Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

nmms-7 ss marathiyar

Total questions: 179

Worksheet time: 2hrs 51mins

Name
Class
Date
1.

1. சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

a)

1. தாதாஜி கொண்டதேவ்  

b)

2. கவிகலாஷ்         

c)

3. ஜிஜாபாய்       

d)

4. ராம்தாஸ்

2.

2. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

a)

1. தேஷ்முக்   

b)

2. பேஷ்வா   

c)

  3. பண்டிட்ராவ்    

d)

4. பட்டீல்

3.

3. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

a)

1. ஷாகு  

b)

2. அனாஜித் தத்தா

c)

3. தாதாஜி கொண்டதேவ்

d)

4. கவி கலாஷ்

4.

4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பக் கட்டத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தது---------

a)

1. பீரங்கி படை

b)

2. குதிரை படை     

c)

3. காலால் படை   

d)

4. யானை படை

5.

5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கு எதிராக போரை அறிவித்தவர்----------------------

a)

1. பாலாஜி விஸ்வநாத்   

b)

  2. பாஜிராவ்

c)

3. பாலாஜி பாஜிராவ்  

d)

4. ஷாகு

6.

6. மகாராஷ்டிராவில் பரவிய---------------- இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும், இணக்கமும் ஏற்பட வாய்ப்பளித்தது.

a)

1. பக்தி     

b)

2. மொழி       

c)

3. இலக்கிய       

d)

4. விழிப்புணர்வு

7.

7. பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர்----------

a)

1. பட்டீல்   

b)

   2. தேஷ்முக்      

c)

3. காமவிஸ்தார்  

d)

4. தளபதிகள்

8.

8. மராத்தியர்களின் குறுகிய கால பேரரசு 1761 இல்------------------- என்ற இடத்தில் நடைபெற்ற போரில் முடிந்தது.

a)

1. புனே

b)

2. பானிபட்

c)

3. சத்தாரா       

d)

4. பீகார்

9.

9. அஷ்டப்பிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்--------------------------

a)

1. சமந்த்- துபிர்

b)

2. வாக்கிய நாவிஸ்    

c)

3. நியாயதீஸ்

d)

4. பேஷ்வா

10.

10. சிவாஜியை தொடர்ந்து---------------- உடனான சச்சரவிற்கு பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.

a)

1.  தாதாஜி கொண்டதேவ்  

b)

2. அனாஜி தத்தோ       

c)

      3. கவிகலாஷ்  

d)

4. ஜிஜபாய்

11.

11. பொருத்துக

1. ஷாஜி போன்ஸ்லே                             -             சிவாஜியின் தாய் (A)

2. சாம்பாஜி                                                   -             பிஜபூர் தளபதி (B)

3. ஷாகு                                                         -             சிவாஜியின் தந்தை (C)

4. ஜிஜாபாய்                                                 -             சிவாஜியின் மகன் (D)

5. அப்சல் கான்                                           -             சிவாஜியின் பேரன் (E)

a)

1). (1-B)(2-C)(3-A)(4-D)(5-E)    

b)

  2). (1-C)(2-D)(3-E)(4-A)(5-B)

c)

3). (1-B)(2-C)(3-E)(4-D)(5-A)     

d)

4). (1-C)(2-B)(3-A)(4-D)(5-E)

12.

12. சரியான கூற்றை தேர்ந்தெடு.

1. மலை மற்றும் பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.

2. பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்க பாடல்கள் பாடப்பட்டன.

3. சிவாஜி புலந்தர்  கோட்டையை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.

4. அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு 10 முறை படையெடுத்தார்.

a)

1). 1,2,3 சரி   

b)

 2). 4 சரி 

c)

3) 2,3,4 சரி      

d)

4) 1,3,4 சரி

13.

13. கூற்று

மராத்திய போர் வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு தொலைவில் உள்ள கோட்டைகளிலும் நகரங்களிலும் வாழ்ந்தனர்.

காரணம்

மராத்திய வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் போர்க்களத்தில் இருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காக சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

a)

1. கூற்று காரணம் சரி    

b)

2. கூற்று காரணம் தவறு

c)

3. கூற்று சரி காரணம்தவறு      

d)

4. கூற்று தவறு காரணம் சரி

14.

14. சரியான கூற்றை தேர்ந்தெடு

1. செய்தி பரிமாற்ற கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்கு பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில்,ஆவணங்களை துல்லியமாக பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.

2. இரண்டாம் பானிபட் போரில் பீரங்கி படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

a)

1). 1 சரி  2 தவறு   

b)

2). 1 தவறு  2  சரி

c)

   3). 1  சரி

d)

4).  2  சரி

15.

15. பொருந்தாததை கண்டுபிடிக்க.

a)

1. ரகுஜி     

b)

  2. ஷாஜி போன்ஸ்லே

c)

3. சிவாஜி  

d)

4. சாம்பாஜி

16.

16. தவறான இணையை கண்டுபிடி.

a)

1.கெய்க்வாட்- பரோடா

b)

2. பேஷ்வா - நாக்பூர்

c)

3. ஹோல்கர் - இந்தூர்

d)

4. சிந்தியா- குவாலியர்

17.

17. கால வரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்து.

1. சிவாஜி தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசர் ஆனார்.

2 .பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.

3. சிவாஜியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது சிவாஜி படையெடுத்தார்.

4. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்

a)

1). 1,3,4,2   

b)

2). 2,3,4,1    

c)

3). 1,4,3,2  

d)

4). 3,1,4,2

18.

18. மராத்தியர்களின் கொரில்லா போர் முறை என்பது--------------

a)

1. மறைந்திருந்து தாக்குவது 

b)

2. பீரங்கி கொண்டு தாக்குவது

c)

3. குழுவாக தாக்குவது       

d)

4. நேருக்கு நேர் தாக்குவது

19.

19. சிவாஜி தனக்கு விசுவாசம் ஆக உதவி செய்ய -------------அணியை உருவாக்கினார்.

a)

1. வீரர்கள்    

b)

  2. மலைவாழ் மக்கள்  

c)

3. பக்தி இயக்கத் தலைவர்கள்

d)

4. பேஷ்வாக்கள்

20.

20. மராத்தியர்கள் வசூலித்த வரிகள்---------

a)

1. சுங்க வரி  

b)

2. சௌத்  ,சர்தேஷ்முகி          

c)

3.ஜிசியா        

d)

4. தேஷ்முகி

21.

21. மராத்திய அரசர்களின் பாதுகாப்பாகவும் அந்நிய படையெடுப்புகளிடமிருந்து பாதுகாப்பதாகவும்----------------------- இருந்தது.

a)

1. காடுகள், ஆறுகள்        

b)

2. மலைகள், நீர்வீழ்ச்சிகள்  

c)

3. காடுகள், மலைகள்  

d)

4. குன்றுகள் பாறைகள்

22.

22. மராத்தியர்களின் கொரில்லா போர் முறைக்கு பக்கபலமாக இருந்தது-----------------------

a)

1. படைத் தளபதியின் திறமை          

b)

2. படை வீரர்களின் திறமை

c)

3. அதிக வீரர்கள் கொண்ட படை           

d)

4. புவியியல் கூறுகள்

23.

23. பொருந்தாததை கண்டுபிடிக்க.

a)

1. ஏக்நாத்

b)

2. கபீர்தாசர்       

c)

3. ராம்தாஸ்   

d)

4. துக்காரம்

24.

24. சிவாஜி பிறந்த ஆண்டு----------------

a)

1. கிபி 1625  

b)

2. கிபி 1626

c)

3. கிபி 1627  

d)

4. கிபி 1628

25.

