில் பள்ளிக்குச் செல்வேன்.
மாலை
இரவு
காலை
காளை
குரங்கு மரத்திற்கு மரம் ___________.
தாவும்
நடக்கும்
சிரிக்கும்
உறங்கும்
அம்மா வாழைக்_______ பட்ட சட்டையைத் துவைத்தார்
கறை
கரை
இயல்யா இனிமையான ___________ பாட்டுப் பாடினாள்.
குறலில்
குரலில்
நாள்தோறும் __________ படித்தால் நன்மை பயக்கும்.
குறள்
குரல்
கனத்த மழையால் ___________ ஏற்பட்டது.
வெள்ளம்
வெல்லம்
மாமா தொழிற்சாலையில் ________ செய்கிறார்.
வேளை
வேலை
அக்காள் வாசலில் _________ இட்டார்.
கோளம்
கோலம்
கோயில் மணியின் ______ கேட்டது.
ஒலி
ஒளி
வாக்கியத்தை வரிசைப்படுத்துக.
சட்டை கமலேஷ் போடுகிறான்.
கமலேஷ் போடுகிறான் சட்டை.
கமலேஷ் சட்டை போடுகிறான்.
அம்மா ஏன் என்னை அழைத்தார்?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
நேற்று ஏன் மழை பெய்யவில்லை?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம் எது?
மாறனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால் பள்ளிக்கு வரவில்லை.
மாறன் ஏன் பள்ளிக்கு வரவில்லை?
அம்மா மீன் கறி சமைத்தார்.
அப்பா வாகனத்தைக் கழுவினார்.
