Font size
Worksheetsமரபுத்தொடர் படிவம் நான்கு
Total questions: 10
Worksheet time: 21mins
உதவி என்று கேட்டு வரும் ஏழை மக்களுக்கு மனம் கோணாமல் உதவு செய்யும், திரு சுப்பையாவைக் ..................................................... என அனைவரும் போற்றினர்.
சாயம் வெளுத்தது
தட்டிக் கொடுத்தல்
கருணைக் கடல்
நிறை குடம்
வகுப்புத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுச் சோர்வாக இருந்த வெண்ணிலாவை அவளது அம்மா திட்டாமல், ................................................................ பேசினார்.
தட்டிக் கொடுத்து
காதில் பூ வைத்து
நிறை குடமாக
சாயம் வெளுத்து
முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் வேல்விழி ..................................................... இருந்து எல்லோரிடமும் ஆரவாரமின்றி இயல்பாகப் பழகுவதால், அவளை அனைவரும் விரும்பினர்.
கருணைக் கடலாக
சாயம் வெளுத்து
நிறை குடமாக
தட்டிக் கொடுத்து
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
உயர்ரக கைப்பேசியைக் குறைந்த விலைக்குத் தருவதாகக் கூறி அனைவரையும் ஏமாற்றிய சீலனைக் காவல் துறையினர் கைது செய்ததால், அவனோரு நயவஞ்சகன் என்பது ஊர் மக்களுக்குத் தெரிய வந்தது.
காதில் பூ வைத்தல்
தட்டிக் கொடுத்தல்
நிறை குடம்
கருணைக் கடல்
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
சாயம் வெளுத்தது
நிறை கூடம்
தட்டிக் கொடுத்தல்
கருணைக் கடல்
பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
சாயம் வெளுத்தது
கருணைக் கடல்
தட்டிக் கொடுத்தல்
நிறை குடம்
சரியான மரபுத்தொடரையும் பொருளையும் தேர்ந்தெடுக.
கருணைக் கடல் – உண்மை வெளிப்படுதல்
நிறை குடம் – அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்.
தட்டிக் கொடுத்தல் – ஏமாற்றுதல்
சாயம் வெளுத்தது – பரிவு மிக்கவர்
உரையாடலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
மீனா : அம்மா...அம்மா விடுமுறை நாளில் எனக்கு சிறப்பு வகுப்பு உள்ளது.
அம்மா : பூக்கடையில், உன் தோழி விமலாவின் தாயாரைச் சந்தித்தேன். அவர் பள்ளி விடுமுறையில் தம் மகளுக்குச் சிறப்பு வகுப்பு இல்லாததால், வெளியூருக்குச் சுற்றுலா செல்வதாகக் கூறினாரே!
சாயம் வெளுத்தது
கருணைக் கடல்
காதில் பூ வைத்தல்
நிறை குடம்
கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடருக்குப் பொருள் விளங்க வாக்கியம் அமைத்திடுக.
கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடருக்குப் பொருள் விளங்க வாக்கியம் அமைத்திடுக.