25. சிவாஜியின் தாயார் பெயர்----------------

a)

1.  தாதாஜி கொண்டதேவ்

b)

2. ஜிஜிபாய்   

c)

3. மெகருன்னிசா      

d)

4. அனாஜி

26.

26. சிவாஜியின் குரு------------------

a)

1. தாதாஜி கொண்டதேவ்

b)

2. அனாஜி தத்தோ

c)

  3. துக்காரம்     

d)

4. ராம்தாஸ்

27.

27. சிவாஜி கைப்பற்றிய முதல் கோட்டை எது?

a)

1. கோண்டுவானா

b)

2. ரெய்கார்       

c)

3. சிவனேரி  

d)

4. தோரணம்

28.

28. 1646 -இல் சிவாஜி கைப்பற்றிய கோட்டை------------

a)

1. கோண்டுவானா

b)

2. ரெய்கார்  

c)

3. தோர்னா    

d)

4. புரந்தர்

29.

29. சிவாஜி புனரமைத்த கோட்டை

a)

1. கோண்டுவானா  

b)

2. ரெய்கார்

c)

3. புரந்தர்     

d)

  4. தோர்னா

30.

30. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1. கோண்டுவானா

b)

2. ரெய்க்கார்

c)

3. கோல்கொண்டா

d)

4. புரந்தர்

31.

31. கூற்று

வீர சிவாஜி பீஜபூர் மீது தன் தந்தை இறப்பு வரை போர் தொடுக்கவில்லை.

காரணம்

பீஜ்பூர் சுல்தான் சிவாஜியின் தந்தையை சிறை வைத்திருக்கும் போது சிவாஜி இடம் பீஜ்பூர் மீதுபடையெடுக்கக்கூடாது என்ற உறுதிமொழியை பெற்ற பிறகு சிவாஜியின் தந்தையை விடுவித்தார்.

a)

1. கூற்றும் காரணமும் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை.

b)

2. கூற்றும் காரணமும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

c)

3. கூற்று சரி காரணம் தவறு.

d)

4. கூற்று தவறு காரணம் சரி.

32.

32. 1656-ல் சிவாஜி ஜாவலியை  யாரிடமிருந்து கைப்பற்றினார்?

a)

1. அப்சல் கான்

b)

2. சந்திரராவ் மோர்

c)

3. ஷெயிஸ்ட்கான்

d)

4. முகலாயர்கள்

33.

33. 1659-ல் பீஜப்பூரின் தளபதி --------------------------  சிவாஜி கொன்றார்.

a)

1. அப்சல் கான்

b)

2. சந்திரராவ் மோர்

c)

3. செயிஷ்டகான் 

d)

4. ஆலம்கான்

34.

34. சிவாஜியை ஒடுக்க ஒளரங்கசீப் அனுப்பிய ராஜ புத்திர தளபதி-------------------

a)

1. ராஜா மான்சிங்

b)

2. ராஜா ஜெய்சிங்

c)

3. ராஜா தோடர்மால்

d)

4. ராஜா விஜய்சிங்

35.

35. சிவாஜி யாரால் அவமானப்படுத்தப்பட்டார்?

a)

1. ஜஹாங்கீர்  

b)

2. ஒளரங்கசீப்    

c)

3. ராஜா ஜெய்சிங்

d)

4. ராஜா மான்சிங்

36.

36. ‘சத்ரபதி’ எனும் சொல்லின் பொருள்---------------

a)

1. குடை

b)

2. தலைவன்

c)

3. படைத்தலைவன்

d)

4. அரசன் / பேரரசன்

37.

37. சிவாஜியின் முடிசூட்டு விழா எந்த கோட்டையில் நடைபெற்றது?

a)

1. தோர்னா

b)

2. புரந்தர்     

c)

3. ரெய்க்கார்  

d)

4. பீஜப்பூர்

38.

38. சிவாஜி முடி சூட்டிக்கொண்ட ஆண்டு ---------------------

a)

1. கிபி 1761    

b)

2. கிபி 1672

c)

3. கிபி 1674      

d)

4. கிபி 1673

39.

39. சிவாஜி இறந்த ஆண்டு-----------------------

a)

1. கிபி 1761   

b)

2. கிபி 1672  

c)

  3. கிபி 1680          

d)

4. கிபி 1673

40.

40. பொருத்துக.

1. தேஷ்முக்          - கிராம தலைவர் (A)

2. பட்டீல்             - தலைமை தளபதி (B)

3. குல்கர்னி          - கிராம நிர்வாகம் (C)

4. மஜீம்தார்          - ஆவண காப்பாளர் (D)

5. சர் – இ- நெளபத்   - நிதி அமைச்சர் (E)

a)

1). (1-B)(2-C)(3-A)(4-D)(5-E)    

b)

2). (1-C)(2-A)(3-D)(4-E)(5-B)

c)

3). (1-B)(2-C)(3-E)(4-D)(5-A)     

d)

  4). (1-C)(2-B)(3-A)(4-D)(5-E)

41.

41. தவறான கூற்றை தேர்ந்தெடு.

1. சிவாஜியின் ராணுவத்தில் காலால் படையே முதுகெலும்பாக இருந்தது.

2. ஒவ்வொரு படை வீரனும் சிவாஜியால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டான்.

3. ஒவ்வொரு படை வீரனும் ஏற்கனவே பணியாற்றும் ஒரு படை வீரனின்

  பிணையில் பணியமர்த்தப்பட்டான்.

4. பணி நிறைவு பெற்ற மிகவும் போற்றப்பட்ட படைத் தளபதிகளுக்கு கோட்டையை பாதுகாக்கும்

  பொறுப்பு வழங்கப்பட்டது

a)

1).  1, 2 தவறு

b)

2).  3, 4 தவறு

c)

3).  1, 3 தவறு   

d)

4. ஏதுமில்லை

42.

42. பொருத்துக.

1. பேஷ்வா - நிதியமைச்சர் (A)

2. அமத்தியா-பிரதம அமைச்சர் (B)

3. சச்சீவ் -வெளியுறவு துறை அமைச்சர் (C)

4. சுமந்த் / துபிர் - தலைமை நீதிபதி (D)

5. நியாயதீஸ் – செயலர் (E)

a)

1). (1-B)(2-C)(3-A)(4-D)(5-E)              

b)

  2). (1-C)(2-A)(3-D)(4-E)(5-B)

c)

3). (1-B)(2-A)(3-E)(4-C)(5-D) 

d)

4). (1-C)(2-B)(3-A)(4-D)(5-E)

43.

43. சிவாஜியை கைது செய்து ஆக்ராவிற்கு அழைத்துச் சென்றபோது தனது மகன் சாம்பாஜியை

   யாருடைய பொறுப்பில் எங்கு விட்டு சென்றார்?

a)

1. புனே – கவிக்கலாஷ்   

b)

2. வாரணாசி - கவிகலாஷ்

c)

3. சத்தாரா - தாதாஜி கொண்டதேவ்

d)

4. இந்தூர் - ஜீஜபாய்

44.

44. சாம்பாஜியின் வழிகாட்டி அல்லது குரு----------------

a)

1.  தாதாஜி கொண்டதேவ்

b)

2. ஜீஜிபாய்

c)

3. கவிகலாஷ்

d)

4. தேஷ்முக்

45.

45. கீழ்க்கண்டவர்களில் யார் சிவாஜியின் பேரன் ஆவார்?

a)

1. சாம்பாஜி

b)

2. ஷாகு   

c)

3. பாலாஜி விஸ்வநாத்

d)

4. பாஜிராவ்

46.

