wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MT&IM QNS

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நடுவர் போட்டியின் விதிமுறைகளைகக் கூறி முடிப்பதற்குள் _______________ மாறன் இடையிடையே கேள்விகளைக் கேட்டது அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.

a)

அவசரக்குடுக்கையான

b)

ஓட்டைவாயனான

2.

குகைக்குள் சிக்கி பல நாள்கள் உணவின்றி இருந்த ஆடவரை மீட்டபோது அவர் _______________ காணப்பட்டார்.

a)

ஒட்டி உலர்ந்து

b)

வாடி வதங்கி

3.

விமலா தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை _______________ என்று செய்து வந்ததால் மேலாளர் அவளுக்கு எந்த முக்கிய பொறுப்பையும் கொடுக்கவில்லை.

a)

ஏனோ தானோ

b)

கனவோ  நனவோ

4.

குடும்பத்தினர் தங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை _______________ பேசினாலொழியக் குடும்பப்பிணைப்பு ஏற்படாது.

a)

மனந்திறந்து

b)

தலையிட்டு

5.

நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நொறுக்குத்தீனிகளை அதிகம் உண்ணாமல் _______________ பழகிக்கொள்ள வேண்டும். 


a)

வாயைக் கட்ட

b)

கழித்துக் கட்ட

6.

தாய் மொழியின் _______________ உணர்ந்து அது தொடர்ந்து வாழும் மொழியாக திகழ்வதற்கு இளைஞர்கள் தம் பங்கை ஆற்ற வேண்டும்.

a)

அருமை பெருமையை

b)

உயர்வு தாழ்வை

7.

பல சவால்களுக்கிடையே தன் படிப்பில் _______________ இருந்த வளவன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தான்.

a)

கண்ணும் கருத்துமாக

b)

ஆணித்தரமாக

8.

இளமைக்காலத்தில் பணத்தை _______________ ஆடம்பரமாக வாழ்ந்ததால் ராகவன் முதுமைக்காலத்தில் வறுமையில் வாடினார்.

a)

அள்ளியிறைத்து

b)

தட்டிப் பறித்து

9.

_______________ வேலை செய்தும் தான் முதலாளியிடம் நற்பெயரைப் பெற இயலாததை எண்ணி ரேகா வருந்தினாள்.

a)

ஓய்வு ஒழிச்சலின்றி

b)

பம்பரமாய் சுழன்று

10.

நாம் நினைத்த செயல்கள் எல்லாம் _______________ நமக்கு சரியான திட்டமிடலும் அயராத உழைப்பும் தேவை.

a)

கைகூட

b)

கை கொடுக்க)

11.

மாணவர்களை _______________ அவர்களது திறமைகள் வெளிப்பட உதவுவது ஆசிரியர்களின் கடமைகளில் ஒன்றாகும்.

a)

தட்டிக் கொடுத்து

b)

கை கொடுத்து

12.

நன்கு ஆராய்ந்து உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது வீண் சந்தேகத்திற்கு _______________ தவிர்க்க வேண்டும்.

a)

இடங்கொடுப்பதை

b)

செவி சாய்ப்பதை

13.

 _______________ தெரியாதவர்களிடம் நாம் நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

a)

ஊரும் பேரும்

b)

அக்கம் பக்கம்

14.

பெற்றோர் வீட்டின் _______________ சரியாக திட்டமிட்டால் குடும்பத் தேவைகளைச் சமாளிக்க இயலும்.

a)

வரவு செலவை

b)

அருமை பெருமையை

15.

வாழ்வில் வெற்றி பெற விரும்பும் ஒருவர் _______________ நேரத்தைச் செலவிடாமல் தம் குறிக்கோளை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும்.

a)

வெட்டிப் பேச்சில்

b)

கண்மூடித்தனமாக

16.

நாம் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் அதனால் விளையக்கூடிய _______________ ஆராய வேண்டும்.

a)

நன்மை தீமைகளை

b)

இன்ப துன்பத்தை

17.

தங்களுக்கு நேரத்தோடு சம்பளம் கொடுக்கப்படாததால் கோபம் அடைந்த தொழிலாளர்கள் தங்கள் முதலாளியை _______________.

a)

தட்டிக் கேட்டனர்

b)

கை கழுவினர்

18.

தனக்குக் கொடுக்கப்படும் பணி சவால்மிக்கதாக இருந்தாலும் அதனை _______________ திறம்படச் செய்யும் பாலனைப் பலரும் விரும்பினர்.

a)

தலைமேற்கொண்டு

b)

இனிக்கப் பேசி

19.

நிருபரான விமலா சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை _______________ எழுதிய விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

a)

ஒளிவுமறைவின்றி

b)

கண்மூடித்தனமாக

20.

மாறன் தன் மேலதிகாரியிடமிருந்து நற்பெயரைப் பெறுவதற்காக அவர் கூறியதற்கு எல்லாம் _______________ மற்ற ஊழியர்களின் வெறுப்புக்கு ஆளானான்.

a)

ஒத்துப் பாடியதால்

b)

செவிசாய்த்ததால்