NEW
Font size
WorksheetsQuiz 3 இலக்கண கேள்விகள் (ஆக்கம் திருமதி அ.ஈஸ்வரி)
Total questions: 25
Worksheet time: 13mins
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை
எட்டு
பன்னிரெண்டு
பதிநான்கு
பத்து
உயிர் நெடில் மொத்தம் எத்தனை
7
5
8
9
இடம் எத்தனை வகைப்படும்
6
4
5
3
உயிர்மெய்க் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை
80
75
60
90
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களையும் ஏற்று வந்துள்ள வாக்கியம் எது?
நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?
நான் உன் பந்தை மதியிடம் கொடுத்தேன்.
அவள் என் தங்கை.
ஷர்வினா படிப்பில் கெட்டிக்காரி.
இப்படத்தின் சரியான பால் வகை எது.
பலவின்பால்
ஒன்றன்பால்
பலர்பால்
ஆண்பால்
வல்லின மெய்யெழுத்துகளைக் குறிப்பிடுக.
க்,ல்,ப்,ர்,ம்,ச்
க்,ச்,ட்,த்,ப்,ற்
க்,வ்,ச்,த்,ப்,ற்
க்,ர்,ட்,ம்,ப்,ற்
உயிர்மெய் நெடில் எழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
கோவில்
ஏணி
ஊக்கு
சங்கு
எது இடையின மெய்யெழுத்தைக் கொண்டுள்ளது.
தட்டு, கட்டு, பட்டு.
பஞ்சு, கந்தகம், பந்தம்.
மன்றம், கொய்து, பஞ்சம்.
பள்ளம், கல், காய்.
கொடுக்கப்பட்ட இணைகளில் எது தவறானது.
பூனை - ஒன்றன்பால்
மாணவர்கள் - பலர்பால்
முதியவர்கள் - பலவின்பால்
கமலா - பெண்பால்
கீழ்க்காண்பனவற்றுள் முன்னிலை இடத்தைக் குறிக்காத சொல்லைத் தெரிவு செய்க.
அவன்
உன்
நீர்
உமது
கொடுக்கப்பட்ட சொற்பட்டியலில் சரியான ஒரே பொருள் தரும் சொற்களைத் தெரிவு செய்க.
தந்தை, அம்மா, பிதா.
உணவு, ஆகாரம், சாப்பாடு.
உலகம், நண்பன், பூமி.
ஆசிரியர், ஆசான், தோழன்.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் இனவெழுத்தைக் கொண்டுள்ள சொல்லைத் தெரிவு செய்க.
மஞ்சள்
சக்கரம்
வட்டம்
சைக்கிள்
முன்னிலை வாக்கியத்தைத் தெரிவு செய்யவும்.
நீ நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை?
அக்காள் வாசலில் கோலம் போட்டார்.
அவள் மேடையில் பரதம் ஆடினாள்.
நான் பாடல் பாடினேன்.
பின்வருவனவற்றுள் எந்தத் தொடர் வலிமிகாது.
தீ + பந்தம்
கடைக்கு + சென்றார்
கள்ளி + செடி
புரிந்து + கொண்டாள்
பாவனாவின் வயலின் உடைந்து விட்டது. _________ அவள் அதனைப் பழுது பார்க்க கடைக்கு எடுத்துச் சென்றாள்.
ஆனால்
ஆகவே
எனினும்
இருப்பினும்
இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அம்மா கோயிலுக்குச் சென்றார்.
திரு.சரவணன் சந்தையில் காய்கறி விற்றார்.
ஷர்வினா புத்தகத்தை வாசித்தாள்.
படம் ஓவியரால் வரையப்பட்டது.
கொடுக்கப்பட்ட சொற்களில் எவை தன்மையைக் குறிக்கின்றது.
படித்தேன் , நடந்தான்.
பாடினேன், எழுதினேன்.
வாசித்தான், கூறினேன்.
அடுக்கினான், பேசினான்.
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது.
நாள்+ காட்டி= நாற்காட்டி
நாள்+ காட்டி= நாள்காட்டி
நாள்+ காட்டி= நாட்காட்டி
நாள்+காட்டி= நான்காட்டி
ஹீஷ்வர் சிறந்த கவிதையை இயற்றினான்;_________ அவனுக்கு விருது வழங்கப்பட்டது.
இருப்பினும்
எனினும்
ஆனால்
எனவே
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது தவறான இணை?
மெய்யெழுத்து - 18
உயிரெழுத்து - 12
உயிர்மெய்யெழுத்து - 216
உயிர்க்குறில் - 8
________ நண்பனுக்குத் துன்பம் தோன்றிடும் அவனுக்கு உதவுவதே உண்மையான நட்பாகும்.
தன்
தம்
நம்
நாம்
சரியான இலக்கண மரபை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஹரிந்திரன் ஒரு ௐவியம் வரைந்தான்.
திருமதி மேரி ஓர் அருமையான கதையை எழுதினார்.
அஃது ஒரு சிறப்பான கட்டுரை.
அது எங்கள் பள்ளிக்கூடம்.
மெல்லின எழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
பலகாரம்.
மல்லிகை.
வயல்.
யாழ்.
பின் வரும் ஒருமை பன்மை வாக்கியங்களில் எது தவறானது.
பழம்- பழங்கள்
வளையல் - வளையல்கள்
அலமாரி - அலமாரிகள்
கட்டம் - கட்டடம்கள்