46. ஷாகு  என்பதன் பொருள் என்ன?

a)

1. உலகத்தை கைப்பற்றியவன்   

b)

2. உலகத்தை காப்பவன்

c)

3. நேர்மையானவன்

d)

4. நம்பிக்கையானவன்

47.

47. ஷாகு என்னும் பெயர் சூட்டியவர் யார்---------------------

a)

1.  இளவரசர் அக்பர்

b)

2. ஒளரங்கசீப்   

c)

3. தாதாஜி கொண்டதேவ்  

d)

4. கவிகலாஷ்

48.

48. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக ஆவதற்கு முன்பு எப்பணி செய்து இருந்தார் ?

a)

1. தேஷ்முக்

b)

2. பட்டீல் 

c)

3. வருவாய்த்துறை அலுவலர்  

d)

4. சேனாதிபதி

49.

49. ஷாகு மகாராஜாவை அனைவரும் அரசன் அல்லது தக்காணத்தின் தலைவன் என அங்கீகாரம் அளிக்க காரணமானவர் யார்?

a)

1. பாலாஜி விஸ்வநாத்

b)

2. பாஜிராவ்

c)

3. கவிகலாஷ்  

d)

4.பாலாஜி பாஜிராவ்

50.

50. நிதி நிர்வாக செயல்பாட்டின் மையமாக பாஜிராவ் மாற்றிய இடம் ---------------

a)

1. நாக்பூர்

b)

2. இந்தூர்       

c)

3. புனே     

d)

4. சத்தாரா

51.

51.மராத்தியரின் தலைநகரை சத்தாராவிலிருந்து புனேவிற்கு மாற்றியவர்-------------------

a)

1. பாலாஜி விஸ்வநாத்   

b)

2. பாஜிராவ்

c)

3. பாலாஜி பாஜிராவ்   

d)

4. ஷாகு

52.

52. மராத்திய வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் போர்க்களத்தில் இருந்து தங்கள் நிலங்களில் வேளாண்மை பணிக்காக அனுப்பும் முறை யாரால் ரத்து செய்யப்பட்டது?

a)

1. ஷாகு

b)

2.பாலாஜி பாஜிராவ்  

c)

3. பாலாஜி விஸ்வநாத் 

d)

4. பாஜிராவ்

53.

53. கொள்ளை அடிப்பதை நோக்கமாகக் கொண்ட மராத்திய படையின் படைத்தளபதி----------

a)

1. ரகுஜி பான்ஸ்லே  

b)

2. ரகுநாத ராவ்

c)

3. அனாஜி

d)

4. பாஜிராவ்

54.

54. பேஷ்வாக்களின் ஆட்சியில் வருவாய் துறை அதிகாரி என அழைக்கப்பட்டார்---------------

a)

1. சச்சீவ்

b)

2. பண்டிட் ராவ்     

c)

3. காம விஸ்தார்

d)

4. அமத்தியா

55.

55.சரியானவரிசையில் வரிசைப்படுத்துக

1. ஷாகு       2. ஷாஜி பான்ஸ்லே  3. சாம்பாஜி   4. சிவாஜி     5. பாலாஜி விஸ்வநாத்

a)

1).  3,4,2,1,5   

b)

2).  5,4,3,1,2       

c)

3).  1,4,3,2,5

d)

4).  2,4,3,1,5

56.

56. மூன்றாம் பானிபட் போரில் எப் பேரரசு அழிவுற்றது?

a)

1. முகலாயப் பேரரசு  

b)

2. மராத்திய பேரரசு

c)

3. அக்பர் பேரரசு

d)

4. சுல்தான்களின் பேரரசு

57.

57. மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?  

a)

1. கிபி 1761    

b)

2. கிபி 1674   

c)

3. கிபி 1680   

d)

4. கிபி 1671

58.

58. மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானிய அரசர் அகமதுசா ஆப்தாலி வெற்றி பெற காரணமாக அமைந்தது.

a)

1. சிறந்த குதிரை படை    

b)

2. திறமையான படைத்தளபதிகள்

c)

3. திறமையான அரசர்      

d)

4. இடம் விட்டு இடம் நகரும் பீரங்கிகள்

59.

59. மராத்திய மக்கள் சிவாஜி அரசுக்கு செலுத்தும் பாதுகாப்பு கட்டணம்----------------- ஆகும்.

a)

1. சர்தேஷ்முகி

b)

2. சௌத்

c)

3. சுங்க வரி  

d)

4. ஜிஸியா வரி

60.

60. சிவாஜி பின்பற்றிய போர் முறை--------------

a)

1. நவீன போர் முறை    

b)

2. நேருக்கு நேர் தாக்கும் முறை

c)

3. கொரில்லா போர் முறை       

d)

4. குதிரை வியூக ஒரு முறை

61.

1. கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?

a)

1. வானொலி

b)

2. தொலைக்காட்சி   

c)

3. செய்தித்தாள்    

d)

4. இணையதளம்

62.

2. கீழ்க்கண்டவற்றுள் ஒலிபரப்பு ஊடகம் என்பது----------------

a)

1. இதழ்கள்  

b)

2. அறிக்கைகள்

c)

  3. நாளிதழ்கள்   

d)

4. வானொலி

63.

3. உலகினை மக்களின் அருகாமையில்  கொண்டு வந்த ஊடகம்------------

a)

1. தட்டச்சு 

b)

2. தொலைபேசி

c)

3. தொலைக்காட்சி   

d)

4. இவற்றில் ஏதுமில்லை

64.

4. வெகுஜன ஊடகம் என்பது -------------------

a)

1. வானொலி

b)

2. தொலைக்காட்சி

c)

3. 1, 2     

d)

4. இவற்றில் ஏதுமில்லை

65.

5. ஊடகம்  ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்?

a)

1. நிறைய பணம் ஈட்ட     

b)

  2. நிறுவனத்தை ஊக்கப்படுத்த

c)

3. நடுநிலையான தகவலை தருவதற்கு   

d)

4. இவற்றில் ஏதுமில்லை

66.

6. உலகத்தினை சிறியதாகவும் மிக அருகாமையிலும் கொண்டு வந்தது------------

a)

1. கல்வி

b)

2. வேளாண்மை  

c)

3. ஊடகம்  

d)

4. விமானம்

67.

7. ஒவ்வொரு தனி மனிதனும்---------------------------------- ஆகும்.

a)

1. ஊடகத்தின் வெளிப்பாடு

b)

2. மக்களாட்சியின் உறுப்பினர்

c)

3. இந்நாட்டின் மன்னர்        

d)

4. இவற்றில் ஏதுமில்லை

68.

8. அச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

a)

1. மார்க்கோனி    

b)

2. ஜோகன்ஸ் குட்டன் பெர்க்  

c)

3.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

d)

4. தாமஸ் ஆல்வா எடிசன்

69.

9. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு------------------ ஆகும்.

a)

1. ஊடகம்   

b)

2. கல்வி

c)

3. குணம்

d)

4. நெறிமுறை

70.

10. இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம்----------------------

a)

1. அனைத்திந்திய வானொலி

b)

2. ஆகாச வாணி

c)

3. பண்பலை வானொலி    

d)

 4. ஏதுமில்லை

71.

11. பொருத்துக.

1. குறு அளவிலான ஊடகம்                  -   கூகுள் இணையம் (a)

2. சமூக ஊடகம்                                       -   சுவரொட்டிகள் (b)

3. அச்சு ஊடகம்                                         -  கருத்தரங்கு (c)

4. இணைய ஊடகம்                                 -  திரைப்படங்கள் (d)

5. ஒளிபரப்பு ஊடகம்                                 - முகநூல் (e)

 

a)

1). (1-b) (2-d) (3-a) (4-e) (5-c)

b)

2). (1-c) (2-e) (3-b) (4-a) (5-d)

c)

3). (1-b) (2-c) (3-a) (4-e) (5-d)  

d)

4). (1-a) (2-c) (3-b) (4-e) (5-d)

72.

