WorksheetsSejarah Topik 1
Total questions: 10
Worksheet time: 5mins
வரலாறு என்றால் என்ன?
A) எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகள்
B) கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வுகள்
C) கற்பனையாக உருவாக்கப்பட்ட கதைகள்
D) தற்கால செய்திகள்
"வரலாறு என்பது மனிதர்களின் செயல்பாடுகளையும் அவர்கள் அவ்வாறு செயல்பட்டதற்கான காரணங்களையும் விளக்கும் கதைகளாகும்" - என்று கூறியவர் யார்?
A) இப்னு கல்தூன் (Ibn Khaldun)
B) இ.எச்.கார் (E.H. Carr)
C) ஹெரோடோட்டீஸ் (Herodotus)
D) பேராசிரியர் கூ கேய் கிம் (Khoo Kay Kim)
பின்வருவனவற்றில் எது முதன்மை மூலம் (Primary Source) ஆகும்?
A) பாடநூல் (Textbook)
B) நாளிதழ் (Newspaper)
C) புதைபடிவம் (Fossil)
D) சஞ்சிகை (Magazine)
இரண்டாம் மூலம் (Secondary Source) என்பது ____________.
A) அசல் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எழுத்துப்படிவம்
B) மாற்றியமைக்கப்படாத அசல் வடிவம்
C) அகழ்வாராய்ச்சி மூலம் கிடைப்பது
D) நேர்காணல் மூலம் கிடைப்பது
10 ஆண்டுகளைக் குறிக்கும் கால அளவு எது?
A) நூற்றாண்டு (Century)
B) பத்தாண்டு (Decade)
C) ஆயிரமாண்டு(Millennium)
D) சகாப்தம் (Era)
வாய்மொழி முறையில் (Oral Method) தகவல் தருபவரை எவ்வாறு அழைப்பர்?
A) அகழ்வாராய்ச்சியாளர் (Archaeologist)
B) வரலாற்று ஆசிரியர் (History Teacher)
C) எழுத்தாளர் (Writer)
D) மூலநபர் (Orang Sumber)
கி.மு (BC) என்பதன் பொருள் என்ன?
A) கிறிஸ்துவுக்குப் பின்
B) கிறிஸ்துவுக்கு முன்
C) கால வரிசை
D) வரலாற்றுக்கு முன்
அகழ்வாராய்ச்சி முறை (Excavation Method) எதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது?
A) நேர்காணல் செய்தல்
B) புத்தகம் படித்தல்
C) தோண்டித் தேடுதல்
D) படம் வரைதல்
ஒரு வரலாற்று நிகழ்வுக்கும் மற்றொரு நிகழ்வுக்கும் இடையே __________ உண்டு.
. A) காரணமும் விளைவும் (Cause and Effect)
B) வெற்றியும் தோல்வியும்
C) கதையும் கவிதையும்
D) உண்மையும் பொய்யும்
வரலாற்றைக் கற்பதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மை என்ன?
A) அதிக பணம் சம்பாதிக்கலாம்
B) நாட்டுப்பற்றை வளர்க்கலாம்
C) புதிய கதைகளை உருவாக்கலாம்
D) எதிர்காலத்தைக் கணிக்கலாம்
