NEW
Font size
Worksheetsஒலிவேறுபாடுகள் (P6)2
Total questions: 20
Worksheet time: 20mins
என் பெரியப்பா வெளிநாட்டில் வாழ்கிறார். அவர் அங்கே ஒரு விஞ்ஞானியாக __________ புரிகிறார்.
பனி
பணி
திரு. கதிரேசன் ஓர் அழகான ஓவியத்தை வாங்கினார். அவர் அதை மாட்டுவதற்குச் சுவரில் ஓர் _____________ அடித்தார்.
ஆனி
ஆணி
அந்தக் காட்டுக்கு யாரோ தீவைத்து விட்டு ஓடிவிட்டனர். அதனால் காடு தீப்பற்றி ________________.
எரிந்தது
எறிந்தது
ரவியும் பாலனும் கடைக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் விளையாட அழகான ________________ வாங்கினர்.
கோலிகளை
கோழிகளை
அத்தை இருண்ட அறைக்குள் போனார். மறு __________ அவர் தடுக்கிக் கீழே வழிந்தார்
கனம்
கணம்
இந்தியாவின் ஒரு பகுதியில் பழங்காலத்துக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் __________ எழுத்துகள் தமிழ் எழுத்துகள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பொரிக்கப்பட்ட
பொறிக்கப்பட்ட
நீண்ட தூரம் ஓடிய ரகுவின் முகத்தில் வியர்வை ____________ தொடங்கியது. அதை அவன் தனது துண்டால் துடைத்தான்.
வலிய
வழிய
சந்தியா தன் பணப்பையை தேடிக்கொண்டிருந்தாள். அது அறையின் _________________ கிடப்பதை அவள் தாயார் பார்த்தார்.
மூலையில்
மூளையில்
மதிய வேளையில் வெகு நேரம் நடந்ததால் முதியவருக்குத் தாகம் எடுத்தது. அவர் உடனே நீர் அருந்தித் தன் தாகத்தை ____________ கொண்டார்.
தனித்து
தணித்து
என் அண்ணனின் திருமணம் _________________ மாதத்தில் நடைபெறவுள்ளது. நாங்கள் அனைவரும் மிக ஆவலோடு அந்நாளை எதிர்பார்த்து இருக்கிறோம்.
ஆனி
ஆணி
இன்று காலையிலிருந்து வானம் _____________ காணப்பட்டது. மதிய வேளையில், இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
கருத்து
கறுத்து
மருத்துவர் பால் அருந்துவதன் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார். ஒரு குழந்தையின் ___________ வளர்ச்சிக்குப் பால் அருந்துவது மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
மூலை
மூளை
“விமலன்! நீ முதலில் இந்த மிளகாயை ______________. பிறகு நீ அந்தத் தக்காளியை வெட்டலாம்,” என அம்மா சொன்னார்
அரை
அறை
என் பெரியப்பா ஒரு ___________ பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.
கலகத்தில்
கழகத்தில்
தீபாவளியன்று கோயிலில் __________ வழிபாடு
நடந்தது. பின் ஏழை எளியவர்க்கு உணவு
பரிமாறப்பட்டது.
இரை
இறை
சோமாலியா நாட்டில் பலரும் __________ உடையின்றி திண்டாடுகின்றனர். இதனால் பல அண்டை நாடுகள் அந்நாட்டு மக்களுக்கு உதவி வருகின்றன.
ஊன்
ஊண்
தேமல் ஒரு ______________ நோய். நாம் தினமும் நன்றாகக் குளித்து நம் உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தோல்
தோள்
அத்தை சமைத்த மீன் கறி சுவையாக இல்லை. அவர் அதில் ___________ சேர்க்காததே காரணமாகும்.
புலி
புளி
பள்ளி இடைவேளைக்குப் பிறகு எல்லா மாணவர்களும் மண்படத்தில் கூடினர். _______________ மாணவர்களும் அமைதியாக இருந்த பின்னரே, ஆசிரியர்கள் அவர்களை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றனர்.
அனைத்து
அணைத்து
அக்காலத்தில் இந்தியாவை மூவேந்தர்கள் ஆண்டு வந்தனர். அவர்களுக்குச் சிற்றரசர்கள் _______________ செலுத்தி வந்தனர்.
திரை
திறை