12. கூற்று- அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.

       காரணம் - பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும் கல்வி அறிவு ஊட்டுவதிலும்

ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.

a)

1. கூற்று சரி காரணம் தவறு.

b)

2. கூற்று தவறு  காரணம் சரி.

c)

3. கூற்று சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

d)

4. கூற்று சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் இல்லை.

73.

13. தவறான ஒன்றை கண்டுபிடிக்க.

a)

1. செய்தித்தாள்கள்

b)

2. நாளிதழ்கள்

c)

3. அறிக்கைகள்  

d)

4. கீச்சகம்

74.

14. கீழ்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.

1. ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்.

2. ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனம் ஆகும்.

3. ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

4. ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது.

a)

1). 1,2,,சரி  

b)

2). 1,2,3,சரி

c)

3). 1,2,4,சரி

d)

4). 2,3,4,சரி

75.

15. மக்களின் பல்கலைக்கழகம் எனப்படுவது-----------------

a)

1. ஊடகம்

b)

2. அச்சு ஊடகம்

c)

3. இணைய ஊடகம்   

d)

4. சமூக ஊடகம்

76.

16. சமய ஊடகங்கள் என்பது-----------------------

a)

1. தெருக்கூத்து   

b)

2. புராணக் கதைகள்

c)

3. 1,2   

d)

4. முகநூல்

77.

17. கீழ்க்கண்டவற்றுள் எது ஊடகத்தைக் குறிக்கும் சொல் ஆகும்?

a)

1.மீடியம்    

b)

2. மீடியா   

c)

3. இணையம்

d)

4. கீச்சகம்

78.

18. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1. கடிதங்கள்

b)

2. அலைபேசி

c)

  3. தொலைபேசி

d)

4. செய்தித்தாள்

79.

19. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1. செய்தித்தாள்    

b)

2.வானொலி

c)

3. தொலைக்காட்சி 

d)

4. அலைபேசி

80.

20. அச்சி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ---------------------

a)

1). 1401 

b)

2). 1450   

c)

3). 1453 

d)

4). 1454

81.

21. மக்களாட்சியின் நான்காவது தூண் எது-?

a)

1. செய்தித்தாள்

b)

2. மக்கள்

c)

3. தொலைக்காட்சி 

d)

4. ஊடகம்

82.

22. கூற்றை ஆராய்க.

கூற்று-1  ஊடகம் சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது.

கூற்று-2 ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகம் என்பது தகவல்கள் மற்றும் அறிவை வழங்குவதில் மிக முக்கிய சாதனமாக விளங்குகிறது.

 1

a)

 1). இரண்டு கூற்றும் சரி

b)

2). இரண்டு கூற்றும் தவறு

c)

3).  1- சரி 2- தவறு 

d)

4).  1- தவறு  2- சரி

83.

 23. பொருத்துக.

1. குறுகிய தொடர்பு ஊடகம்         - இணையதளங்கள் , வலை பதிவுகள் (a)

2. தொலைத்தொடர்பு ஊடகம்               - செய்தித்தாள் , புத்தகங்கள் (b)

3. அச்சு ஊடகம்                     – வானொலி, தொலைக்காட்சி (c)

4. இணைய ஊடகம்                 - கீச்சகம் ,முகநூல் (d)

5. சமூக ஊடகம்                    – அஞ்சல், கருத்தரங்கு  (e)

a)

1). (1-e) (2-c) (3-b) (4-a) (5-d)  

b)

2). (1-c) (2-e) (3-b) (4-a) (5-d)

c)

3). (1-b) (2-c) (3-a) (4-e) (5-d)        

d)

4). (1-a) (2-c) (3-b) (4-e) (5-d)

84.

24. கீழ்க்கண்டவற்றுள் எது ஊடகத்தின் பயன் அல்ல?

1. சமூக மாற்றத்திற்கான கருவி

2. தேசிய பன்னாட்டு செய்திகளை அறியலாம்.

3. திரைப்படங்கள் சமூகத்தை சீரழிக்கின்றன.

4. அரசின் பலம் பலவீனத்தை வெளிக்கொண்டு வருகிறது.

5. மக்களிடையே அறியாமையை வளர்க்கிறது.

a)

1).  3,5   

b)

2).  4,5    

c)

3).  3,4   

d)

4).  1,2

85.

25. அகில இந்திய வானொலி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு--------------

a)

1). 1936 

b)

2). 1956  

c)

3). 1937     

d)

4). 1939

86.

26. அகில இந்திய வானொலி ஆகாச வாணி என்ற பெயரில் ஒலிபரப்பை தொடங்கிய ஆண்டு--------------

a)

1). 1936     

b)

2). 1956  

c)

3). 1937 

d)

4). 1939

87.

27.சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

1. ஊடகம் சமகாலத்தின் சக்தி வாய்ந்த ஒரு கருவியாகும்.

2. வெகுஜன ஊடகம் அன்றாட நிகழ்வுகளை பற்றி நேர்மையாகவும் நுட்பமாகவும் நடுநிலையாகவும்   தருகிறது.

3. அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சாதனமாக உள்ளது.  

4.மக்கள் சமூகத்தில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஊடகங்கள் பயன்படுகிறது.

a)

1. அனைத்தும் சரி   

b)

2. 3,4,- சரி    

c)

 3. 1, 2 - சரி   

d)

4. 3 - சரி

88.

28. கீழ்க்கண்டவற்றுள் ஊடகத்தின் பண்புகள் அல்லாதது எது?

a)

1. நேர்மை

b)

2. துல்லியம்

c)

3. நடுவுநிலை

d)

4. தரமற்ற மொழிநடை

89.

29. ஜனநாயகத்தின் முதுகெலும்பு எனப்படுவது-------------------

a)

1. தேர்தல்   

b)

2. அரசியல் கட்சிகள்

c)

3. ஊடகம் 

d)

4. சட்டமன்றம்

90.

30. சரியான கூற்றை தேர்ந்தெடு.

1. ஊடகம் அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் மக்களிடம் எடுத்துச் செல்கிறது.

2. ஊடகம் மக்களுக்கு அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது.

3. ஊடகம் மக்களுக்கும் அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது.

 

a)

1. அனைத்தும் சரி

b)

2. 1,4,- சரி  

c)

 3. 1, 2 - சரி      

d)

4. 3 - சரி

91.

31.பொருத்துக.

1.  டெமோஸ்        -  ட்விட்டர் (a)

2.  கிரடோஸ்        - ஊடகம் (b)

3.  பட வரி           -  மக்கள் (c)

4.  கீச்சகம்           -  அதிகாரம் (d)

5.  மீடியா            -  இன்ஸ்டாகிராம் (e)

a)

1). (1-e) (2-c) (3-b) (4-a) (5-d)   

b)

2). (1-c) (2-d) (3-e) (4-a) (5-b)

c)

3). (1-b) (2-c) (3-a) (4-e) (5-d)      

d)

4). (1-a) (2-c) (3-b) (4-e) (5-d)

92.

32. நில வரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு ----------------------என அழைக்கப்படுகிறது.

a)

1. புவியியல்- ஜியோகிராபி

b)

2. கார்டோ கிராஃப்ட்

c)

3. பிசியோகிராபி

d)

4. பௌதீக புவியியல்

93.

33. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும்---------------- திசைகள் ஆகும்.

a)

1. முக்கியமான

b)

2. புவியியல்    

c)

3.அச்ச ரேகை

d)

4. கோணங்கள்

94.

34. கலாச்சார நில வரைபடங்கள்------------------------- அமைப்புகளை காட்டுகின்றன.

a)

1.இயற்கையான  

b)

2. மனிதனால் உருவாக்கப்பட்ட

c)

3. செயற்கையான   

d)

4. சுற்றுச்சூழல்

95.

35. புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக அமைவது-------------

a)

1. புவி மாதிரி  

b)

2. நில வரைபடங்கள்

c)

3. திசை காட்டும் கருவி

d)

4. வரைபடத்தாள்

96.

36. ‘கடாஷ்ட்ரல்’ நில வரைபடங்கள் --------------------- என அழைக்கப்படுகின்றன.

a)

1. தல வரைபடம்

b)

2. நிலஅளவை வரைபடங்கள்

c)

3. சுவர்வரைபடங்கள்

d)

4. நிலவரைபட நூல்

97.

37. சிறிய அளவை நில வரைபடங்கள் -------------------மற்றும் -------------------போன்ற அதிக பரப்பளவு இடங்களை காட்ட உதவுகின்றன.

a)

1. கண்டங்கள் , நாடுகள் 

b)

2. மலைகள், காடுகள்

c)

3. மாநிலம் ,மாவட்டம்    

d)

4. கடல்கள், துறைமுகங்கள்

98.

38. பொருத்துக.

1. மேல் வலது மூலை              - அடர்த்தி மற்றும் வளர்ச்சி (a)

2. குறிப்பு                            - மாவட்டம் அல்லது நகரம் (b)

3. பெரிய அளவை நில வரைபடம்   - இயற்கை நில அமைப்பு (c)

4. இயற்கை அமைப்பு வரைபடம்    - வண்ணங்கள் மற்றும் சின்னங்கள் (d)

5. மக்கள் தொகை வரைபடம்       - N எழுத்து (e)

 

a)

1). (1-e) (2-d) (3-b) (4-c) (5-a)

b)

2). (1-c) (2-d) (3-e) (4-a) (5-b)

c)

3). (1-b) (2-c) (3-a) (4-e) (5-d)

d)

4). (1-a) (2-c) (3-b) (4-e) (5-d)

99.

39. கூற்றை ஆராய்க.

1. நில வரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நில வரைபடங்கள் கொண்ட தொகுதியாகும்.

2. நில வரைபட நூலில் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.

3. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

a)

1). 1,2,3- சரி  

b)

2).1- சரி   

c)

3). 1,2- சரி

d)

4). 2,3- சரி

100.

40. கூற்று -1 உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமான மாதிரி.

   கூற்று -2 இதனை கையாள்வதற்கும் எடுத்துச் செல்வதற்கும் எளிது சுருட்டியோ அல்லது

      மடித்தோ கையில் எடுத்துச் செல்வது எளிது.

a)

1). கூற்று -1  சரி 2-  தவறு   

b)

2). கூற்று -1 தவறு சரி 2-  சரி

c)

3). 1,2 – சரி   

d)

4). 1,2 – தவறு

101.

41. நில வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை தெளிவாக புரிந்து கொள்ள உதவுவது---------

a)

1. தலைப்பு

b)

2. அளவை

c)

3. திசைகள்

d)

4. குறிப்பு

102.

42. சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்களை தருவது-------------

a)

1. நில வரைபடம்

b)

2. தல வரைபடம்

c)

3. சுவர்வரைபடம்

d)

4. இயற்கை அமைப்பு வரைபடம்

103.

43. அதிக பரப்பளவு கொண்ட சிறிய அளவை படங்கள்-----------------

a)

1.  நில அளவை படம்

b)

2. தல வரைபடம்

c)

3. சுவர் வரைபடம்

d)

4. இயற்கை அமைப்பு வரைபடம்

104.

44. மலைகள் ,சமவெளிகள், பீடபூமிகள் ஆகியவற்றின் பரவலை அறியும் வரைபடம்----------------

a)

1. இயற்கை அமைப்பு நில வரைபடம்  

b)

2. கருத்து நில வரைபடம்

c)

3. புவியியல் நில வரைபடம்           

d)

4. சுவர் வரைபடம்

105.

45. நில வரைபடம் தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்டவை ---------

a)

1. விலங்குகளின் தோல்

b)

2. செப்பேடுகள்  

c)

3.காகிதம்

d)

4.களிமண்

106.

46. பல வகையான நில வரைபடங்கள் தொகுத்து உருவாக்கப்பட்ட நூல்---------

a)

1. அட்லஸ் 

b)

2. நில அளவை படங்கள்  

c)

3. புவியியல் நூல்

d)

 4. புவி மாதிரி உருண்டை

107.

47. வரைபடத்தின் மேல் பக்கம் எத்திசையை குறிக்கிறது?

a)

1. வடக்கு

b)

2. தெற்கு

c)

3. கிழக்கு

d)

4. மேற்கு

108.

48. நீர்நிலைகளை எந்த வண்ணத்தில் வரைபடத்தில் குறிக்கப்பட்டு இருக்கும் ?

a)

1. சிவப்பு  

b)

2. நீலம்

c)

3. பச்சை

d)

4. கருப்பு

109.

49. குறுகிய பரப்பளவிலான இடங்களை குறித்து அதிக விவரங்களை தரும் வரைபடம்.---------

a)

1. அட்லஸ்

b)

2. பெரிய அளவை வரைபடம்

c)

3.  சிறிய அளவை வரைபடம்

d)

4. சுவர் வரைபடம்

110.

50. நாடுகள் குறித்து போதுமான விவரங்களை அளிக்கக்கூடிய வரைபடங்களை கொண்ட நூல்----------

a)

1. பள்ளி நில வரைபட நூல்

b)

2. மேம்படுத்தப்பட்ட நில வரைபட நூல்

c)

3. பிராந்திய நில வரைபட நூல்

d)

4. தேசிய நில வரைபட நூல்

111.

51. கண்டங்களின் சிறிய பகுதிகளின் அதிக விவரங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய நில வரைபட நூல்--------------

a)

1. பள்ளி நில வரைபட நூல்    

b)

  2. மேம்படுத்தப்பட்ட நில வரைபட நூல்

c)

3. பிராந்திய நில வரைபட நூல்

d)

4. தேசிய நில வரைபட நூல்

112.

52. சிறிய பரப்பளவிற்கான அதிக அளவு விபரங்களை உள்ளடக்கிய வரைபடங்களை கொண்டது------

a)

1. பள்ளி நில வரைபட நூல்

b)

2. மேம்படுத்தப்பட்ட நில வரைபட நூல்

c)

3. பிராந்திய நில வரைபட நூல்  

d)

4. தேசிய நில வரைபட நூல்

113.

53. நாடுகள் குறித்து அதிக விவரங்களைக் கொண்ட வரைபடங்களைக் கொண்ட நூல்-----------

a)

1. பள்ளி நில வரைபட நூல்   

b)

2. மேம்படுத்தப்பட்ட நில வரைபட நூல்

c)

3. பிராந்திய நில வரைபட நூல்

d)

4. தேசிய நில வரைபட நூல்

114.

54. பொருத்துக.

1. நிலத்தோற்ற நிலவரைபடம்       – பாறைகள், தாதுக்கள் (a)

2. புவிஅமைப்பு நிலவரைபடம்       –  சமவெளி, மலைகள் (b)

3. காலநிலை நிலவரைபடம்         -  மண்வகை ,பண்புகள் (c)

4. மண்வகை நில வரைபடம்        -  வெப்பநிலை பரவல் ஈரப்பதம் (d)

a)

1). (1-a) (2-d) (3-b) (4-c)   

b)

2). (1-c) (2-d) (3-b) (4-a)

c)

3). (1-b) (2-a) (3-d) (4-c)  

d)

4). (1-a) (2-c) (3-b) (4-d)

115.

