wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொல் வினாவிடை 7_1

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.
முத்தமிழ் என அழைக்கப்படுபவை எவை?
a)
இயல், இசை, நாடகம்
b)
மா, பலா, வாழை
c)
சேரர் சோழர், பாண்டியர்
d)
எழுத்து, சொல், பொருள்
2.
பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் யார்?
a)
தொல்காப்பியர்
b)
குமரகுருபரர்
c)
அகத்தியர்
d)
திருவள்ளுவர்
3.
தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரப் பிரிவுகள் எவை?
a)
எழுத்து, சொல், பொருள்
b)
அறம், பொருள், இன்பம்
c)
புகார், வஞ்சி, மதுரை
d)
வல்லினம், இடையினம், மெல்லினம்
4.
தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன?
a)
ஒன்பது
b)
ஏழு
c)
ஐந்து
d)
பன்னிரண்டு
5.
தொல்காப்பியத்தில் எத்தனை நூற்பாக்கள் உள்ளன?
a)
1602
b)
1330
c)
1800
d)
3000
6.
சங்கப் புலவர் பட்டியலில் இடம்பெறும் ஈழத்தவர் யார்?
a)
ஈழத்துப் பூதந்தேவனார்
b)
ஈழத்து நாகனார்
c)
வள்ளலார்
d)
குமரகுருபரர்
7.
முப்பால் என அழைக்கபடும் நூல் எது?
a)
திருக்குறள்
b)
குறிஞ்சிப்பாட்டு
c)
தொல்காப்பியம்
d)
சிலப்பதிகாரம்
8.
திருக்குறளில் உள்ள முப்பால்களும் எவை?
a)
அறம், பொருள், இன்பம்
b)
எழுத்து, சொல், பொருள்
c)
கல்வி, செல்வம், வீரம்
d)
வாய்மை, ஒப்புரவு, அருளுடைமை
9.
தமிழுக்கு கதி எனக் கூறப்படும் நூல்கள் எவை?
a)
கம்பராமாயணம், திருக்குறள்
b)
கலித்தொகை, திருப்புகழ்
c)
கணக்கதிகாரம், திரிகடுகம்
d)
கந்தபுராணம், திருவெம்பாவை
10.
ஔவையார் எழுதிய நூல்கள் எவை?
a)
ஆத்திசூடி,கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
b)
முதுகுருகு, முதுநாரை
c)
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு,
d)
நன்னூல், நற்றிணை, பரிபாடல், திரிகடுகம்
11.
தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் எவை?
a)
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி,
b)
இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, கைந்நிலை
c)
தொல்காப்பியம், திருக்குறள், வீரசோழியம், நம்பியகப்பொருள், முத்தொள்ளாயிரம்
d)
தொன்னூல், நளவெண்பா, நீலகேசி, பாகபதம், பாரிகாதை
12.
ஐப்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை இயற்றிவர் யார்?
a)
திருத்தக்கதேவர்
b)
இளங்கோ அடிகள்
c)
சாத்தனார்
d)
நத்தத்தனார்
13.
பூம்புகார் எந்த நாட்டின் தலைநகராக இருந்தது?
a)
சோழ நாடு
b)
சேர நாடு
c)
பாண்டிய நாடு
d)
ஈழ நாடு
14.
சேர நாட்டின் தலைநகராக விளங்கிய இடம் எது?
a)
வஞ்சி
b)
மதுரை
c)
தஞ்சை
d)
அனுராதபுரம்
15.
பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய இடம் எது?
a)
மதுரை
b)
வஞ்சி
c)
தஞ்சை
d)
அனுராதபுரம்
16.
சோழமன்னர்களின் கொடி எது?
a)
புலிக் கொடி
b)
மீன்கொடி
c)
விற்கொடி
d)
நந்திக்கொடி
17.
அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த தமிழ் மன்னன் ஒருவனின் பெயரைத் தருக?
a)
எல்லாளன்
b)
செங்குட்டுவன்
c)
கரிகாலன்
d)
நெடுஞ்செழியன்
18.
நன்னூல் என்னும் நூலை எழுதியவர் யார்?
a)
பவணந்தி முனிவர்
b)
பாரதியார்
c)
நச்சினார்க்கினியர்
d)
வீரமாமுனிவர்
19.
திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
a)
ஜி.யு.போப்
b)
கால்ட்வெல்
c)
ஜோசப் பெஸ்கி
d)
ஜோர்ச் கார்ட்
20.
தான் இறந்தபின் தனது சமாதியில் “A Student of Tamil Literature” என எழுதிவைக்கச்சொன்னவர் யார்?
a)
ஜி.யு.போப்
b)
கால்ட்வெல்
c)
ஜோசப் பெஸ்கி
d)
ஜோர்ச் கார்ட்
21.
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
a)
ஜோசப் பெஸ்கி
b)
கால்ட்வெல்
c)
ஜி.யு.போப்
d)
ஜோர்ச் கார்ட்
22.
இத்தாலியரான 'ஜோசேப் பெஸ்கி' தனக்கு வைத்துக்கொண்ட தமிழ்ப்பெயர் எது?
a)
வீரமாமுனிவர்
b)
மருதனார்
c)
பரணர்
d)
பெருந்தேவனார்
23.
'கப்பலோட்டிய தமிழன்' என அழைக்கப்படுபவர் யார்?
a)
வ. உ. சிதம்பரனார்
b)
வ. உ. சிதம்பரராசர்
c)
அறிஞர் அண்ணா
d)
தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
24.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.' எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
a)
சுப்பிரமணிய பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
வள்ளலார்
d)
மகாகவி உருத்திரமூர்த்தி
25.
புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
a)
பாரதிதாசன்
b)
சுப்பிரமணிய பாரதியார்
c)
வள்ளலார்
d)
அப்துல் ரகுமான்
26.
யாழ்நூலை எழுதியவர் யார்?
a)
சுவாமி விபுலாநந்தர்
b)
ஆறுமுகநாவலர்
c)
உ.வே. சாமிநாதையர்
d)
சின்னத்தம்பிப் புலவர்
27.
சுவாமி விபுலாநந்தர் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய பல்கலைக்கழகங்கள் எவை?
a)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகம்
b)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்
c)
பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
d)
பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
28.
தமிழகத்திலும் ஈழத்திலும் பாடசாலைகளை நிறுவித் தமிழ் வளர்த்த ஈழத்தவர் யார்?
a)
ஆறுமுகநாவலர்
b)
சி.வை.தாமோதரம்பிள்ளை
c)
ஈழத்துப் பூதந்தேவனார்
d)
விபுலாநந்தர் அடிகள்
29.
ஏட்டுச் சுவடிகளைத் தேடிப்பெற்று நூலாக்கிய ஈழத்தவர் யார்?
a)
சி.வை.தாமோதரம்பிள்ளை
b)
ஆறுமுகநாவலர்
c)
சின்னத்தம்பி புலவர்
d)
ஈழத்துப் பூதந்தேவனார்
30.
முதலாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை ஒழுங்கமைத்த ஈழத்தவர் யார்?
a)
தனிநாயகம் அடிகள்
b)
பேராசிரியர் வி. செல்வநாயகம்
c)
முருகேசு பண்டிதர்
d)
பேராசிரியர் க. கைலாசபதி

Similar Resources on Wayground