Worksheetsgroup 3
Total questions: 10
Worksheet time: 7mins
திருக்குறளை வேறு பெயரில் எப்படி அழைப்பர் ? ஒன்றனை எழுதுக
(a)
விடைப்பெற்ற இடத்தை பூர்த்தி செய்யவும்.
எந்நன்றி ----------------- முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
முள்ளுவர்
புத்தேள்
கொன்றார்க்கு
கொன்றார்கு
திருக்குறளுக்கு ஏற்ற பொருளை தேர்ந்தெடுக.
உதவி வரைத்தன் றுதவி யுதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து
உபகாரத்தின் மதிப்பு உபகாரம் எவ்வளவு என்றதைப் பொருத்தல்ல. உபகாரத்தை அடைந்தவனுடைய குணப் பெருமையின் அளவைப் பொறுத்தது.
உபகாரத்தின் பயனை உணரக்கூடியவர்கள், ஒருவன் தமக்குத் தினையளவு மிகச் சிறிய உதவியைச் செய்தாலும் அதனைப் பனையளவு மிக உயர்ந்ததாகப் பாராட்டுவார்கள்.
நன்றி கொல்லுதலாவது உபகாரம் செய்தவனுக்கு அபகாரம் செய்வது நன்றியை மறந்துவிட்டால் அது நல்லதல்ல என்பது மட்டும் ஆகும். ஆனால் நன்றியைக் கொன்று, நன்றி செய்தவனுக்குத் தீமை செய்தால் அது நிச்சயமாகப் பாவமுண்டாக்கும். அதினின்றும் தப்ப முடியாது.
நம்முடைய கஷ்ட காலத்தில் நமக்கு உதவி செய்த ஒருவன், அதன் பிறகு ஏதாவது நமக்குக் குற்றம் செய்துவிட்டாலும் அந்தக் குற்றத்தை மறந்துவிட வேண்டுமே யொழிய, முன் அவன் தக்க சமயத்தில் நமக்குச் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது.
பொருளுக்கு ஏற்ற திருக்குறளை தேர்ந்தெடுக்கவும்.
குற்றமற்ற நல்லவர்களுடைய சினேகத்தை மறந்து விடாதே. உன்னுடைய துன்ப காலத்தில் உதவி செய்தவர்கள் குற்ற முடையவர்களானாலும் அதற்காக வெறுப்புக்காட்டி அவர்களுடைய நட்பைத் தள்ளிவிடாதே.
உதவி வரைத்தன் றுதவி யுதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து
செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு
கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் திருக்குறள் எந்த பிற இலக்கியத்துடன் தொடர்புடையது.
செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.
“விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே.’’ - குறுந்தொகை 101
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்றே;
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொன்ற,
பெருந்தேன் இழைக்கும் நாடொளர்ந் நற்பே. - குறுந்தொகை 3
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. - குறள் 788
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே. - குறுந்தொகை 115
விடைப்பெற்ற இடத்தை பூர்த்தி செய்க.
பயன்றூக்கார் ------ ------- நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது
(a)
விடைப்பெற்ற இடத்தை நிரப்புக
----- ----- --------- --------
வொன்றுநன் றுள்ளக் கெடும்
கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த
கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
கொன்றன்ன விண்ணா செயினு மவர்செய்த
கொன்றன்ன இண்ணா செயினு மலர்செய்த
பொருளுக்கு ஏற்ற குறளை எழுதுக.
நம்முடைய கஷ்ட காலத்தில் நமக்கு உதவி செய்த ஒருவன், அதன் பிறகு ஏதாவது நமக்குக் குற்றம் செய்துவிட்டாலும் அந்தக் குற்றத்தை மறந்துவிட வேண்டுமே யொழிய, முன் அவன் தக்க சமயத்தில் நமக்குச் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது.
(a)
இந்த முன்னிலைப்படைப்பு விவாதிக்கும் "செந்நறி அறிதல்" என்ற தலைப்பு எதைப் பற்றியது?
துணிச்சல்
நன்றியுணர்வு
அறிவு
பொறுமை
எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யப்படும் உதவி எதற்குச் சாயல் காட்டப்படுகிறது?
ஆறு
கடல்
மலை
காடு