55. பொருத்துக.

1.அரசியல் நிலவரைபடம்            - ஒரு குறிப்பிட்ட அம்சத்தை தெரிவிப்பது (a)

2. மக்கள் தொகை வரைபடம்        – சாலைகள், இருப்பு பாதை (b)

3. பொருளாதார நில வரைபடம்     - மாவட்ட /மாநில நிர்வாக பிரிவு (c)

4. போக்குவரத்து நில வரைபடம்    - மக்கள் தொகை பரவல் அடர்த்தி (d)

5. கருத்து நில வரைபடம்           - பயிர் வகை, தாதுக்கள் (e)

a)

1). (1-e) (2-d) (3-b) (4-c) (5-a)       

b)

2). (1-c) (2-d) (3-e) (4-b) (5-a)

c)

3). (1-b) (2-c) (3-a) (4-e) (5-d)   

d)

4). (1-a) (2-c) (3-b) (4-e) (5-d)

116.

56.  நில வரைபடங்களில் காடுகளைக் குறிக்கும் வண்ணம்---------------

a)

1. சிவப்பு  

b)

2. பழுப்பு

c)

3. பச்சை

d)

4. நீலம்

117.

57. சரியான கூற்றை ஆராய்க.

1. நில வரைபடங்கள் நில அமைப்புகளின் விவரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.

2. இது ராணுவத்தின் திட்டமிடலில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

3. விமானங்கள் கப்பல்கள் சரியான இடத்திற்கு பயணிக்க நில வரைபடங்கள் உதவுகின்றன.

4. வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.

a)

1). அனைத்தும் சரி

b)

2). 3,4,- சரி

c)

 3). 1, 2 - சரி   

d)

4). 3 – சரி

118.

4.59. நில வரைபடத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அதே

இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம்------------------ எனப்படும்.

-

a)

1.  திசை   

b)

2. குறிப்பு

c)

3. அளவை  

d)

  4. தலைப்பு

-

119.

60. பொருத்துக.

1 .வெள்ளை    -  குடியிருப்பு சாலை (a)

2. பச்சை       -  பனி (b)

3. நீலம்        -  மலை குன்று (c)

4. பழுப்பு       -  காடுகள் (d)

5. சிவப்பு       -  பெருங்கடல் (d)

a)

1). (1-e) (2-d) (3-b) (4-c) (5-a)

b)

2). (1-c) (2-a) (3-b) (4-e) (5-d)

c)

3). (1-b) (2-d) (3-e) (4-c) (5-a)    

d)

4). (1-a) (2-c) (3-b) (4-e) (5-d)

120.

1. பொருள் சேதம் உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கை காரணி--------------------

a)

1.  இடர்  

b)

2.  பேரிடர்  

c)

3.  சேதம்  

d)

4.  மட்டுப்படுத்துதல்

121.

2. பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்------------------------

a)

1. தயார் நிலை

b)

2. துலங்கல்

c)

3. மட்டுப்படுத்துதல்  

d)

4. மீட்பு நிலை

122.

3. ஒரு திடீர் நகர்வு அல்லது புவி மேலோட்டின் திடீர் நடுக்கம் ------------------என அழைக்கப்படுகிறது

a)

1. சுனாமி

b)

2. புவி அதிர்ச்சி

c)

3. நெருப்பு

d)

4. சூறாவளி

123.

4. கனமழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல்-------------------

a)

1. வெள்ளம்  

b)

2. சூறாவளி

c)

3. வறட்சி   

d)

4. பருவ காலங்கள்

124.

5. ------------------------ வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினை தவிர்க்கலாம்.

a)

1. ரேஷன் அட்டை  

b)

2. ஓட்டுனர் உரிமம் 

c)

3. அனுமதி   

d)

4. ஆவணங்கள்

125.

6. தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண்---------------

a)

1).  100

b)

2).  101     

c)

  3).102 

d)

4). 108

126.

7. இயற்கை மற்றும் மனிதனால் உருவாகக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை---------------------------- பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.

a)

1. பாதுகாப்பது      

b)

2. விழிப்புணர்வு ஏற்படுத்துவது

c)

   3. விளம்பரப்படுத்துவது

d)

4. ஏதுமில்லை

127.

8. மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும், அலைகளை ஏற்படுத்தும், நீரின் இடப்பெயர்வு ----------------------எனப்படும்.

a)

1. சூறாவளி

b)

2. சுனாமி  

c)

3. நிலநடுக்கம்  

d)

4. கடல் அரிப்பு

128.

9. மனிதனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு----------

a)

1. இடர்  

b)

2. பேரிடர்

c)

3. வறட்சி    

d)

4. மழை

129.

10. பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் -------------------என அழைக்கப்படுகிறது.

a)

1. மீட்பு நிலை

b)

2. தயார் நிலை

c)

3. துலங்கள்  

d)

4. பேரிடர் மேலாண்மை

130.

11. பொருத்துக.

1. புவி அதிர்ச்சி              - ராட்சத அலைகள் (A)

2. சூறாவளி                  - பிளவு (B)

3. சுனாமி                    - சமமற்ற மழை (C)

4. தொழிற்சாலை விபத்து    - புயலின் கண் (D)

5. வறட்சி                    – கவனமின்மை (E)

a)

1). (1-B) (2-E) (3-D) (4-A) (5-C)   

b)

2). (1-B) (2-C) (3-D) (4-E) (5-A)

c)

3). (1-B) (2-D) (3-A) (4-E) (5-C) 

d)

4). (1-B) (2-A) (3-D) (4-E) (5-C)

131.

12. கூற்று -  நவீன உலகத்தில் அனு தினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

   காரணம் - மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடர் மற்றும்

பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

a)

1. கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

b)

2.  கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் தவறு

132.

13. கூற்று - திடீர் நகர்வு அல்லது பூமியின் மேலோட்டில்ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி எனப்படும்.    

   காரணம் - டெக்கானிக் தட்டுகளின் நகர்வு, ஜன நெருக்கடி, பிளவு போன்றவை

      புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன.

a)

1. கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.

b)

2. கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் தவறு

133.

14. பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்.

a)

1.  குண்டுவெடிப்பு   

b)

2. எரிமலை வெடிப்பு  

c)

3. நில அதிர்வு

d)

4. வறட்சி

134.

15. . புயலின் கண்------------------ ஆகும்.  

a)

1. கடலோரப் பகுதி

b)

2. வெற்றிடம்

c)

3. உயர் அழுத்த மண்டலம்

d)

4. தாழ்வழுத்த மண்டலம்

135.

16. மனித வாழ்வில் பெரிய அளவில் சொத்துக்கள் மற்றும் மனித உயிர்கள் பரவலாக பாதிக்கப்படும்போது, அவை ------------------எனப்படுகின்றன.

a)

1. விபத்து  

b)

2. பேரழிவுகள் 

c)

3. புவி அதிர்ச்சி

d)

4. போர்கள்

136.

17. பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1. கூட்ட நெரிசல்

b)

 2. தீவிரவாதம்

c)

3. தொழிற்சாலை விபத்து

d)

4. சுனாமி

137.

18. பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA)------------------- அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

a)

1. பாதுகாப்பு

b)

2. உள்துறை

c)

3. வெளியுறவுத்துறை

d)

4. ராணுவம்

138.

