wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 5

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அகிலன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்று பள்ளிக்குப் ___________ பெற்றுத் தந்தான்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

கல்வி கேள்வி

d)

அரை குறை

2.

வெளியுலகம் அறியாமை

பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்ந்தெடுக.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

கிணற்றுத் தவளை போல

c)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

d)

காட்டுத் தீ போல

3.

யாரோ கதவைத் ______ தட்டும் சத்தம் கேட்டுக் குழந்தை அழுதது.

a)

பளீர் பளீர்

b)

மட மட

c)

தட தட

d)

மள மள

4.

சூழலுக்கு ஏற்ற மரபுத் தொடரைத் தெரிவு செய்க.

உள்நாட்டுப் பல்கலைகழகத்தில் மருத்துவ கல்வி பயில வேண்டும் என அண்ணனின் ஆசை ஈடேறியது.

a)

கிள்ளுக் கீரை

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

d)

திட்ட வட்டம்

5.

நேற்று வீசிய பலத்த காற்றால் மரங்கள் சரிந்து விழுந்தன.

சூழலுக்கு ஏற்ற இரட்டைக் கிளவியைத் தேர்ந்தெடு.

a)

மள மள

b)

தட தட

c)

பளீர் பளீர்

d)

மட மட

6.

புதிதாக வந்த முகிலனைப் பயமுறுத்த பாலன் முகிலனின் புத்தகப் பையில் அவனின் பணப்பையை வைத்தான். அதைக் கண்ட அரசு தீங்கு செய்வதால் ஏற்படும் விளைவுகளை முகிலனுக்கு எடுத்துரைத்து முகிலனின் எண்ணத்தை மாற்றினான்.

சூழலுக்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

      மாடல்ல  மற்ற யவை.

b)

தீயவை தீய பயத்தலால் தீயவை

      தீயினும் அஞ்சப் படும்.

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

      நோக்கக் குழையும் விருந்து

d)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

      தீமை இலாத சொலல்.

7.

செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எதற்கு முதன்மைக் கொடுக்கப்படும்?

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

செயப்படுபொருள்

8.

செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எதற்கு முதன்மைக் கொடுக்கப்படும்?

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

செயப்படுபொருள்

9.

செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எழுவாயுடன் இணையும் வேற்றுமை உருபு எது?

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

10.

”நீ நாளை பயிற்சி செய்ய என் வீட்டிற்கு வா, “ என்று குமரன் கவினிடம் கூறினான்.

a)

நாளை பயிற்சி செய்ய தன் வீட்டிற்கு வருமாறு குமரன் கவினிடம் கூறினான்.

b)

மறுநாள் பயிற்சி செய்ய தன் வீட்டிற்கு வருமாறு குமரன் கவினிடம் கூறினான்.

c)

மறுநாள் பயிற்சி செய்ய தன் வீட்டிற்கு வருமாறு குமரனிடம் கவின் கூறினான்.

d)

மறுநாள் பயிற்சி செய்ய என் வீட்டிற்கு வருமாறு குமரன் கவனிடம் கூறினான்.

11.

சரியான வன்தொடர் குற்றியலுகரத்தைக் குறிக்கும் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அப்படிச் சொல்

b)

அங்குச் செல்

c)

இந்தப் பையன்

d)

கூட்டுப் பணி

12.

வலிமிகா விதியை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

அங்கேச் செல்லக் கூடாது என அம்மா கூறினார்.

b)

”நீ எப்பொழுது மலாக்காவிற்குச் செல்கிறாய்?” என்று அப்பா கேட்டார்.

c)

நீ எங்கேச் சென்றாலும் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும்.

13.

செய்வினை வாக்கியத்தில் எதற்கு முதன்மைக் கொடுக்கப்படும்?

a)

எழுவாய்

b)

செயப்படுபொருள்

c)

பயனிலை