19. போபால் விஷவாயு கசிவு ஏற்பட்ட ஆண்டு---------------------

a)

1). 1984 

b)

2). 1986   

c)

3). 1994

d)

4). 1987

139.

20. ஆற்றின் பாதையை கூட மாற்றி அமைப்பது--------------

a)

1. தீ விபத்து

b)

2. வெள்ளம்

c)

3. நிலநடுக்கம்

d)

4. புயல்

140.

21. தீ விபத்து ஏற்படும்போது நாம் செய்ய வேண்டியவை ---------------------

a)

1.  மேசையின் கீழ் தரையில் மண்டியிடுதல்

b)

2.  வேகமாக ஓடுதல்

c)

3.  தரையில் படுத்து உருளுதல்

d)

4.  டார்ச் லைட் பயன்படுத்துதல்

141.

22. சாலை விபத்து ஏற்பட காரணம்----------------------------

a)

1. வாகனங்களை சரியாக பராமரித்தல்

b)

2. குறைவான வேகத்துடன் வாகனத்தை இயக்குதல்

c)

3. ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டுதல்

d)

4. தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுதல்

142.

23. பேரிடரின் தாக்கம் என்பது -----------------------   பொருத்தது.  

a)

1. மலையளவு     

b)

2. கால அளவு   

c)

3. ஆண்டு மாதம்

d)

4. பகல் இரவு

143.

24. SDRF என்பது -----------------  போலீஸ் தனிப்பட ஆகும்

a)

1). 50    

b)

2).60

c)

3).70  

d)

4). 80

144.

25. பொருத்துக.

1. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை – NIDM (A)

2. விண்வெளித் துறை – NDRF (B)

3. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் -  Dos (C)

4. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் – DST (D)

5. தேசிய பேரிடர் மறுமொழி படை – NDMA (E)

a)

1). (1-B) (2-E) (3-D) (4-A) (5-C)   

b)

2). (1-B) (2-C) (3-D) (4-E) (5-A)

c)

3). (1-B) (2-D) (3-A) (4-E) (5-C)   

d)

4). (1-D) (2-C) (3-E) (4-A) (5-B)

145.

26.பொருத்துக

1. தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை             - இந்திய பெருங்கடல் (A)

2. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்      - SDRF (B)

3. மாநில பேரிடர் மேலாண்மை திட்டம்            - 2005 (C)

4. பேரழிவு மேலாண்மை சட்டம்                   - DDMA (D)

5. சுனாமி புயல் எச்சரிக்கை மையங்கள்             - 2018 – 2030 (E)

a)

1). (1-B) (2-D) (3-E) (4-C) (5-A)      

b)

2). (1-B) (2-C) (3-D) (4-E) (5-A)

c)

3). (1-B) (2-D) (3-A) (4-E) (5-C) 

d)

4). (1-D) (2-C) (3-E) (4-A) (5-B)

146.

27. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் சுனாமி, புயல், எச்சரிக்கை மையங்கள் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

a)

1. புதுடெல்லி

b)

2. சென்னை

c)

3. இந்திய பெருங்கடல்

d)

4. புனே

147.

28. பொருத்துக

1. நிலநடுக்கம்         - மின்சார இணைப்புகள் அனைத்தும் துண்டித்தல் (A)

2. வெள்ளம்          -  தரையில் அமர்ந்து இ றுகப் பற்றுதல் (B)

3. தீ விபத்து           -  நடை மேடைகளின் ஓரம் அமரக்கூடாது (C)

4. ரயில் நிலையம்     - ஓட்டுநர் உரிமம் பெற்று வண்டியை இயக்குதல் (D)

5. சாலை விபத்து     - தரையில் படுத்து உருளுதல் (E)

a)

1). (1-B) (2-D) (3-E) (4-C) (5-A)   

b)

2). (1-B) (2-A) (3-E) (4-C) (5-D)

c)

3). (1-B) (2-D) (3-A) (4-E) (5-C)  

d)

4). (1-D) (2-C) (3-E) (4-A) (5-B)

148.

29. கூற்றைய ஆராய்க.

1. ரயில் தண்டவாளத்தை கடக்காமல் நடைமேடைகளை பயன்படுத்த வேண்டும்.

2. நிலநடுக்கத்தின்போது மேசையின் கீழ் செல்ல வேண்டும்.

3. வெள்ள பாதிப்பின் போது அமைதியாக உறங்க வேண்டும்.

4. தீ விபத்தின் போது அவசர சேவை 100 தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

a)

1). 1,2 – சரி

b)

2). 2,3 – சரி  

c)

3). 1,3 – சரி   

d)

4). 1,4 - சரி

149.

30. பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?  

a)

1. மோசமான பேறுகால ஆரோக்கியம்

b)

2. ஆணுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை

c)

3. எச்ஐவி எய்ட்ஸ் பரவுதல்

d)

4. பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்.

150.

31. பாலின சமத்துவம் என்பது எது தொடர்பான பிரச்சனை?

a)

1. பெண் குழந்தைகள் பெண்களின் பிரச்சனை.

b)

2. அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்.

c)

3. மூன்றாம் உலக நாடுகள் மட்டும்

d)

4. வளர்ந்த நாடுகள் மட்டும்

151.

32. பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?

a)

1. பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

b)

2. பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்.

c)

3. மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை

d)

4. மேலே உள்ள அனைத்தும்

152.

33. வளரும் நாடுகளில் சிறுவர்களை விட பெண் குழந்தைகள் இடைநிலை கல்வியை தவற விடுவது ஏன்?

a)

1. பள்ளிக்கல்வி கட்டணம் உயர்வு காரணமாக சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்.

b)

2. பெண் குழந்தைகள் வீட்டு வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

c)

3. குழந்தை திருமணம் அவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது.

d)

4.  மேலே உள்ள அனைத்தும்.

153.

34 பொருத்துக.

1. சிரிமாவோ பண்டார நாயக -இங்கிலாந்து

2. வாலண்டினா தெரோஷ்கோவா - ஜப்பான்

3. ஜன்கோ தபே - இலங்கை

4. சார்லோட் கூப்பர் - சோவியத் ஒன்றியம்

a)

1). (1-B) (2-D) (3-A) (4-C)   

b)

2). (1-B) (2-A) (3-D) (4-C)

c)

3). (1-C) (2-D) (3-B) (4-A)  

d)

 4). (1-C) (2-D) (3-A) (4-B)

154.

35.கூற்றைய ஆராய்க.

கூற்று -  இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.

காரணம் - சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

a)

1. கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.

b)

2. கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் தவறு

155.

36. கூற்றைய ஆராய்க.

கூற்று - பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியைக் கடந்து நடைபெறுகிறது.

காரணம் - வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை, வரதட்சனை கொடுமை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவற்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது.

a)

1. கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.

b)

2. கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் தவறு

156.

37 மக்களவை முதல் பெண் சபாநாயகர்------------------------

a)

1.  மீரா குமார்

b)

2. அருந்ததி ராய்

c)

3. இந்திரா காந்தி

d)

4. சாவித்திரிபா புலே

157.

38. புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் -----------------------

a)

1. சுஷ்மா சுவராஜ்

b)

2. கிரண்பேடி

c)

3. அருந்ததிராய்

d)

4. நிர்மலா சீதாராமன்

158.

39 முதல் பெண் காவல்துறை இயக்குனர் (DGP)-----------------------ஆவார்.

a)

1. காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யா

b)

2. ஜன்கோ தபே

c)

3. வாலண்டினா தெரேஷ்கோவா  

d)

4. நிர்மலா சீதாராமன்

159.

40. மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண்----------------------

a)

1. விஜயலட்சுமி பண்டிட்

b)

2. சுஷ்மா சுவராஜ்  

c)

3. நிர்மலா சீதாராமன்

d)

4. சுச்சித கிருபாளினி

160.

41. --------------ஒருவருக்கு அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த

 முடிவுகளை எடுக்க உதவுகிறது.

a)

1. செல்வம்

b)

2. சொத்து

c)

3. கல்வி  

d)

4. வேலை

161.

42. புனேவில் SNDT பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்------------------

a)

1. மகர்ஷிகார்வே 

b)

2. ஜோதிராவ் புலே

c)

3. சாவித்திரிபா புலே

d)

4. எவரும் இல்லை

162.

43. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்-------------

a)

1. ஜன்கோ தபே 

b)

2. பச்சேந்திரி பால்

c)

3. கிரண்பேடி 

d)

4. காஞ்சன்சௌத்ரி பட்டாச்சாரியா

163.

44. தவறான ஒன்றைத் தேர்ந்தெடு.

a)

1. இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் சுச்சித கிருபாளினி.

b)

2. புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் அருந்ததி ராய்

c)

3. முதல் மகளிர் பல்கலைக்கழகம் புனேவில் தொடங்கப்பட்டது.

d)

4.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் சோனியா காந்தி.

164.

 45. பொருந்தாததை தேர்ந்தெடு

a)

1. சுஷ்மா சுவராஜ்

b)

2. கிரண்பேடி

c)

3. அருந்ததிராய்

d)

4. ஜோதிராவ் புலே

165.

46. பெண்களுக்கான முதல் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு--------

a)

1). 1948   

b)

2). 1849

c)

3). 1848

d)

4). 1748

166.

47. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்-----------------

a)

1. ஜோதிராவ் புலே

b)

2. சாவித்திரிபா புலே  

c)

3. விஜயலட்சுமி பண்டிட்

d)

4. அன்னை தெரசா

167.

48. பொருத்துக

1. முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர்      - மீரா குமார் (A)

2. முதல் பெண் சபாநாயகர்                        - மீரா சாகிப் பாத்திமா பீவி (B)

3. முதல் பெண் ஆளுநர்                           - பிரதீபா பட்டீல் (C)

4. முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி             - சரோஜினி நாயுடு (D)

5. முதல் பெண் குடியரசு தலைவர்                 - நிர்மலா சீதாராமன் (E)

a)

1). (1-E) (2-A) (3-D) (4-B) (5-C)   

b)

2). (1-B) (2-A) (3-E) (4-C) (5-D)

c)

3). (1-B) (2-D) (3-A) (4-E) (5-C)    

d)

4). (1-D) (2-C) (3-E) (4-A) (5-B)

168.

49. பொருத்துக.

1. சுஷ்மா சுவராஜ்           - அமைதிக்கான நோபல் பரிசு (A)

2. விஜயலட்சுமி பண்டிட்     - முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் (B)

3. இந்திரா காந்தி             - முதல் பெண் காவல்துறை அதிகாரி (C)

4. கிரண்பேடி                - முதல் பெண் அமைச்சர் (D)

5. அன்னை தெரேசா         - முதல் பெண் பிரதமர் (E)

a)

1). (1-E) (2-A) (3-D) (4-B) (5-C)  

b)

  2). (1-B) (2-A) (3-E) (4-C) (5-D)

c)

3). (1-B) (2-D) (3-E) (4-C) (5-A)     

d)

4). (1-D) (2-C) (3-E) (4-A) (5-B)

169.

50. இவ்வுலகில், ‘தாங்கி நிற்கும் வல்லமை கொண்டவர்கள் பெண்களே’’ என்று கூறியவர்-----------

a)

1. மகர்ஷிகார்வே

b)

2. பராக் ஒபாமா

c)

3. டொனால்ட் ட்ரம்ப்

d)

4. மகாத்மா காந்திஜி

170.

51. 40 ஆண்டுகளுக்கு முன்பே ‘அனைவருக்கும் கல்வி’ என்ற உரிமையை வலியுறுத்திய ஆணையம்---------

a)

1. மனிதவள மேம்பாட்டு ஆணையம்

b)

2. மனித உரிமைகள் ஆணையம்

c)

3. கல்வி ஆணையம்       

d)

4. எதுவும் இல்லை

171.

52. உலக அளவில் உள்ள இளையோரில் கல்வி அறிவு பெறாத பெண்களின் சதவீதம்---------------

a)

1.  63 சதவீதம்

b)

2. 65 சதவீதம்  

c)

3. 67 சதவீதம்   

d)

4. 64 சதவீதம்

172.

53. பெண்களுக்கான எல்லா தடைகளையும் உடைக்க வல்லது---------------

a)

1. பாலின சமத்துவம்    

b)

2. பெண்களுக்கு வேலை வாய்ப்பு

c)

3. குடிமை கல்வி    

d)

4. அரசியல் பிரதிநிதித்துவம்

173.

54. ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிப்பது கல்வி ஒன்றே எனக் கூறிய நிறுவனம்-----

a)

1. யுனிசெப்

b)

2. யுனெஸ்கோ

c)

3. மனித உரிமைகள் ஆணையம்  

d)

4. ஐக்கிய நாட்டு சபை

174.

55. ‘’பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநிதியாகும்’’. என்று கூறியவர் -------------

a)

1. மகாத்மா காந்திஜி

b)

  2. ராஜாஜி

c)

3. சுப்பிரமணிய பாரதி  

d)

4. பால கங்காதர திலகர்

175.

56. கூற்று - பின் தங்கிய நாடுகளில் மூன்றில் ஒரு பெண் குழந்தைக்கு 18 வயதிற்குள் திருமணம்

     நடந்து முடிந்து விடுகிறது.

  காரணம் -  உலக அளவில் 63 சதவீதம் பெண் குழந்தைகள் கல்வி அறிவு பெறாமல் உள்ளனர்.

a)

1. கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.

b)

2. கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் தவறு

176.

57. கூற்றை ஆராய்க.

1. பெண்களை வலிமையாக்குவது மட்டுமின்றி அவர்களிடம் ஏற்கனவே உள்ள வலிமையை

   உலகம் உணரும் விதமாக மாற்றுவதே பெண்ணியம் ஆகும்.

2.  ஒரு ஆணுக்குக்கான கல்வி என்பது அவருக்கும் மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண்ணுக்கு வழங்கும் கல்வியானது ஒரு தலைமுறைக்கான கல்வியாகும்.

a)

1.  இரண்டும் சரி

b)

2). 2 – சரி

c)

3). 3 – சரி 

d)

4.  இரண்டும் தவறு

177.

58.  2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பெண்களின் எழுத்தறிவு சதவீதம்---------------

a)

1.    82.14 சதவீதம்  

b)

2.   65.46 சதவீதம் 

c)

3.   53.67 சதவீதம்     

d)

4.  75.26 சதவீதம்

178.

59. இந்தியாவில் பெண் கல்வியை செயல் வடிவமாக்கியவர்----------------------

a)

1. ஜோதிராவ் புலே

b)

2. சாவித்திரிபா புலே

c)

3. கிரண்பேடி

d)

4. சுஷ்மா சுவராஜ்

179.

60. கீழ்க்கண்டவற்றில் சுற்றுலாவின் நேர்மறை தாக்கம் எது?

a)

1. நில சீரழிவு       

b)

2. நீர் வளங்கள் சீரழிவு

c)

3. காற்று மற்றும் ஒலி மாசு      

d)

4. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு